1930 . மதராஸ், திருவல்லிக்கேணி... இளம் பிரம்மச்சாரிகளின் புகலிடம்...
அங்கு ஒரு ஹோட்டல் (கோபால கிருஷ்ண விலாஸ் ?) முதலாளி.... வைதீஸ்வர ஐயரின் கல்லாவில் எதிரில் ஒரு . ஒரு " இஞ்ச்"+ உறுதியான கனமான " பெரிய டேபிள் டாப்" பெல்ஜியம் கண்ணாடி டேபிள்...
அன்று , அதை சுற்றி சில இளைஞர்கள் அமர்ந்து கொண்டு ஏதோ தீவிரமாக விவாதித்தபடி தங்கள் காலை சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.
ஐயர் கவனித்தார்... அவர்கள் விவாதம்..... "தேக பலத்தால் சாதிக்க முடியாததை ஆத்ம பலத்தால் மட்டுமே சாதிக்க முடியாது... எது உண்மை பலம்
தேக பலமா? ஆத்ம பலமா? எது பெரிது?"
எல்லோரும் ஒருவாய் கொண்டால் போல் தேக பலத்துக்கு ஆதரவு.. ஆத்ம பலத்தால் எதையும் சாதிக்க முடியாது என அழிச்சாட்டியம்..
ஆனால்...!! அந்த சிவந்த.. , மெலிந்த, வட நாட்டு நீண்ட தலை முடி, தாடி யுடன் கூடிய இளைஞர் மட்டும்...
"ஆத்ம பலத்தால் எதையும் சாதிக்க முடியும் " என '. தமிழ், ஆங்கில, சமஸ்கிருதம் கலந்த மழலை மணிப்பிராளவத்தில். அமைதியாக..மெல்லிய, இனிய குரலில் ஆனால் ஆணித்தரமாக வாதித்தார்.
அவரை ஐயருக்கு தெரியும்,, அவர் மஹாராஷ்டிரா வை சேர்ந்தவர், பனாரஸ் ஹிந்து கல்லூரியில் MSc (Zoology) தங்க மெடல் பெற்று சென்னையில் மீன் வளத்துறையில் டாக்டர் பட்டம் பெற மதராஸ் வந்துள்ளார்... ,(பின்னர் BL பட்டமும்) °ஐயரின் வாடிக்கையாளர்.
ஐயருக்கும் உற்சாகம் வந்து விட்டது,... விவாதத்தில் கலந்து கொண்டு.. ,,
"வெறும் பேச்சு எதுக்கு யாராவது நிரூபிக்கலாமே." என்றார்....ஐயர்.
எப்படி நிரூபிப்பது???
அந்த கனமான பெல்ஜியம் கண்ணாடி "டேபிள் டாப்பை" ஒரே குத்தில் உடைக்க வேண்டும், .....
"உடல் பலம் பேசிய பார்ட்டிகள்" முழு பலத்தை பிரயோகித்து முயன்றனர் "ஊகும்" ஒரு கீறல் கூட விழவில்லை.. அவர்கள் கை உதறி ,அலறித் துடித்து பின் வாங்கியது தான் மிச்சம்,
ஆத்ம பல மராட்டிய இளைஞர் முறை அவர் நம்பிக்கையுடன் "உடைப்பேன், ஆளால் புது கண்ணாடி நான் தான் வாங்கித் தருவேன்..சரியா ஐயர் ஜி ? " என்றார் ....ஐயர் . ஒப்பினார்......
யாருக்கும் நம்பிக்கை இல்லை, இதை இந்த ஓமக்குச்சி, ஆளாவது டேபிள் டாப் உடைப்பதாவது? அதுவும் ஒரே குத்தில் எல்லோர் முகத்திலும் ஏளனம்.
இளைஞர் எழுந்து நின்று கையை உயர்த்தி முஷ்டியை மடக்கி , கண்ணை மூடி, தியானத்தில் இருப்பது போல் ஒரு முழு நிமிடம்...... தன் 'ஆத்ம பலம்!!!' எல்லாம் "முஷ்டியில்" தேக்குவது போல்...
அவர் முகத்தில் ஒரு அலாதி தேஜஸ்..அவர் கை மேலே உயர்ந்து பின் டேபிளை நோக்கி மின்னல் போல் பாய்ந்தது,..அடுத்த வினாடி !!!!
