3 குளிர் கால சளியில் இருந்து தப்பிப்பது எப்படி?
குளிர் காலம் வந்து விட்டாலே சளித் தொல்லையும் வந்து விடும். சிலருக்கு
விடாத சளியும் இருமலும் படாத பாடு படுத்தும். என் அனுபவத்தில் இருந்து
சிலவற்றை பகிர்கிறேன்
சளியும் இருமலும் நுண்ணுயிரிகளாலே உண்டாகின்றன. இதனால் இந்த நுண்ணுயிரியை
சமாளிக்கும் வைட்டமின் சி உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு,
எலுமிச்சை. நெல்லிக்காய் எல்லாமே இயற்கையிலேயே வைட்டமின் சி உள்ளவை.
சுக்கு, மிளகு , திப்பிலி , சித்தரத்தை,ஆடா தொடை , தூது வளை போன்ற
மூலிகைகள் கொண்ட சுக்குக் காபி சாப்பிடலாம். சில சமயம் சளி நுரையீரலில்
புகுந்து கொண்டு அவஸ்தை படுத்தும். இதை வெளியேற்றும் ஆயுர்வேத இருமல் சாறு
கிடைக்கிறது. இதை வாங்கி கை வசம் வைத்துக் கொண்டு குடிக்கலாம். சளி தங்காது
வெளியேறி விடும்.
எல்லாவற்றிக்கும் மேல் கண்டங்கத்திரி லேகியம் என்று நாட்டு மருந்து
கடைகளில் கிடைக்கும் இது இருமல் சளி இரண்டுக்கும் கேட்கும்.. என்னடா
பழங்கால பாட்டி வைத்தியம் என்று நினைக்க வேண்டாம் .தாவரங்களில் தாவர வேதிகள்(phyto chemicals)
உள்ளன .அவைதான் குணம் அளிக்க காரணம்.
சில வருடங்கள் குளிர் மிகக் கடுமையாக இருக்கும். சில வருடம் அவ்வளவு குளிர்
இருக்காது. அதற்க்கு காரணம். கடல் அலை ஓட்டம் வெப்பமாக எல் நினாவாக(EL Nina)
இருந்தாலோ அல்லது குளிர்ச்சியாக லா நினாவாகவோ(La Nina) இருப்பதை பொறுத்து அதிக
குளிரின்மை , அதிக குளிர் உண்டாகிறது. இது ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு மாதிரி
குளிர் அமைவதற்கு நான் தேடிய போது கிடைத்த விடை
நீங்களும் இப்போது கொஞ்சம் தெரிந்து கொண்டு குளிர் இருமலை சமாளியுங்க!
சுருக்கமாகவும் சிறப்பாகவும் சொன்னால் ஏனோ பலருக்கு அதன் அருமை தெரிவதில்லை, நீங்களும் அப்படி இருந்துடாதீங்க
சுருக்கமாகவும் சிறப்பாகவும் சொன்னால் ஏனோ பலருக்கு அதன் அருமை தெரிவதில்லை, நீங்களும் அப்படி இருந்துடாதீங்க