பெண்களுக்கு கால் வலி வர காரணம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:31 | Best Blogger Tips
        
     பழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள். ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் வலியோ கிடையாது. ஆனால் இப்போது இருக்கிற மார்டன் உலகில் நின்று கொண்டு தான் சமைக்கிறோம்.

அந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி, கினற்றில் நீர் இறைப்பது போன்ற வேலைகளை செய்வதால் உடற்பயிற்சி என்பது அதிலேயே எல்லாம் கிடைத்து விடுகிறது. இந்த காலத்தில் துவைக்க, அரைக்க, சாமான் கழுவ என்று எல்லாவற்றிற்கும் மிஷின் வந்து விட்டது.

இப்படி மிஷின் இருந்தும் சிலருக்கு அதில் இருந்து எடுத்து காய போட சோம்பேறி தனமாக இருக்கிறது. சமையலறையிலேயே இரண்டு மணி நேரமானலும் நின்று கொண்டு சமைக்கிறோம். சில‌ பேர் தான் கிச்ச‌னில் சேர் போட்டு கொண்டு கொஞ்ச‌ம் நேர‌த்திற்கொருமுறை உட்கார்ந்து கொள்வார்க‌ள்.

ஆனால் வேலைக்கு போகும் பெண்க‌ள், அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மா ச‌மைப்ப‌தால் அவ‌ர்க‌ளுக்கு நேர‌ம் இருக்காது. தகுந்த உடற்பயிற்சியின் மூலம் இது போன்ற வலிகளை தவிர்த்து கொள்ளலாம். முடிந்தவர்கள், நான்கு முறை மாடிப்படி ஏறி இரங்கலாம். ஸ்கிப்பிங் ஆடலாம். நீந்துதல் உடற்பயிற்சி செய்யலாம்.

நீந்துதல் உடற்பயிற்சி மூலம் அதிகப்படியான முதுகுவலி, இடுப்புவலி ,கால் வலி கூட சரியாகும். மன அழுத்தத்தையும் குறைக்கலாம். முடிந்த அளவு நடைபயிற்சி செய்யுங்கள். தினம் ஒருமணி நேரம் நடப்பதன் மூலம் சர்க்கரை வியாதி பிரஷரை கூட கட்டுபடுத்தலாம்.