உண்மைதான். நான்கரை ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு, 1912 டிசம்பரில் அவர்
விடுதலையானார். சென்னை சிந்தா திரிப்பேட்டை, மயிலாப்பூர், பெரம்பூர் எனப்
பல்வேறு இடங்களில் குடியேறினார். சென்னை, கோவை, ஓட்டப்பிடாரம்,
கோவில்பட்டி, தூத்துக்குடி எனப் பல ஊர்களில் வாழ்ந்துபார்த்தார். ஆனால்,
வறுமை அவரை வாழவிடவில்லை. அரிசி விற்றார், நெய் விற்றார், மண்ணெண்ணெய்
விற்றார். போராட்டக்காரனுக்கு வர்த்தகம் எப்படித் தெரியும்? முடியவில்லை.
சுயராஜ்யா நிதியில் இருந்து திலகர் மாதம்தோறும் அனுப்பிவைத்த 50 ரூபாய்
அவருக்கு ஓரளவு உதவியாய் இருந்தது.
தென்ஆப்பிரிக்கா தமிழர்கள்
சிலர் வ.உ.சி-யிடம் கொடுப்பதற்காக ஒரு தொகையை காந்தியிடம் கொடுத்து
அனுப்பினர். ஆனால், ஏனோ அது வ.உ.சி-க்கு வந்து சேரவில்லை. 'இப்போது
இருக்கும் நிலையில் அந்தப் பணம் வேண்டாம் என்று நான் சொல்லப்போனால், அது
நான் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இழைத்த தவறாகும்’ என்று
வெட்கத்தைவிட்டு காந்திக்கு கடிதம் எழுதும் அளவுக்கு வ.உ.சி. இருந்தார்.
அவர் இறுதிக் காலத்தில் எழுதிவைத்த உயில் கண்ணீர் வரவைக்கும். தூத்துக்குடி
சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளிக் கடைக்கும், வன்னியத் தெரு எண்ணெய் கடைக்கும்
எவ்வளவு கடன் வைத்துள்ளேன் என்று சொல்லியிருக்கிறார். தியாகிகளைக்
கவனிக்காமல் கடனாளியாக்கிய பாவத்துக்குத்தான் கடன்கார நாடாக நாம்
மாறிக்கொண்டு இருக்கிறோம்.
- ஜூனியர் விகடன்
தென்ஆப்பிரிக்கா தமிழர்கள் சிலர் வ.உ.சி-யிடம் கொடுப்பதற்காக ஒரு தொகையை காந்தியிடம் கொடுத்து அனுப்பினர். ஆனால், ஏனோ அது வ.உ.சி-க்கு வந்து சேரவில்லை. 'இப்போது இருக்கும் நிலையில் அந்தப் பணம் வேண்டாம் என்று நான் சொல்லப்போனால், அது நான் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இழைத்த தவறாகும்’ என்று வெட்கத்தைவிட்டு காந்திக்கு கடிதம் எழுதும் அளவுக்கு வ.உ.சி. இருந்தார். அவர் இறுதிக் காலத்தில் எழுதிவைத்த உயில் கண்ணீர் வரவைக்கும். தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளிக் கடைக்கும், வன்னியத் தெரு எண்ணெய் கடைக்கும் எவ்வளவு கடன் வைத்துள்ளேன் என்று சொல்லியிருக்கிறார். தியாகிகளைக் கவனிக்காமல் கடனாளியாக்கிய பாவத்துக்குத்தான் கடன்கார நாடாக நாம் மாறிக்கொண்டு இருக்கிறோம்.
- ஜூனியர் விகடன்