குடியரசு தினம் என்பதன் விளக்கம் -

மணக்கால் அய்யம்பேட்டை | 1:52 PM | Best Blogger Tips
netaji subhash chandra bose க்கான பட முடிவு
குடியரசு தினம் என்பதன் விளக்கம் -

ஒவ்வொரு வருடமும், சனவரி திங்கள் 26 நாள் அன்று, இனிப்பு வழங்கி விடுமுறை அளிக்கப்படும். இவை மட்டுமே, என் அகவை 20 வரை... என் மனதில் நான் வைத்திருந்த குடியரசு தினத்தை பற்றிய பிம்பங்கள். ஒரு நாள், நூலகத்தில் சட்ட மாமேதை முனைவர் அம்பேத்கார் பற்றிய புத்தகத்தை படிக்க நேர்ந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்ற அவர் எடுத்த முயற்சிகள் மற்றும் சட்டம் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டங்கள் பற்பல அறிய நேர்ந்தது.
netaji subhash chandra bose க்கான பட முடிவு

1947 ஆண்டு, ஆகஸ்ட் திங்கள் 15 ம் நாள், ஆங்கிலேயர்கள் வெளியேறி.. நமக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், பல இனம், சாதிகள் மற்றும் மொழிகளால் வேறுபட்ட மக்கள் இருக்கும் இந்திய தேசம், மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் சரியாகப் பிரிக்கப்படாமலும் மற்றும் பெயரிடப்படாமலும் இருந்தது. இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல், இந்திய பிராந்தியங்களை மற்றும் அதன் எல்லைகளை ஒழுங்கு படுத்தும் முயற்சி மேற்கொண்டார். அதன் படி, இரண்டரை ஆண்டுகள் அயராது உழைத்து, 1950 இந்திய தேசத்தைப் பல மாநிலங்களாக பிரித்து பெயரிட்டார். இவ்வாறாக, இந்திய ராணுவம், தரைப்படை, கப்பல் படை மற்றும் விமான படை ஆகியவை உருவாக்கப்பட்டது. அவைகள், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் காவலுக்கு அமர்த்தப்பட்டன. பண்டைய இந்தியா, முறையே பாகிஸ்தான், வங்காளதேசம், அந்தமான் நிகோபார், லட்சத்தீவுகள் மற்றும் தற்போதைய இந்தியா என பிரிக்கப்பட்டது.
modi republic க்கான பட முடிவு
மக்களாட்சி செவ்வனே நடக்க... சட்டங்கள் அவசியமாக இருந்தது. அதனை இயற்றும் பொறுப்பை, சட்ட மாமேதை முனைவர் அம்பேத்கார் ஏற்றார். அவர் இரண்டு வருடம் கடினமாக உழைத்து, இந்திய ஆட்சிமைக்கான ஆவணமாக இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றாக புதிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 ஆண்டு கொண்டு வந்தார். இவர் இயற்றிய சட்டம், மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தியாவின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இவர் இயற்றிய சட்டங்கள் உதவியது.

modi republic க்கான பட முடிவு
முடிவில், இந்திய தேசியக் கொடி, தேசியச் சின்னம், தேசிய மொழி, தேசியப் பறவை, தேசியப் பண் மற்றும் தேசிய மலர் ஆகியவை அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்திய நாட்டின் முதல் குடிமகன் (சனாதிபதி) மற்றும் இந்திய பிரதமர் மக்களின் ஆதரவுடன் நியமிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கென, ஆளுனர் மற்றும் சட்டபேரவை தலைவர், முதலமைச்சர் உருவாக்கப்பட்டார்கள்.
modi republic க்கான பட முடிவு
இவ்வாறு இந்தியா, "உலக அரங்கில் தனக்கென ஒரு அடையாளத்தை அடைந்த நாளை நாம் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமாக" கொண்டாடுகிறோம்.


  Thanks for
1. மணிகண்டன் பாரதிதாசன்
2. தமிழ் கவிதை [Tamil Kavithai] ( FACEBOOK)