------------------------------ ------------------------------ ----------
இயற்கை மூலமாக கிடைத்த உணவும், உடலும் அதன் பணி முடிந்ததும் மீண்டும்
இயற்கையோடு கலந்துவிட வேண்டும். அதை தடுப்பதும் தாமதப்படுத்துவதும்
இயற்கையை-உயிரியல் சுழற்சியை மீறிய செயலாகும்.
நம் முன்னோர்கள்
தினசரி காலை கடனை கழிக்கையில் சிறு குழி தோண்டி பின் மூடி செல்வர். இதனால்
இயற்கைக்கும் மண்ணுக்கும் மனிதருக்கும் பாதிப்பின்றி இருந்தது.
தற்போது கழிவறை என்று ஒன்றை செலவழித்து கட்ட வேண்டும். அதுவும்
வீட்டுக்குள்ளேயே கட்டினால் பெருமை. அந்த கழிவுகளை வெளியேற்ற தனியே
சாக்கடை, அதை கட்ட பல ஆயிரம் கோடி டெண்டர், அந்த சாக்கடை வழியாக கொசு
மற்றும் கிருமிகள் உற்பத்தியாகி நாடெல்லாம் பல நோய்கள அதை தீர்க்க
லட்சகணக்கான கோடிகளில் மருந்து-மருத்துவ வணிகம்!. இவை போதாது என்று
செப்டிக் டேங்கில் தேங்கும் கழிவால் மீத்தேன் உற்பத்தியாகி அதுவும்
சுற்றுசூழலை பாதிக்கும்.
யோசித்து பாருங்கள் நம் நாட்டின் 120
கோடி மக்கள் தொகையில் 50% கிராமங்களில் உள்ளனர். (தற்போதைக்கு கிராமத்தை
மட்டும் கணக்கில் எடுத்து கொள்வோம்) குறைந்தபட்சமேனும் கணக்கிட்டு
பார்த்தாலும் ஒரு நாளைக்கு மனித திடக்கழிவு மட்டும் 2.4 லட்சம் டன் உரம்
மண்ணுக்கு சேரும். இதே அளவு உரத்தை இறக்குமதி செய்ய எத்தனை ஆயிரம் கோடிகள்
நாம் செலவு செய்ய வேண்டும்?? இன்று மாநகராட்சி-நகராட்சியில் திடக்கழிவு
மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். ஆனால் மண்ணுக்குள் நடக்க
வேண்டிய சுழற்சிகள் செப்டிக் டேங்கில் நடப்பதால் பல தீங்குகள் நடக்கிறது.
தனியார் செய்ததை தற்போது அரசு செய்கிறது அவ்வளவே, ஓதனால் இயற்க்கைக்கோ
மக்களுக்கோ புதிதாக பெரிய நன்மை என்று எதுவும் இல்லை.
கழிவறை
என்பது ‘சுகாதார’ வசதி என்று நம்ப வைத்து அது இல்லையேல் அவமானம் என்றும்
நம்ப வைத்துள்ளனர். இதெல்லாம் அரசாங்கத்துக்கு தெரியாமல் இல்லை. ஆனாலும்
அரசாங்கம் செய்கிறது. மக்களாகிய நாம் தான் இதை புரிந்து செயல்பட வேண்டும்!
வசதி என்பது அனைத்தும் சரி என்பதோ, சுகாதாரம் என்பதோ கிடையாது. இதை மனிதன் புரிந்துகொள்ளும்போதுதான் இயற்கை கை கொடுக்கும்!
பின்குறிப்பு: நம் முன்னோர்கள் கழனியையே கழிவறையாக பயன்படுத்தினர். மனித
மலத்தை மனிதன் அள்ளும் அவலம் என்று சமூகத்தை குறை கூறி திட்டமிட்ட சதி போல,
கூப்பாடு போடும் புரட்சியாளர்களுக்கு நம் முன்னோர் உலகில் வேலை இல்லை!
