வெள்ளை முடி வருவதை தடுக்கும் வழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:24 PM | Best Blogger Tips
 
    
    வயதாகி விட்டதை குறிக்கும் ஒரு இயற்கை செயல் தான் வெள்ளை முடி வருவது. அனைவருக்குமே ஒரு காலத்தில் நமது முடி நரைக்கும் என்பது தெரியும். ஆனால் அத்தகைய முடி 40 அல்லது 50-ல் தான் வெள்ளையாகும் என்று நினைப்போம்.

ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு 20 வயதிலேயே முடியானது நரைக்க ஆரம்பித்து விடுகிறது. இவ்வாறு கூந்தல் நரைப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

அந்த காரணத்தை சரியாக தெரிந்து கொண்டால், இளமையிலேயே கூந்தல் நரைப்பதை தடுக்கலாம்.

* இன்றைய அவசர மார்டன் வாழ்க்கை முறையில் அனைத்து இளம் தலைமுறையினருக்கும் உள்ள பிரச்சனை தான் நரை முடி.

ஏனெனில் அவர்கள் நிறைய டென்சன், மனஅழுத்தம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே தான் விரைவிலேயே நரை முடி வருகிறது.

உங்களுக்கு தெரியுமா? வயதானவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள், டென்சனுடன இருப்பதால் தான், அவர்களுக்கு நரை முடி ஏற்படுகிறது.

ஆகவே அத்தகைய டென்சனை சிறுவயதிலேயே வந்தால், நரை முடியும் வந்துவிடும். எனவே எப்போதும் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும்.

* தற்போதைய ஆய்வு ஒன்றில் தலையில் அதிகமான அளவில் பொடுகு இருந்தால், விரைவில் நரை முடி வந்துவிடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆகவே எப்போதும் தலையை சுத்தமாக, பொடுகில்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் தலையில் உள்ள பொடுகு நீக்குவதற்கு ஹென்னாவுடன், எலுமிச்சை சாறு சேர்த்து தடவி குளித்து வந்தால், பொடுகு எளிதில் நீங்கிவிடும்.

* நரை முடி உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டாலும் வரும். அதிலும் தற்போது உள்ள இளம் தலைமுறையினர் ஸ்லிம்முடன் இருக்க வேண்டும் என்பதற்காக டயட்டில் இருக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நரை முடியானது வருகிறது.

* கூந்தல் வெள்ளையாவதற்கு உடலில் காப்பர் சத்து குறைவாக இருப்பது முக்கிய காரணம் என்று தற்போதைய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் காப்பர் தான் உடலில் உள்ள நிறமூட்டும் மெலனின் என்னும் நிறமியை அதிகம் உற்பத்தி செய்கிறது.

ஆகவே இத்தகைய சத்து குறைபாட்டினால், கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் அளவு குறைந்து வெள்ளை முடி ஏற்படுகிறது.

மேலும் இந்த காப்பர் சத்து கடல் உணவுகளில் அதிகம் உள்ளது. அதிலும் நண்டில் அதிகம் உள்ளது. சைவ உணவு என்றால் எலுமிச்சை மற்றும் காளானில் இந்த சத்து உள்ளது.

* சிலசமயங்களில் எந்த காரணத்தினால் வெள்ளை முடி வருகிறது என்று சொல்ல முடியவில்லை என்று இருப்பவர்கள் அதனை நீக்க ஒரு இயற்கை மருத்துவத்தை மேற்கொள்ளலாம்.

அது பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்கு அரைத்து, தேங்காய் எண்ணெயில் ஒரு மணிநேரம் ஊற வைத்து பின் அதனை கூந்தலுக்கு தடவி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும்.

ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கருமையான கூந்தல் வெள்ளையாவதை தடுக்கலாம்.


thanks reetham