1)எண்ணங்கள்
எண்ணிக்கையில்
வந்தால் தெளிவு...
2)எண்ணங்கள்
எண்ணிக்கை இல்லாமல்
வந்தால் குழப்பம்...
3)எண்ணங்கள்
நன்மை தருவதாக
வந்தால் வெற்றி...
4)எண்ணங்கள்
எதிர்பார்ப்போடு
வந்தால் சுயநலம்...
5)எதையும்
எதிர்பார்க்காத
எண்ணங்கள்
பொதுநலம்...
6)எண்ணங்கள்
விஸ்தாரமானால்
வியாதி...
7)எண்ணங்கள்
விசாலமானால்
ஆரோக்கியம்...
8)எண்ணங்கள்
சுபமானால்
மங்களம்...
9)எண்ணங்கள்
சிறந்ததானால்
அறிவு...
10)எண்ணங்கள்
தாராளமானால்
புகழ்...
11)எண்ணங்கள்
தரமானதானால்
உயர் நிலை...
12)எண்ணங்கள்
தாழ்ந்து விட்டால்
தாழ்வு மனப்பான்மை...
13)எண்ணங்கள்
அதிகாரமானால்
அகங்காரம்...
14)எண்ணங்கள்
பணிவானதானால்
மகான் தன்மை...
15)எண்ணங்கள்
கட்டுப்பாடுடன் இருந்தால்
மரியாதை...
16)கட்டுக்கடங்காத
எண்ணங்கள்
ஆவேசம்...
17)வஞ்சனை
எண்ணங்கள்
பொறாமை...
18)வஞ்சிக்கும்
எண்ணங்கள்
பழிவாங்குதல்...
19)ஆசை
எண்ணங்கள்
இச்சை....
20)இச்சை
எண்ணங்கள்
காமம்...
21)மூர்க்க
எண்ணங்கள்
கோபம்...
22)விடாப்பிடியான
எண்ணங்கள்
பற்று...
23)தகுதி மீறிய
எண்ணங்கள்
பேராசை...
24)குணங்கள் நிறைந்த
எண்ணங்கள்
மனிதாபிமானம்...
25)குற்றமில்லாத
எண்ணங்கள்
தெய்வீகம்...
26)தெய்வீக
எண்ணங்களே
ஆன்மீகம்...
27)ஆன்மீக
எண்ணங்களே
ஆன்ம நிலை...
28)ஆன்ம நினைவே
பரமாத்ம நினைவிற்கு
ஆதாரம்....
29)பரமாத்ம
நினைவே
மனித வாழ்விற்கு
ஆதாரம்...
30)ஆதாரம்
தந்தை ஈசனானால்
அதுவே வாழ்வில்
எண்ணங்களின்
சுதந்திரம்...
எனவே,

எண்ணம் போல வாழ்க்கை.
வாழ்க்கை போல வரலாறு.
எண்ணங்கள் சரித்திரமானால்
வரலாறு சித்திரமாகும்.
சித்திரம் என்பதே உனக்கு பூமியில் வைக்கும் சிலை ஆகும்.
வாழ்த்துக்கள்.
ஓம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கடவுளுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻
🌹🦚🌹
❤️💕💜💖💖❤️💜💖💕
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