வேண்டும் பலனை நிச்சயம் தரும் சோமவாரவிரதம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:15 PM | Best Blogger Tips

 



வேண்டும் பலனை நிச்சயம் தரும் சோமவாரவிரதம்!

இன்று(16-11-20)

கார்த்திகை மாத முதல் சோமவாரம்.

சோமவாரவிரதம்

இருக்கும் முறை:

இந்த விரதத்தை

எந்த மாதத்திலும் ஆரம்பிக்கலாம்.

16சோமவாரங்கள்

முழு பட்டினி இருந்து சிவதரிசனம் செய்து பின்வரும் கதையை ஒருவரிடம் சொல்லவேண்டும்.

ஒருவரிடமும் சொல்ல சந்தர்ப்பம் இல்லை என்றால் சுவாமியின் முன்பும் அல்லது துளசி மாடத்தின் முன்பும் அல்லது பசுமாட்டின் முன்பும் சொல்லலாம்.

காபி, பால், பழம் முதலியன சாப்பிட்டுக் கொள்ளலாம்.

உப்பு புளிப்பு கூடாது.

மடியாக ஆடை உடுத்தி ஆசாரத்துடன் விரதம் இருக்கவேண்டும்.

கதை சொல்லும் போது கையில் சிறிது அட்சதை வைத்துக் கொள்ள வேண்டும்

சோமவாரக் கதை!

ஒரு ஊரிலே ஒரு கோயில் இருந்தது. அந்தக் கோயில் கோபுரம் மிகவும் பழுதடைந்து இருந்தது.

ஆகையால் அவ்வூர் ஜனங்கள் அக்கோயிலில் பூதம், பிசாசுகள் வாசம் செய்கிறது என்று பிரச்சாரம் செய்துவிட்டார்கள்.

ஆகையால் எவரும் அக்கோயிலுக்குப் போகவில்லை.

ஆனால் அது சின்னச் கோயிலாக இருந்தாலும் வாசனையுள்ள பூக்களும் நல்ல மூலிகைகளும் நிறைந்து இருந்தது.

அதனால் ஈஸ்வரர், ஈஸ்வரி அங்கு வந்து சதுரங்கம், சொக்கட்டான் முதலியன விளையாடிக் கொண்டும், சத்சங்கம் செய்து கொண்டும் அமைதியாக இருப்பார்கள்.



ஒரு சமயம் இருவரும் விளையாடுகையில் பார்வதி தேவி ஜெயித்தார்.

ஈசுவரர் நானே ஜெயித்தேன் என்றார்.

எனவே மறுபடியும் இருதடவை அவர்கள் விளையாடியும் பார்வதி தேவியே வென்றார்.

ஆனாலும் ஈசுவரர்,

நானே வென்றேன் என்றார்.

உடனே பார்வதி தேவி, தோற்றுவிட்டு நானே வென்றேன் என்று பொய் கூறுகிறீர்களே என்று கூறி கோபித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.

ஈசுவரர் சங்கல்பத்தில் அப்பொழுது ஒரு தபோதனர் அங்கு வந்தார்.

அவரைப் பார்த்த அம்பாள் இந்த பிராமணரிடம் யார் வென்றோம், என்று கேட்போம் என்றார்.

ஈசுவரரும் அதற்கு சம்மதித்தார்.

அப்பிராமணர் அருகில் வந்ததும், எங்கள் இருவரில் யார் வென்றார்கள்? என்று கேட்டார்கள்.

அதற்கு பிராமணர் காதால் கேட்பதைக் காட்டிலும் கண்ணால் காண்பது நன்று என்றவுடன் இருவரும் மறுபடியும் மூன்று தடவை விளையாடினார்கள்.

மூன்று முறையும்

தேவியே ஜெயித்தார்.

ஆனால் பிராமணர் அம்பாள் ஜெயித்தாலும் ஈசுவரரே ஜெயித்தார் என்று கூறினார்.

இதைக் கேட்ட தேவி கோபாவேசமாகி துர்க்கையாக மாறி சாதாரண விஷயத்திற்கு பிராமணர் பொய் பேசியதால் பிராமணருக்கு குஷ்டம் ஆகக்கடவது என்று சாபமிட்டார்.

உடனே அந்த இடத்திலேயே பிராமணருக்கு இரத்தம் ஒழுகி உடம்பு முழுவதும் நாற்றம் எடுத்து சீழ், புழு முதலியன வெளியேறியது.

அவ்வியாதியின் கஷ்டம் தாங்காமல் பிதாவிடம் விமோசனம் கேட்டார்.

அதற்கு பிதா அம்பாள் இட்ட சாபம் இட்டது தான்; அதை மாற்ற முடியாது என்றார்.

ஆனால் பிதா தன் சங்கல்பத்தினால் சோமவார சமத்காரம் நடத்த நினைத்தார்.

ஈஸ்வரர் இப்படி சொன்னவுடன் பிராமணர் தன் தேக உபாதை தாங்க முடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்து கிணற்று அருகில் சென்றார்.

அப்பொழுது ஈசுவரர் சங்கல்பத்தில் அங்கு

ஒரு அப்சரஸ்திரி இந்திரலோகம் போய்க்கொண்டிருந்தாள்.

