கணவனும், மனைவியும் நேஷனல் ஜியோ சானலில், ஒரு சிறுத்தை, மானை துரத்துவதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். மனைவி சொன்னாள், எப்படியும் சிறுத்தை, மானை பிடித்து விடும் என்றாள். கணவன் சொன்னான், சொல்ல முடியாது, சிறுத்தை உணவுக்காக ஓடுகிறது,மான் உயிரை காப்பாற்றி கொள்ள. ஓடுகிறது. உயிரை காப்பாற்ற ஒடும் ஒட்டத்தில்தான் வேகம் இருக்கும் என்றான். நான் சொல்கிறேன், கண்டிப்பாக பிடிக்கும் என்றாள், மனைவி. இல்லை, பிடிக்காது என்றான், கணவன். அப்படி பிடித்தால், தினமும் நீங்கள், என்னை ஹோட்டலுக்கு கூட்டி போய், டிபன் வாங்கிதர வேண்டும், என் அம்மா இங்கு வந்து தங்குவாள்,பந்தயம் சரியா எனக் கேட்டாள் , மனைவி. அதன் பின் இந்தக் கதையில் என்ன நடந்தது என்பதை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மணக்கால் அய்யம்பேட்டை | 11:17 AM | Best Blogger Tips


மக்களை ஏமாற்றுவது, பொது சொத்தை தனது சொத்தாக மாற்றிக் கொள்வது, இலஞ்சம், ஊழல், எளியோரை ஏச்சிப் பிழைப்பது, பிறரை அடிமையாகவே வைக்கத் துடிப்பது என ஆங்கிலேயர்களின் அனைத்து கொள்கைகளையும் ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பதுதான் இன்றைய திராவிட அரசியல்.
இவர்கள் பின்பற்றுவதும் ஆங்கிலேயர்கள் வழிதான். ஆங்கிலேயன் எவ்வாறு நாட்டை பிரித்து ஆள ஆரிய திராவிட கோட்பாட்டை கொண்டு வந்தானோ? உள் மாநிலமக்களை பிரிக்க சாதிய வேற்றுமைகளை கொண்டு வந்தானோ?, இந்திய கல்வியை சிதைக்க நம் நாட்டு குருக்கள் மீது மக்களிடையே விஷமத்தை பரப்பினானோ? அதே பாணியைத்தான் இப்போது இந்த திராவிட கழிசடைகள் செய்து வருகின்றனர்.
இவர்களின் அறுவருக்கத்தக்க கூச்சலுக்கு சிதந்திர போராட்ட தியாகிகளும் தப்பவில்லை. சுதந்திர போராட்ட தியாகிகளான கட்டபொம்மனாகட்டும், குமரனாகட்டும், இரட்டை மலை சீனிவாசனாகட்டும், பாரதியாகட்டும், வ.வெ.சுவாகட்டும், வாஞ்சிநாதனாகட்டும், சுப்பிரமணிய சிவாவாகட்டும், கக்கனாகட்டும், காமராசாகட்டும், வைத்தியநாத ஐயராகட்டும் எல்லாரும் ஒன்று சேர்ந்து தேசத்திற்காகவே ஒருமித்த குறல் கொடுத்தார்கள். இவர்களுக்குள் எந்த வேற்றுமையும் இல்லை.
நாம் அடிமை பட்டிருந்த காலத்தில் இன்றைக்கு திராவிட அரசாங்கத்தால் சொல்லப்படும் அனைத்து சமூகத்தினரும் சுதந்திர போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தோம். அதே சமயம் பலர் ஆங்கிலேயனுக்கு ஆதரவாகவும் செயல் பட்டிருந்தோம். ஆனால் இந்த திராவிட விஷமிகள் பிராமணர்கள் அனைவரும் ஆங்கிலேயனுக்கு துணையாக நின்றார்கள் என்ற விஷம பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் தூவி. மக்களிடையே பிளவை வழுப்படுத்தினர்.
--------------------------------------------------------------------------------
இத்தகைய இழிவான பிரச்சாரத்தை வைத்தே இன்றைக்கும் மக்களிடையே பிரச்சாரத்தை மேற்க் கொள்கின்றனர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருமே தியாகிகள்தான் இதில் சாதி எங்கிருந்து வந்தது?

   நன்றி இணையம்