கண் கொடை - யார் கண் தானம் செய்யலாம்?

மணக்கால் அய்யம்பேட்டை | 6:20 PM | Best Blogger Tips

கண் கொடை
 யார் கண் தானம் செய்யலாம்?

 ஆண், பெண் இரு பாலரும், அனைத்து வயதினரும் கண் தானம் செய்யலாம்.
 கண் கண்ணாடி அணிந்தவர்களும் செய்யலாம்.
 இரத்த அழுத்த நோயாளிகளும், நீரிழிவு நோயாளிகளும் கூட தானம் செய்யலாம்.
 ஆஸ்துமா போன்ற நோயினால் தாக்கப்பட்டவர்களும் கூட தானம் செய்யலாம்.
 உடலில் பிற உறுப்புகளில் புற்று நோய் வந்து இறந்தவர்களும் கூட தானம் செய்யலாம்.
 யார் கண் தானம் செய்யக் கூடாது?
 கொடிய தொற்று நோய்களான எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, காலரா, விசக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் மற்றும் வெறிநாய்க்கடி ஆகியவற்றால் இறந்தவர்களின் கண்களைத் தானம் செய்யக் கூடாது.
 பயன்கள்
 கண் தானம் செய்பவர்களினால் கருவிழி நோயினால் பார்வையிழந்த இரண்டு நபர்களுக்கு கருவிழி மாற்று சிகிச்சை அளிப்பதன் மூலம் பார்வை கிடைக்கிறது.
 சில பொதுவான தகவல்கள்

 ஒருவர் இறந்த பின்னரே அவரது கண்களைத் தானமாக அளிக்க முடியும்.
 ஒருவர் இறந்து 4 முதல் 6 மணி நேரத்திற்குள் அவரது கண்கள் அகற்றப்பட வேண்டும்.
 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே கண்களை அகற்ற வேண்டும்.
 கண் வங்கிக் குழுவினர் கண் தானம் செய்தவரின் வீட்டிற்கே வந்து கண்களைப் பெற்றுக் கொள்வார்கள்.
 இந்த கண்களைத் தானமாக பெறும் நிகழ்வு 20 முதல் 30 நிமிடங்களில் முடிந்து விடும்.
 திசு ஒற்றுமை மற்றும் தொற்று நோய் பரிசோதனைக்காக சிறிது இரத்தம் இறந்தவரின் உடலிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும்.
 இறந்த பின் கண்களை எடுப்பதால் முக மாறுதல்கள் ஏதும் ஏற்படாது.
 கண் தானம் செய்வதை மத சம்பிரதாயங்கள் எதுவும் எதிர்க்கவில்லை.
 கண் தானம் அளிப்பவரின் பெயரும், பெறுபவரின் பெயரும் ரகசியமாக வைக்கப்படும்.

 கண் தானம் செய்தவரது உறவினர்கள் செய்ய வேண்டியது

 கண் தானம் செய்த ஒருவர் இறந்த பின்பு அவரது உறவினர்கள் செய்ய வேண்டியவை

 மிக அருகிலுள்ள கண் வங்கிக்கு உடனடியாக தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ தகவல் அளிக்க வேண்டும்.
 இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் சரியான முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றைத் தெளிவாக அளிக்க வேண்டும். இத்தகவல் கண் வங்கிக் குழுவினர் மிக விரைவாக வந்து சேர உதவுகிறது.
 கண்களைத் தானமாகப் பெறுவதற்கு இறந்தவரின் கணவன், மனைவி, உடன் பிறந்தவர் அல்லது நெருங்கிய உறவினர் ஒருவரும் மற்ற சாட்சிகள் இருவரும் எழுத்து மூலம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
 கண் தானம் செயதவர் இறந்த உடனே கண் இமைகளை மூடி வைக்க வேண்டும்.
 இறந்தவர் உடல் இருக்குமிடத்தில் மின் விசிறியை நிறுத்தி வைக்க வேண்டும்.
 குளிர் சாதனப் பெட்டியில் உடல் வைக்கப்பட்டிருந்தால் அதனை இயக்கத்தில் வைக்கலாம்.
 தலையணையை வைத்து இறந்தவரது தலையைச் சற்று உயர்த்தி வைக்க வேண்டும். —...

கண்தானம் செய்ய விரும்பும் சென்னைவாசிகள் கீழ்க்கண்ட முகவரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.
 1. The address of the Govt. EyeHospital at Chennai is given below:
 Regional Institute of Ophthalmology and Government Ophthalmic Hospital, Montieth Road,
 Egmore, Chennai - 600 008.
 Director & Superintendent Phone No. 2855 4338
 2. Eye Bank, Sankara Nethralaya, New No. 41, Old No. 18,
 College Road, Chennai - 600 006. Phone No. 2828 1919
 இணையதளம் வழியாக கண்தானம் செய்ய விரும்பும் அன்பர்கள்கீழ்க்கண்ட இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
http://donateeyes.org/registration/registration-form.php

Via சுபா ஆனந்தி