Via FB விஜய பாரதம்
------------------------------
இயற்கை மூலமாக கிடைத்த உணவும், உடலும் அதன் பணி முடிந்ததும் மீண்டும் இயற்கையோடு கலந்துவிட வேண்டும். அதை தடுப்பதும் தாமதப்படுத்துவதும் இயற்கையை-உயிரியல் சுழற்சியை மீறிய செயலாகும்.
நம் முன்னோர்கள் தினசரி காலை கடனை கழிக்கையில் சிறு குழி தோண்டி பின் மூடி செல்வர். இதனால் இயற்கைக்கும் மண்ணுக்கும் மனிதருக்கும் பாதிப்பின்றி இருந்தது.
தற்போது கழிவறை என்று ஒன்றை செலவழித்து கட்ட வேண்டும். அதுவும் வீட்டுக்குள்ளேயே கட்டினால் பெருமை. அந்த கழிவுகளை வெளியேற்ற தனியே சாக்கடை, அதை கட்ட பல ஆயிரம் கோடி டெண்டர், அந்த சாக்கடை வழியாக கொசு மற்றும் கிருமிகள் உற்பத்தியாகி நாடெல்லாம் பல நோய்கள அதை தீர்க்க லட்சகணக்கான கோடிகளில் மருந்து-மருத்துவ வணிகம்!. இவை போதாது என்று செப்டிக் டேங்கில் தேங்கும் கழிவால் மீத்தேன் உற்பத்தியாகி அதுவும் சுற்றுசூழலை பாதிக்கும்.
யோசித்து பாருங்கள் நம் நாட்டின் 120 கோடி மக்கள் தொகையில் 50% கிராமங்களில் உள்ளனர். (தற்போதைக்கு கிராமத்தை மட்டும் கணக்கில் எடுத்து கொள்வோம்) குறைந்தபட்சமேனும் கணக்கிட்டு பார்த்தாலும் ஒரு நாளைக்கு மனித திடக்கழிவு மட்டும் 2.4 லட்சம் டன் உரம் மண்ணுக்கு சேரும். இதே அளவு உரத்தை இறக்குமதி செய்ய எத்தனை ஆயிரம் கோடிகள் நாம் செலவு செய்ய வேண்டும்?? இன்று மாநகராட்சி-நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். ஆனால் மண்ணுக்குள் நடக்க வேண்டிய சுழற்சிகள் செப்டிக் டேங்கில் நடப்பதால் பல தீங்குகள் நடக்கிறது. தனியார் செய்ததை தற்போது அரசு செய்கிறது அவ்வளவே, ஓதனால் இயற்க்கைக்கோ மக்களுக்கோ புதிதாக பெரிய நன்மை என்று எதுவும் இல்லை.
கழிவறை என்பது ‘சுகாதார’ வசதி என்று நம்ப வைத்து அது இல்லையேல் அவமானம் என்றும் நம்ப வைத்துள்ளனர். இதெல்லாம் அரசாங்கத்துக்கு தெரியாமல் இல்லை. ஆனாலும் அரசாங்கம் செய்கிறது. மக்களாகிய நாம் தான் இதை புரிந்து செயல்பட வேண்டும்!
வசதி என்பது அனைத்தும் சரி என்பதோ, சுகாதாரம் என்பதோ கிடையாது. இதை மனிதன் புரிந்துகொள்ளும்போதுதான் இயற்கை கை கொடுக்கும்!
பின்குறிப்பு: நம் முன்னோர்கள் கழனியையே கழிவறையாக பயன்படுத்தினர். மனித மலத்தை மனிதன் அள்ளும் அவலம் என்று சமூகத்தை குறை கூறி திட்டமிட்ட சதி போல, கூப்பாடு போடும் புரட்சியாளர்களுக்கு நம் முன்னோர் உலகில் வேலை இல்லை!