கோவில் பிரசாத சுவையில் காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:27 AM | Best Blogger Tips

 May be an image of text


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரசாதமான காஞ்சிபுரம் இட்லி.
 
இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தோசை வடை மற்றும் காஞ்சிபுரம் இட்லியும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கிட்டதட்ட பல ஆண்டுகளாக இட்லியை மூங்கில் குடலையில் மந்தாரை இலையை வைத்து வேக வைக்கிறார்கள். 
 
மந்தாரை இலை கிடைக்காத காலத்தில் வாழை இலையும் பயன்படுத்தப்படுகிறது. 
 
காஞ்சிபுரத்தில் இருக்கும் எல்லா ஹோட்டல்களிலும் காஞ்சிபுரம் இட்லி கிடைக்கும்.
 
📝தேவையான பொருட்கள்
✍️பச்சரிசி – 1 கப்
✍️உளுந்து – 3/4கப்
✍️வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
✍️சீரகம் - 1/4டீஸ்பூன்
✍️மிளகு - 1 /4டீஸ்பூன்
✍️சுக்கு பொடி – 1 /4டீஸ்பூன்
✍️முந்திரி – 10
✍️பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
✍️கறிவேப்பிலை – தேவையான அளவு
✍️கடுகு- 1 டீஸ்பூன்
 
📝செய்முறை விளக்கம் : 
 
✍️பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அதை மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டுக் கொறகொறப்பாக அரைக்கவும். நார்மல் இட்லிக்கு அரைப்பது போல் நைஸாக அரைக்கக் கூடாது. காஞ்சிபுரம் இட்லிக்கு மாவை எப்போதுமே கொற கொறப்பாகத் தான் அரைக்க வேண்டும். பின்பு மாவை சில மணி நேரம் வைத்து புளிக்க விடவும்.
 
✍️முதலில் ஒரு கடாயில் நெய் அல்லது கடலையெண்ணைய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, முந்திரி சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதிலல், சுக்கு பொடி, சீரகம், மிளகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும்.
இப்போது தாளித்த பொருட்களை அரைத்து புளிக்க வைத்துள்ள மாவில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு போட்டு மாவை நன்கு கலந்து கொள்ளவும். இதை வழக்கம் போல் இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கலாம்.
 
✍️ஒரிஜினல் காஞ்சிபுரம் இட்லி போலவே சாப்பிட, மந்தாரை இலையை வட்டமாக வெட்டி அதை ஓரு பவுலில் வைத்து மாவை ஊற்றி 10 இருந்து 16 நிமிடம் வேகவைக்கவும்🫰🏻