பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் பற்றி ...

மணக்கால் அய்யம்பேட்டை | 11:56 AM | Best Blogger Tips

May be an image of 3 people and text 

இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு அவர்களுடைய வழக்கு ஒன்று உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருந்தது..
 
அதை ஒரு வழக்கறிஞராக நின்று முடித்துக் கொடுத்தவர் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள்..
 
அதற்கு கைமாறாக ஒரு பெரிய பெட்டி நிறையா பணத்தை கொண்டு போய் பாபாசாகேப்புக்கு கொடுத்திருக்கிறார் ஜி.டி.நாயுடு..
 
பாபாசாகேப் சொன்னாராம் “இந்தப் பணம் எனக்கு வேண்டாம்; அதற்கு பதிலாக நான் எப்போதும் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் என் பயணச்செலவையும்; அங்கே நான் தங்குவதற்கான செலவையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்" என்றிருக்கிறார்..
 
ஜி.டி.நாயுடு-வும் மகிழ்ச்சியோடு சம்மதித்திருக்கிறார்..
 
பாபாசாகேப் டெல்லியிலிருந்து வருவதாக இருந்தால் தமிழகத்தில் ஐந்து நட்சத்திர விடுதியில் தான் ரூம் புக் பண்ணுவாராம் ஜி.டி.நாயுடு..
 
'பாபாசாகேப் என் விருந்தாளி, அத்தோடு அவரை வரவேற்று விருந்து உபசரிப்பதில் நாம் பெருமை கொள்கிறேன். அவரை நான் சிறப்பாக கவனிக்க வேண்டும்' என்று அருகே இருந்தே பார்த்துக்கொள்வாராம்..
 
ஒரு முறை நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தவரை ஹிந்து பத்திரிக்கை ரிப்போர்ட்டர் பேட்டி எடுக்க வந்திருக்கிறார்..
பேட்டி எடுக்கும் முன்னரே கேட்டிருக்கிறார்..
“டாக்டர் அம்பேத்கர், காந்திஜி அவர்கள் மிகவும் ஏழ்மையாக வாழ்கிறார், கதர் ஆடை உடுத்துகிறார், மேல் ஆடையே உடுத்துவதில்லை.
 
ஆனால் நீங்களோ ஏன் இவ்ளோ ஆடம்பரமான இடத்தில் தங்கியிருக்கிறீர்கள்; அத்தோடு எப்போதுமே கோட் சூட் போட்டு வெள்ளைக்காரன் போலவே வலம் வருகிறீர்களே ஏன்?"
பாபாசாகேப் சிரித்துக் கொண்டே பதிலளித்தாராம்..
 
"காந்தி அவர்கள் பல்வேறு வகையில் உளவியலாக பாதிக்கப்பட்ட எம் மக்களை மேலும் உளவியலாக தாக்குகிறார், காந்தியே சட்டை இல்லாமல் இருக்கிறார், நாம சட்டை போடாவிட்டால் என்ன என்று ஏற்கனவே சட்டை போடாத எம் மக்கள் அதைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள்; அப்புறம் எப்படி அவர்கள் அதிலிருந்து விடுதலை பெறுவார்கள்..
 
நான் கோட் சூட் போடுகிறேன், விலையுயர்ந்த ’டை’ மட்டும் ’சூ’ போடுகிறேன். மிகவும் ஆடம்பரமான இடத்திலிருந்து கொண்டு எம்மக்களை இங்கே வரச்சொல்லி சந்திக்கிறேன்;
 
என்னை இந்த இடத்தில் பார்க்க வருகிறவன், நல்ல உடை உடுத்த முயல்வான், அதற்காக சம்பாதிக்க உளவியலாக அவனின் மனம் தயாராகும்; 
 
உழைப்பான்; சட்டையே போடாமல் திரிந்தவன் புத்தாடை உடுத்துவான் என்றிருக்கிறார். வெற்று உடம்பிலிருந்து நல்ல உடைக்கு மாறுவான்…"
 
வாயடைத்துப் போய் நின்றிருக்கிறார் அந்த ஹிந்து பத்திரிக்கை ரிப்போர்ட்டர்..
 
படம்: கோவை ஜிடி நாயுடு இல்லத்தில் அண்ணல்..

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