இந்துக்களின் தினசரிக் கடமைகள்:
1. தினமும் சூரியன் உதிப்பதற்கு முன் படுக்கையிலிருந்து எழ வேண்டும்.
2. காலையில் எழுந்தவுடனும், நீராடிய பின்னும், உணவு கொள்ளும் போதும் இஷ்ட தெய்வத்தைச் சிந்தனை செய்ய வேண்டும்.
3. நெற்றியில் இந்து சமயச் சின்னம் (திருநீறு, குங்குமம், சந்தனம்,
திருநாமம் - ஏதேனும்) அணிய வேண்டும். நீறில்லா நெற்றி பாழ் என்பதற்கேற்ப
எதையும் அணிந்து கொள்ளாமல் வெறும் நெற்றியுடன் இருக்கக் கூடாது.
4. இறைவழிபாட்டுக்கு என, தனியே இடம் ஒதுக்கித் தவறாது வழிபாடு
செய்யவேண்டும். காலை - மாலையில் விளக்கேற்றி நறுமணப் புகை பரவச் செய்யும்.
5. சமய நூல்களைப் படித்தல் வேண்டும்.
6. படுக்கும்போது தெய்வத்தின் நினைவோடு படுக்க வேண்டும்.
நன்றி : தினமணி