தந்ரா தியானம்
☆☆☆☆☆☆☆
☆☆☆☆☆☆☆
★சித்தர்களில் ஓரிருவர் தவிர ஏனையோர் இல்லறம் நடத்தியே வாழ்ந்துள்ளனர். யோகமார்க்கத்தில் மெய்யறிவு பெற்று இறைநிலை அடைவதை மட்டுமல்ல, இல்லறத்தில் வாழ்வோர்களும் எல்லா விஷயங்களையும் இறையுணர்வோடு செய்து இறைநிலை அடைய முடியும் என்று வாழ்ந்து காட்டி அதற்கான வழிகளையும் சொல்லியிருக்கிறார்கள். சிற்றின்பமாகட்டும், பேரின்பமாகட்டும் அதாவது யோகமானாலும், போகமானாலும் இரண்டிலும் உபயோகப் பொருள் விந்துதான்.
★நாம் உண்ணும் உணவிலிருந்து ஏழு தாதுக்கள் பெறப்பட்டு உருவாவது இந்த தேகம். சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் என்ற ஏழாகும். அதாவது இரசம், இரத்தம், மாமிசம், மேதசு, அத்தி, மச்சை, சுக்கிலம் என்றும் சொல்வார்கள். சாரம், செந்நீர், வெண்ணீர் இம்மூன்றும் ஒருநாள் ஒரு புல்லின் நுனியில் நிற்கும் பனித்துளி போல் திரண்டு நிற்கும் என்றும்.
★அத்திரட்சியே விந்து என்றும் இது 21 நாட்கள் வரை உடம்பில் வளரும் என்றும் திருமூலர் சொல்கிறார்(திருமந்திரம் -1934). மனித உடலை உருவாக்குவது நாதபிந்துக்கள். இந்த நாதபிந்துக்களை உருவாக்குவது அன்னம். எனவேதான் இது அன்னத்தாலாகிய உடம்பாகிய அன்னமய கோசம் எனப்படுகிறது. ஆண்களுக்கு பிந்து நாதமும், பெண்களுக்கு சுரோணித நாதமும் உருவாகிறது. இந்த விந்தானது மூன்று நாட்கள் உடல் விந்தாகவும், பிறகு மன விந்தாகவும் மாற்றமடையும் என்றும், அதை கலையாகிய அறிவு விந்தாக அமைத்து புருவ மத்தியில் தியானித்து இருப்பவர்களுக்க ு உடலைவிட்டு நீங்காது என்றும், உலக இல் வாழ்வில் பற்று கொண்டோர்களுக்கு மனதுடன் அழியும் அல்லது கழிவாகி வெளியேறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
★அழிகின்ற விந்து அளவை யறியார் கழிகின்ற தன்னையுட் காக்கலுந் தேரார் அழிகின்ற காயத் தழிந்தயர் வுற்றோர் அழிகின்ற தன்மை யறிந்தொழி யாரே - (தி ம - 1936)
★இவ்வாறு வீணே கழியும் விந்தின் பெருமையை உணராதவர்கள் அதை வீணாக்கி உடலையும் மனதையும் நாசம் செய்கின்றனர். ஒரு துளி விந்தில் 80 துளி வெண்ணீர் துளிகள் உள்ளன. ஒரு வெண்ணீர் துளி 80 துளி இரத்தத்தின் சாறு ஆகும். ஆக ஒரு துளி விந்து அழிந்தால் 6400 துளி இரத்தம் வீணாகிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. இதனால் உடலும் தளரும் என்பதை யாரும் உணர்வதுமில்லை. ஆனால் காமசக்தியான விந்து சக்தியையும், காம உணர்ச்சியையும், புணர வேண்டும் என்கிற ஆசையையும் மனிதன்ஓரளவுக்கு மேல் அடக்க முடியாது, அடக்கவும் கூடாது.
★அவ்வாறு அடக்கும் போது விளைவுகள் மோசமாகும். மனநோய் உருவாகலாம். சரி அதிகமாகப் புணர்ந்தாலோ உடல் நலம் கெடும். என்னதான் செய்யலாம் என்று சிந்தித்த சித்தர்கள் அதற்கென சில வழிமுறைகளைக் கண்டு பிடித்தனர். வஜ்ரோலி முத்திரை, பரியங்க யோகம் போன்ற சில யோகங்களே அவைகள். உலகியல் வாழ்வின்படி மணம் செய்து கொண்ட யோகியர் பெண்ணிடம் சேர்ந்தாலும் உடல்கள் சங்கமிக்குமே அல்லாது உள்ளம் சிவனிடத்து இருக்குமாகையால் விந்து கழியாது.இதற்கு இருபாலினருக்கும ் பயிற்சியும் ஒருங்கிணைந்த மனப் போக்கும் அவசியம்.
