** இந்தியா மட்டும் தான் ஒரே நம்பிக்கை !! எதிர்பார்ப்பில் அமெரிக்கா !! **
இன்றைய தேதியில் உலகில் பெரிய சக்தி வாய்ந்த நாடுகளின் தலைவர்களும், எந்த ஒரு விஷயத்திலும் இந்தியாவில் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்து தான் அவர்களின் திட்டங்களையே வகுக்கிறார்கள் !!
குறிப்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு நிலைப்பாடு எடுத்து விட்டால், அதை மாற்றுவது மிக கடினம் என்பதை நன்றாகவே உணர்ந்துள்ளார்கள் !!
அதனால் எந்த வகையிலும் இந்தியாவையும் இந்தியர்களையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று கவனமாக பேசுவதை சமீப காலங்களில் பார்க்க முடிகிறது !!
அதுவும் இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் வரவிருக்கும் நிலையில்.... பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் மிகவும் நெருக்கமானவன் என்று இரு கட்சி வேட்பாளர்களும் மார் தட்டிக் கொள்கிறார்கள் !!
குறிப்பாக அங்கே இருக்கும் இந்தியர்களின் வாக்குகளைக் கவர, இந்தியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் மோடி அவர்களின் நண்பனாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார்கள் !!
இந்நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், சீனாவின் சவாலை எதிர்கொள்ள இந்தியா மட்டுமே உதவ முடியும் என்று கூறி இருக்கிறார் !!
இது வெறும் ஓட்டுக்காக பைடன் பேசியதாக நினைக்க முடியாது.... ஒரு பொருளாதார வல்லரசாக இருக்கும் நாட்டில், மிக உயர்ந்த பதவியை வகிக்கும் ஒருவர் கூறிய இந்த கருத்தை, ஒட்டுமொத்த அமெரிக்க அரசின் நிலைப்பாடாகத் தான் எடுத்துக் கொள்ள முடியும் !!
அந்த வகையில் உலகையே வழி நடத்தும் சக்தியாக இந்தியா உயர்ந்து இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம் !!
காலச் சக்கரத்தை ஒரு 10 ஆண்டுகள் பின்னோக்கி சுழற்றுவோம் !!
இந்தியா அமெரிக்காவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் !!
அமெரிக்கா திமிரான பதிலை அளித்துக் கொண்டிருக்கும் !!
ஒரு உலகத் தலைவர் மாநாட்டிற்கு இந்திய பிரதமர் சென்றாலும், அவர் கேட்பாரற்று தனியாக நின்று கொண்டிருந்த வீடியோக்களை நாம் பார்த்திருப்போம் !!
ஆனால் நரேந்திர மோடி அவர்கள் பாரதப் பிரதமராக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து, இந்தியர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்காத மாற்றங்கள் நிகழத் தொடங்கின !!
மிகப்பெரிய சர்வ வல்லமை பொருந்திய நபராக கருதப்படும் அமெரிக்க அதிபர், மோடியை தேடி வந்து கை கொடுக்கிறார் !!
அமெரிக்க அதிபருக்கு நேர் எதிர் துருவத்தில் இருக்கும் ரஷ்ய அதிபர், உக்ரைன் ரஷ்யா போரில் இந்தியாவின் பேச்சை மட்டும் தான் கேட்கிறார் என்று பல நாட்டுத் தலைவர்களும் கூறிவிட்டார்கள் !!
இந்தியா உலகின் விஸ்வ குரு என்ற ஸ்தானத்திற்கு உயர்ந்துவிட்டது என்று கூறுவது வெறும் வாய் பேச்சு அல்ல !!
அது நம் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான உண்மை !!
மோடி உலகத் தலைவராக ஏற்கனவே உயர்ந்து விட்டார் !!
அந்த உலகத் தலைமைக்கு மீண்டும் ஒரு அங்கீகாரம் வழங்குவதற்காக தான் இந்த தேர்தல் நடைபெற இருக்கிறது !!
வல்லரசுகளின் அதிபர்களே தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்றால் தன்னை மோடியின் நண்பனாக காட்டிக் கொண்டிருக்கும் சமயத்தில்.....
அந்த மோடிக்கே அங்கீகாரம் கொடுக்கப் போகும் தேர்தல் நடக்கவிருக்கிறது !!!
மோடிக்கு இந்த தேர்தலில் நாம் அளிக்கப் போகும் ஆதரவு..... இந்தியாவில் இதுவரை எந்த தலைவருக்கும் கிடைக்காத ஒரு மாபெரும் ஆதரவாக அமைய வேண்டும் !!
மீண்டும் மோடி
வேண்டும் மோடி
ஜெய் ஹிந்த்..!!
நன்றி இணையம்