இந்திய விடுதலை போராளிகளை திட்டமிட்டு வாட்டி விரட்டி அடித்து ஒழித்தது

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:26 | Best Blogger Tips

 


இந்தியாவுக்கு போராளி என வந்தவுடன் காந்தி செய்த முதல் காரியம் தீவிரமாக போராடிய இந்திய விடுதலை போராளிகளை திட்டமிட்டு வாட்டி விரட்டி அடித்து ஒழித்தது



காந்தியால் விரட்டபட்ட சுதந்திர போராளிகள் நிறைய உண்டென்றாலும் ..சிக்கு தனி இடம் உண்டு, காந்தி அவருக்கு செய்த துரோகம் கொஞ்சமல்ல

ஒரு இடத்தில் கூட சிதம்பரனாரின் கப்பல் முயற்சியினை காந்தி வாழ்ந்த்தவில்லை. சுதேசி கதர் ஆடை , கடல் உப்பு என திரிந்த காந்தி சுதேசி கப்பல் விட்ட சிதம்பரனாரை விரட்டிவிட்டது எல்லாம் விசித்திரம்

..சிதம்பரனார்

காந்திக்கு முன்பு சுதந்திர வெறியினை பற்றவைத்ததில் தனித்து நிற்கின்றார், வடக்கே திலகரும் தேற்கே சிதம்பரனாரும் தனிபெரும் அடையாளங்களாக நிற்கின்றனர், தேற்கே சிதம்பரனார், பாண்டித்துரை தேவர் என பெரும் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களாக வலம் வருகின்றனர்

கப்பல் விட்ட சிதம்பரனாரை வெள்ளையன் குறிவைத்துவிடுகின்றான், இவரை விட்டால் பெரும் ஆபத்து என இல்லாத வழக்குகளில் சிக்க வைத்து சிறையில் அடைக்கின்றான்



சிதம்பரனார் செக்கிழுத்த கொடுமையும், அவரின் தோழர் சுப்பிரமணிய சிவாவினை தொழுநோய் பாதித்த வன்மமும், பாரதி புதுச்சேரியில் தலைமறைவான கொடுமையும் நடக்கின்றது

சிதம்பரனார் வெளிவந்தாலும் வறுமையில் உழன்று, மளிகை கடை நடத்தியும் தோற்ற நிலை உலகெல்லாம் எதிரொலிக்கின்றது, அப்பொழுது தென்னாபிரிக்க தமிழர்கள் காந்தியிடம் 357 ரூபாய் கொடுத்து அனுப்புகின்றார்கள்

அது அன்று மிகபெரும் தொகை.

ஒரு வருடம் கழித்து காந்தி உசிக்கு கடிதம் எழுதுகின்றார், அந்த பணத்தை நான் தந்துவிட்டேனா?

எப்படி இருக்கும் உசிக்கு?

அப்பணத்தை தாமதித்து இருவருடம் கழித்து கொடுக்கின்றார் காந்தி, அதும் பலமுறை வஉசி வறுமை தாங்காமல் கடிதம் எழுதி கெஞ்சிய பின்

ஆம் பணம் தன் கையில் கிடைத்தும் சில வருடம் தாமத்தே ..சிக்கு கொடுத்தார் காந்தி.



அதன் பின்னும் வெள்ளையன் நெருக்கடியில் நடுத்தெருவிற்கு வருகின்றார் உசி, போராட்டம் காந்தி பின்னால் செல்கின்றது, நான் தான் சீனியர் என வந்து மல்லுகட்டாமல் ஒதுங்கி நிற்கின்றார் உசி

அவரின் மொத்த குடும்பமும் பட்டினி கிடக்கும் கொடுமை அறிந்து மறுபடியும் தென்னாப்ரிக்க தமிழர்கள் 5000 ஆயிரம் திரட்டி காந்தியிடம் கொடுத்தனுப்புகின்றார்கள்

அப்பணம் மறுபடியும் தாமதமாகின்றது, வேடியப்பன் என்றொருவர் வந்து உசியிடம் கேட்டபின்புதான் அப்படி பணம் கொடுத்தனுப்பிய விஷயமே உசிக்கு தெரிகின்றது, காந்திக்கு கடிதம் எழுதுகின்றார்

கவனியுங்கள் 5ஆயிரம் ரூபாய் சிதம்பரனாருக்கு வந்த விஷயத்தையே காந்தி மறைத்துவிட்டார்.

சிதம்பரம் பிள்ளை கடிதம் எழுதியும் காந்தி பதில் அனுப்பவில்லை, மறுபடி மறுபடி சிதம்பரம் பிள்ளை எழுதியும் பலனில்லை, மறுபடி சிதம்பரம் பிள்ளை தென்னாபிரிக்க தமிழரின் கடித்தத்தோடு நேரே சென்று கெஞ்சுகின்றார்

ஆம், 5 ஆயிரம் ரூபாய் ஊழலில் சிக்கினார் காந்தி, பின் தென் ஆப்ரிக்க தமிழர்கள் தலையிட்ட பின்பே இறங்கி வந்தார்.