"எடுத்து கண்டார் இற்றது கேட்டார்' " என்பது போல் "படீல்" என ஒரு சப்தம் கனமான 'கண்ணாடி டேபிள் டாப்' ஜிலீர் என உடைந்தது, தரையில் சிதறியது
எல்லோரும் ஆச்சரியத்தில் ஹா ஹா என அலறினர் . வாய் பிளந்தனர்..இந்த வில் போல் மெலிந்த இளம் உடலில் இத்தனை (ஆத்ம) சக்தியா?
இளைஞ்ஞர் அமைதியாக எதுவுமே நடக்காதது போல் எழுந்து ஐயருக்கு கண்ணாடி டேபிளின் விலையை "நன்றி" என்று சொல்லி எண்ணிக் கொடுத்து விட்டு.. புன்னகைத்தார்....
அவர்.... குருஜி ஸ்ரீ. "மாதவ்ராவ் சதாசிவ்ராவ் கோல்வால்கர்". (குருஜீ பட்டம் அவர் கல்லூரியில் படிக்கும் போதே சக மாணவர்களால் வந்து விட்டது)
பிற்க் கால RSS தலைவர். குருஜி H.K.கோல்வால்கருக்கு பிறகு.
குருஜி, குருஜீ, குருஜீ என்று அவரை நெஞ்சார அழைத்துக்கொண்டு, லட்சோய, லட்சம் தொண்டர் கள் அவர் இட்ட பணிகளை வேத கட்டளைகளாக கருதி சிரமேற்க்கொண்டு ஈடேற்றிய காரணம் என்ன?
ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் எண்ணற்ற அடக்கு முறைகளுக்கு பின்னும் RSS, பீனிக்ஸ் பறவை போல் புது உத்வேகத்துடன் மறு மலர்ச்சி பெற்றது எனில்... அதற்க்கு காரணம் என்ன?
Secular.. என்று கூறிக்கொண்டவர்களும்.... , ஹிந்து சமய வளர்ச்சியில் ஒளிவு மறைவு இன்றி அதில் ஆழ ஈடுபட்டு இருந்த குருஜி க்கு ஒரு தனிப்பட்ட மரியாதை தந்திருந்தார்களே, அது எப்படி? எதனால்?
இதற்க்கு எல்லாம் விடை ஒன்றே ஒன்று தான், அது குருஜி யுடைய... ஆத்ம சக்தி,... ஆத்ம சுத்தி.. அருடைய ஒப்பற்ற பளிங்கு போன்ற தூய்மை உள்ளம்.
ஒருவர்... சுயநலத்திற்காக ஒரு கொள்கைளை பின் பற்றாமல், தன் சுய நலம் அனைத்தையும் ஒரு கொள்கைக் காக தியாகம், அற்ப்பணம் செய்து விட்டால்... அவரை உலகம் இரு கை கூப்பி வணங்கத் தான் செய்யும்.. அது தான் நடந்தது.
தன் கொள்கைகளுக்காக அந்தரங்க சுத்தியுடன் போராடிய மா வீரர் குருஜி....
அவருக்கு என்று, வீடோ, வாசலோ, மனைவி, குழந்தை, குடும்பமோ கிடையாது... தொண்டர் கள் தான் அவர் குடும்பம், உற்றார்,சுற்றார். குழந்தைகள் எல்லாமே..அது தான் அவர் உலகம்.
பல பல ஆண்டுகள் ரயில் பெட்டிகளே அவர் வீடு.. அவற்றில் தேசம் முழுவதும்., 65 முறை சுற்றி சுற்றித் திரிந்து தன் கொள்கைளை மெய் வருத்தம் பாராது, கண் துஞ்சாது பிரச்சாரம் செய்த தீரர், கண்ணன் சொன்ன கர்ம யோகி அவர்.
அவரது புத்தகம்
'குருஜி; பார்வையும் - லட்சியமும்'
'BUNCH OF THOUGHTS'
தொண்டர்களுக்கு 'பகவத் கீதை '
அவரது ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை அன்பின் கட்டுப்பட்ட லட்சக்கணக்கான தொண்டர் கள் அவரிடம் மாறாத பாசம் கொண்டிருந்ததில் வியப்பு உண்டோ?
அவர் வழிகாட்டுதலில் இயக்கம் புத்துயிர் பெற்றதில் என்ன ஆச்சரியம்?
19 Th February அந்த மகானுபாவரின்..மஹாத்மா வின் ஜெயந்தி தினம்
வாழ்க அவர் புகழ்,
வாழ்க பாரதம் வெல்க பாரதம் ஜெய் ஹிந்த், வந்தே மாதரம்
Ps. WITH INPUTS FROM அன்பு நண்பர்
தோழர் 'ஸ்வயம் சேவக்.. '
SRI NIDHI BHAT. Msc.
நன்றி இணையம்