அவளும் இந்திரன் சாபத்தினால் பூலோகத்தில் அவதாரம் எடுத்து சோமவார விரதம் இருந்து சோமவார சமத்காரத்தினால் சாபம் தீர்ந்து இந்திரலோகம் போய்க் கொண்டிருந்தாள்.

அவள் கிணற்றில் விழச்சென்ற பிராமணரைப் பார்த்து, சுவாமி தங்களைப் பார்த்தால் மகரிஷி மாதிரி தெரிகிறதே; தற்கொலை செய்து கொண்டால் ஏழு ஜென்மத்திற்கும் பாவமாயிற்றே !

பிராமணராய் இருந்தும் ஏன் கிணற்றில் விழப்போகிறீர்கள்? என்று கேட்டாள்

.அதற்குப் பிராமணர், பூலோகத்தில் இந்த பாவ உடலை வைத்துக் கொண்டு நான் ஏன் இருக்க வேண்டும் என்றார்.

அதற்கு அப்சரஸ்திரி

16 சோமவார விரதத்தினால் உங்கள் வியாதி குணமாகிவிடும்.

ஆனால் எனக்கு அதைப்பற்றி சொல்ல நேரமில்லை.

நீங்கள் அருகிலுள்ள விதர்பநகர் சென்றால் அங்கு கிணற்றடியில் இருக்கும் பெண்கள் சோமவார விரத மகிமையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.

அவர்களிடம் சென்று குரு, சிஷ்யபாவமாக சோமவார விரத மகிமையைக் கேட்டால் அவர்கள் சொல்வார்கள்.

அதன்படி சோமவார விரதம் இருந்து வந்தால் உங்கள் வியாதி குணமாகிவிடும், என்று சொன்னாள்.

அந்த தபோதனர் ஸ்திரியிடம் விடைபெற்று விதர்பநகர் சென்றார்.

அங்கு கிணற்றடியில் இருக்கும் பெண்களை சிறுபெண்கள் என்றுகூட நினைக்காமல் நமஸ்காரம் செய்து சோமவார விரத மகிமையைப் பற்றி கேட்டார்.

அவர்கள் எல்லோரும் சோமவார விரதத்தால் தங்களுக்குத் கிடைத்த பலாபலன்களைக் கூறினார்கள்.

மேற்படி விரதத்தின் மகிமையையும் செய்யும் முறையையும் கூறினார்கள்.

கார்த்திகை மாதத்தில் நான்கு முறையும் அடுத்த கார்த்திகை மாதத்தில் நான்கு வருடத்தில் 16 சோமவார முறையும் முடிக்கலாம்.

ஆவணியில் ஆரம்பித்தும் நான்கு வருடம் விரதம் இருந்து முடிக்கலாம்.



செய்யும் முறை

சிவபூஜை செய்ய வேண்டும்.

சிவபக்தியுடன் 16 சோமவார விரதம்

இருந்து முடிக்க

வேண்டும்.

16 சோமவாரம்

விரதங்கள் முடிந்தபின் மறுநாள் காலையில்

16லட்டுகள் செய்து கோயிலுகொண்டுபோய் நைவேத்தியம் செய்து அங்குள்ளவர்களுக்கும் கொடுத்து; தானும் சாப்பிட்டு; ஒரு லட்டை பசு மாட்டிற்குக் கொடுத்து; மீதியை வீட்டிற்குக் கொண்டு வந்து பெரியவர்களுக்கும் கொடுத்து; விளக்கு வைக்கும் நேரம்வரை பூஜை செய்த லட்டை வைத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும் கொடுத்துவிட வேண்டும்.

அன்று யாரிடமும் கோபம் கொள்ளக்கூடாது.

இப்படிச் செய்தால் எந்தவிதமான கஷ்டமும் இருக்காது என்று அப்பெண்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு

வரும் வழியில் ஒரு முதியவளிடமும் சோமவார விரத மகிமையைக் கேட்க அவளும் அப்பெண்கள் கூறியதையே கூறினாள்.

பிராமணர் இவ்விரதத்தை 2 வருடங்கள் 8 சோமவாரம் செய்தார்.

விரத மகிமையால் பிராமணரின் வியாதி குணமாகியது.

இவ்வாறு சோமவார விரதம் இருப்போருக்கு அவரவர் வேண்டும் பலனை நிச்சயம் தருவார் என்பது உறுதி.

சோமவார விரத லட்டு செய்யும் விதம்

தேவையான பொருட்கள் :

நெய் 1/4 கிலோ

கோதுமை மாவு

1/2 கிலோ

வெல்லம் 400 கிராம்

செய்யும் முறை :

முதலில் கோதுமை

மாவை நன்றாக சலித்துக்கொண்ட பிறகு அதை வறுத்து கீழே இறக்கி வைத்துக்கொண்டு காய்ச்சிய நெய், பொடி செய்த வெல்லத்தையும் மாவுடன் நன்றாகக் கலந்து கொண்டு பின் சிறிய சிறிய உருண்டைகளாக லட்டு பிடிக்க வேண்டும் .

சிவ சிவ!சிவ சிவ!!

 

நன்றி இணையம்