1800ல்.. OLD TANJORE ... பழைய டாஞ்சூர்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:26 AM | Best Blogger Tips

 May be a black-and-white image of the Tiber River and the Arno River

1800ல்.. OLD TANJORE ... பழைய டாஞ்சூர்.. தஞ்சாவூர் கோட்டை கீழக்கு வாசல்... 
 
தஞ்சாவூர் கோட்டை, அகழி.. கிழக்கு வாசல் .... 
 
கீழவாசல் இப்படிதான் இருந்தது 1800ல் ..
 
இந்த உண்மை ஓவியம் வெள்ளைக்கார ஓவியர் சாமுவேல் டேவிஸ் அவர்களால் 1777 - 1808 காலகட்டத்தில் இந்த தஞ்சையின் கிழக்கு வாயிலின் ஓவியம் வரையப்பட்டது. கூர்ந்து கவனித்தால்... இப்போதுள்ள பீரங்கி மேடு கோட்டையினுள் தெளிவாக தெரிகின்றது.
 
இப்போதுள்ள ஈஸ்ட் போலீஸ் ஸ்டேஷன் இடத்தில் இருந்து பார்க்கும் போது ... அந்த காலத்தில் இப்படி தான் இருந்தது.
 
இப்போதுள்ள கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் தான் தஞ்சையில் இரண்டாவது காவல் நிலையம் .. 
 
முதன் முதலாக வெள்ளைக்காரர்களால் இப்போதுள்ள தாலுக்கா போலீஸ் ஸ்டேஷன் தான் முதல் ஸ்டேஷன். போலீஸ் நிர்வாக அமைப்பு 1859ல் ஆரம்பிக்க பட்ட பின் உருவானது ... அந்த கால கட்டத்தில் இப்போதுள்ள கீழவாசல் போலீஸ் நிலையமும் உருவாக்கப்பட்டது. "தஞ்சாவூர் நாடு" (தஞ்சை கோட்டை பகுதி நீங்கலாக) 1799ஆம் வாக்கில் ஆங்கிலேயர் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு "டாஞ்சூர் டிஸ்ரிக்ட்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 
 
அதாவது கோட்டை சுவர் உள்ளே மராட்டா ராஜியம்.. கோட்டை சுவர், அகழி வெளியே வெள்ளையர்கள் நாடு !! 
 
அதன் பிறகு 1855ஆம் ஆண்டு முதல் கோட்டை பகுதியும் ஆங்கிலேயர் வசம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது ..
 
கீழவாசல்: கிழக்கு வாசல் கோட்டை நுழைவு வாயில் .. மற்றும் கோட்டை கதவு .. நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது ..
 
நாயக்க மன்னர்கள் தான் இப்போது உள்ள அரண்மனை, கோட்டை, மற்றும் அகழி, அமைப்புகளை 1535 முதல் 1560 வரை ஏற்படுத்தினார்கள் .
 
பழைய சோழர் கால அரண்மனை வடவாற்றின் தென் கரையில், சீனிவாசபுரம் மற்றும் மேலவெளி பகுதிகளில் இருந்தது. அது 1279 ஆம் ஆண்டில் பாண்டிய மன்னரால் எரித்து அழிக்கப்பட்டது என்பதினை வரலாற்று அறிஞர்கள் /ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். சோழர் கால சிறு அரண்மனை, "பொன்னியின் செல்வன்" நூலில் கல்கியின் கற்பனையில் வரும் அரண்மனை போன்று இருந்திருக்க கூடும்.
 
இரண்டு வகையான கோட்டைசுற்று சுவர்கள் தஞ்சையில் நாயக்கர்களால் கட்டப்பட்டன .. ஒன்று.. நான்கு வீதிகளையும் உள்ளடக்கிய பெரிய கோட்டை ... இரண்டாவது ... பெரியகோவிலையும், சிவகங்கை தோட்டத்தையும், குளத்தையும் உள்ளடக்கிய சிறிய கோட்டை. இவை இரண்டும் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. சிறிய கோட்டை தஞ்சையின் பெரிய கோட்டையை விட பழமையானது. சீனிவாசபுரத்திற்கு அருகே இடிந்து விழுந்து கிடந்த, அழிக்கப்பட்ட சோழர் அரண்மனையின் கற்களை கொண்டு, கோட்டை கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. 
 
இவைகளை தஞ்சையின் பிரபல ஆராய்ச்சியாளரும் முன்னாள் சரஸ்வதி மஹால் சீனியர் லைப்ரரியன் திரு குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் போதிய ஆதாரங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
 
கோட்டை உருவாக்கப்பட்டபோது இரண்டு பெரிய நுழை வாயில்கள் தான் இருந்தன .. இவைகள் அகழியின் மீது பால அமைப்புகளுடன் இருந்தன. ஒன்று ... பழைய ராஜாகாலத்து ரோடு... திருவாடி சாலை .. (இப்போதய ராஜ கோரி ரோடு) கோட்டையை வந்து அடையும் இடத்தில்.. 
 
வடக்குவாசல் .. ... மற்றும் மாரியம்மன் கோயில் பழைய ரோடு , விளார் ரோடு, நாஞ்சிகோட்டை ரோடு இணைக்கும் வகையில் கீழவாசல். தெற்கிலும் மேற்கிலும் இன்ஸ்பெக்ஷன் கதவு போன்ற மிக சிறிய வாயில்கள் .. இதற்கு அகழி பாலம் கிடையாது .
 
கீழவாசல் ... சிவகங்கை பூங்கா கோட்டை வளாகம் நுழைவு கோட்டை வாயில் போல இருந்தது. 1994ல் . வெளியூர் அதிகாரிகள் அதன் அருமை தெரியாமல் .. நகரை மேம்படுத்துவதாக நினைத்து ...அதனை இடித்து தள்ளி விட்டார்கள் ..
 
அதனை அப்படியே பாதுகாத்து .. இப்போது அங்கு அமைக்கப்பட்ட பெரிய ரௌண்டானாவில் ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக வைத்து இருந்தால் ... அதன் வரலாறு பெருமை தஞ்சையின் இளையதலைமுறையினருக்கு தெரிய ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் ..இப்போது அந்த வாய்ப்பு இல்லாமல் போயிற்று .
 
**
Abdul Jaleel அவர்கள்: "..தஞ்சை "கீழவாசல் கேட் வாசலை இடிப்பது 1958வாக்கில் தொடங்கியது .. கோட்டை வாசல் மட்டும் விட்டு விட்டு சுவரை இடித்து... வெள்ளய்ப்பிள்ளயார் கோயில் பக்கம் இருந்து வரும் பேருந்துகளுக்கு வழி அமைக்கப்பட்டது ... அதன் பிறகு சிறிது சிறிதாக கோட்டை வாசலும் இடிக்கப்பட்டது ...
 
நான் அருகில்,அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற பள்ளியில் படிக்கும் போது .... இந்தக்கோட்டை வாசலை மூன்றாண்டுகள்... தினமும் 4 முறை கடந்துசெல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது....
இன்றும் அந்த பாதையைக்கடந்து செல்லும்போது மனது கனக்கிறது..... "
 
 

🙏🌹 நன்றி             🌹🙏

 
 
(Picture: Painting of The East Gate at Tanjore (S. India). By Samuel Davis, between 1777 and 1808).
 

🙏🌹 நன்றி             🌹🙏

(தொகுப்பு : AYS பரிசுத்தம் அந்தோனிசாமி M.A., B.L.,. தஞ்சாவூர்
// S.P.Anthonisamy, Senior Advocate, Thanjavur)