காந்தி அப்பணத்தை செலவழித்துவிட்டதாகவும், இன்னொரு வணிகரிடம் வாங்கிகொள்ளுமாறும் அனுப்புகின்றார், அந்த வணிகர் வட்டியோடு கொடுக்க முனைகின்றார், தடுத்து 500 மட்டும் வாங்கிய உசி சொல்கின்றார்

காந்தி செய்த தவறுக்கு நீங்கள் ஏன் வட்டி கட்ட வேண்டும்?,கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள் என்பது இதுதான்.

காந்திக்கும் அந்த வணிகனுக்கும் என்ன உறவு என்பது பற்றி ஒரு வரலாற்றுகுறிப்புமில்லை. ஆனால் உறவு இருந்திருக்கின்றது.

பல இடங்களில் படித்த செய்திதான், காந்திக்கு வஉசி மேல் என்ன கோபம்?

வஉசி கப்பல் ஓட்டியதை கண்டபின் காந்தி ஏன் அவசரமாக இந்தியா வந்தார்?

இருமுறையும் பணம் தாமதித்த அவசியம் என்ன? நிச்சயம் காந்தி மறந்திருக்கமுடியாது, ஏதோ பெரும் காரணம் இருக்க வேண்டும்? தடுத்த சக்தி எது? அல்லது காந்திக்கு வஉசி மேல் என்ன கோபம்?

அடுத்த கட்ட போராட்டத்தில் உசியினை காந்தி ஏன் சேர்த்துகொள்ளவில்லை?

இப்படி பல கேள்விகள் எழுகின்றன, இந்த சம்பவத்தை பற்றி காந்தி சத்திய சோதனையில் ஏதும் சொன்னதாகவும் தெரியவில்லை

ஏன் இப்படி செய்தார் காந்தி??

அவர் மீது இப்படி ஏகபட்ட குற்றசாட்டுகள் உண்டு, நிச்சயமாக உசிக்கும் காந்திக்கும் நேரடி பகை இல்லை, பின்னும் அவரை அலையவிட்டிருக்கின்றார் என்றால் ஏதோ இருந்திருக்கின்றது

யாரோ சொல்லித்தான் காந்தி இப்படி

எல்லாம் நடந்திருக்க வேண்டும், சொல்லிகொடுத்தவன் இந்தியனாக இருக்க வாய்ப்பே இல்லை.

இந்த சிதம்பரத்துக்கு எதிராக காந்தி செய்த கொடுமை அன்று ஏக பிரசித்தம், தமிழகம் காந்தி மேல் கொலை வெறியில் இருந்தது.

காந்தி கணக்கு எனும் பெயர் வந்தது இப்படித்தான்

இதை மாற்றத்தான் காந்தி அழகான நாடகம் ஆடினார், ஆம் தமிழகத்தில் ஏழை விவசாயி மேலாடை இன்றி இருப்பதாகவும் அதனால் தானும் மேலாடை அணியபோவது இல்லை என்றும் பெரும் நாடகம் ஆடினார்

எல்லாம் வஞ்சகம், அழகான அரசியல் நாடகம்

தமிழன் ..சிக்கு சில நூறும் ஆயிரமும் கொடுக்க காந்தி பாகிஸ்தானுக்கு உடனடியாக 50 கோடி கொடு என உண்ணாவிரதம் இருந்தால் யார் பொறுபபர்கள்?

ஏன் இப்படி பச்சை துரோகம் சிதம்பரத்ததுக்கும் பச்சை ஆதரவு ஜின்னாவுக்கும் செய்தார் காந்தி?

காந்தி மியூசியம் என மங்கம்மாள் மாளிகையினை மதுரையில் மாற்றியது பெரும் தவறு, அது நீக்கபட்டு மறுபடி அது ராணி மங்கம்மாள் மாளிகையாக வரலாற்றுக்கு திரும்ப வேண்டும்

தமிழ்நாட்டில் செய்ய வேண்டிய மிக அவசியமான காரியம் அது, மங்கம்மாளை விட காந்தி இன்றும் தென்னாட்டுக்கு கிழித்து எறிந்துவிடவில்லை

மங்கம்மாளின் ஆட்சி பொற்காலம், சாலை முதல் ஏரி குளம் என அவள் அமைத்தது ஏராளம்

அந்த மாதரிரி மாளிகையில் இந்த பித்தலாட்டா காந்தியின் நினைவும் படமும் பெயரும் இருப்பதே மாபெரும் அவமானம்

ஒருநாள் அது துடைத்தெறியபடும், நிச்சயம் நடக்கும்


நன்றி இணையம்