★இதுவே நற்போகமென்றும், இதனால் விரைவில் குண்டலினி மகாசக்தி மகிழ்ந்து மேலேறுவாள் என்று சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய யோகியர் மக்கட்பேறு வேண்டி விந்துவினை விடுவார்களே அன்றி, காதல் வயப்பட்டு அதிகம் விடமாட்டார்கள். விந்துவினை மூலதாரத்தில் அனலால் செம்மையுறச் செய்து, அங்கிருந்து தொப்புள் முதல் நெஞ்சம் வரையுள்ள சூரிய மண்டலத்துக்கு வலது நாடி வழியாக ஏற்றி, அங்கிருந்து நெற்றி வரை இடப்பால் நாடி வழியாக ஏற்றி சந்திர மண்டலம் சேர்ந்து அமுதம் உண்ணலாம். இந்த வேளையில் மேலேறும் விந்துவைக் கட்டும் வழி உள்ளது. திருவருட் சக்தியின் துணை கொண்டு மூலத்திடை விளங்கும் அனலை எங்கும் போகமாட்டாமல் சிவசிவ என்னும் நான்மறையால் கைவரச் செய்து யோகியானவர் தன் வாழ்க்கைத் துணைவியாம் பெண்ணின் செந்நீராம் நாதத்துடன் தன் நடுநாடி வழியாக விந்துவாம் வெண்ணீரைச் செலுத்தினால் அவ்விந்து கட்டுப்படும்.
★இதை ஒவ்வொரு ஆதாரமாக மேலேற்றுவார்களாம். இதற்கு நெற்றி வழியாக அருந்தும் சந்திர அமிர்தமும் துணை நிற்கும். ஆரம்ப நிலையில் குண்டலினி யோகம் செய்கிறவர்களுக்கு ஏற்படும் அதிகபட்சமான வீரியத்தை சமநிலைக்கு கொண்டுவர பெண் சம்போகம் தேவையாகும். பிறகு அவர்கள் வஜ்ரோலி முத்திரை மூலமாக விந்து விரையமாகாமல் போகம் செய்து, அதையும் சிவயோகமாகச் செய்து இருவரும் மேன்மை அடைவர். வஜ்ரோலி முத்திரை தேர்ந்த குரு மூலம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.இதில் பயிற்சியாளர் முதலில் தண்ணீரை ஆண்குறி மூலமாக உள்ளிழுக்க பயிற்றுவிக்கப்படுவார். பிறகு பாலை உள்ளிழுக்க பயில வேண்டும். பிறகு தேன். இந்த மூன்றிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர்களை பாதரசத்தை உள்ளிழுக்கப் பயிற்றுவிப்பார்கள்.
★இதனால் என்ன பயன் என்றால் சம்போகம் செய்யும் போது விந்து வெளியேறினாலும், அடுத்த நொடியே மூச்சுப் பயிற்சியினாலும், வயிற்றுத் தசைகளைச் செயல் படுத்தியும் அடிவயிற்றில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, வெளியைறிய விந்துவை உள்ளே இழுத்து விடுவார்கள்.
★எனவே மனதின் இச்சையையும் தீர்த்துக் கொண்டு, விந்துவையும் விரையமாகாமல் காத்து தேகத்தை வலுவாக்கிக் கொள்ளலாம். இது மிகவும் கடுமையான பயிற்சியாகும். விளையாட்டாக எதுவும் செய்தால் விபரீதமாகிவிடும். குரு அவசியம். இதில் தேர்ச்சி பெற்ற குருவெல்லாம் அவ்வளவு எளிதில் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இன்றைய காலகட்டங்கள் சரியில்லை. இதைப் பயன்படுத்தி தவறு செய்பவர்களே அதிகம் காணப்படுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. மாதம் இருமுறை சம்போகம் செய்பவர்களுக்கு இதெல்லாம் தேவையில்லை என்பதே சித்தர்கள் வாக்கு. யோக மார்க்கத்தில் மேன்மையடைய சம்போகத்தையே பயன்படுத்தும் தாந்திரீக யோகமும் உண்டு. அதாவது மன உணர்வினை உடலில் அனுபவித்து, விந்தை வெளிவிடாது மனதை ஒரு நிலைப்படுத்துவர ். கடும் பயிற்சிக்குப் பின் இருவருடைய ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்தக் கலை சிறக்கும்.
★இந்த நிலையில் யோகியானவர் யோகாசனம் தெரிந்த பெண்ணோடு உடல் அதிக உஷ்ணமடையாத வண்ணமும், சுவாசம் தறிகெட்டு ஓடாத வண்ணமும் சுவாச முறைகளைக் கையாண்டு நீண்ட நேரம் சம்போகம் செய்வார். இந்த நேரத்தில் காம உணர்வோடு கூடாமல், சிந்தையை புருவ மத்தியில் திரட்டி, விந்தை வெளியே விடாமல் நீண்ட நேரம் கூடி உள்ள உணர்வுகளை ஒருங்கிணைத்து தெய்வநிலை அடைவர். உடல் புணர்ச்சி நிலையில் திளைத்திருந்தாலும் மனம் மட்டும் புருவ மத்தியிலேயே நிலைத்திருக்கும். இதனால் குண்டலினியானது வெளியே கிளம்பும். போகத்தால் குண்டலினியைக் கிளப்புவர். இதில் பெண்ணும் ஒத்துழைத்து மனதை புருவ மத்தியில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மனதை ஏதாவது ஒரு ஆதாரத்தில் நிறுத்தலாம்.
Marma yogi
Marma yogi
Good night my dear
Guru,GOD, brothers,sisters and friends!!!!
Sweet dreams & Sleep well! Have a lovely happy tomorrow too..!
இறைவன் நினைவே இனிய இரவு வணக்கம்! வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!!ஓம் சிவ சத்தி ஓம் -
Sweet dreams & Sleep well! Have a lovely happy tomorrow too..!
இறைவன் நினைவே இனிய இரவு வணக்கம்! வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!!ஓம் சிவ சத்தி ஓம் -
என்றும் அன்புடன் MU Dhanalakshmi
Chandaran