தோலின் நிறம் வேறுபடுவதேன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:25 PM | Best Blogger Tips

Photo: தோலின் நிறம் வேறுபடுவதேன்? 

மெலன்கோயட்ஸ் (Melancoytes) என அழைக்கப்படும் வண்ணம் தரும் உயிர்மங்களின் (Pigment forming cells) பின்னலமைப்பால் தோலின் நிறங்கள் உண்டாகின்றன. இந்தப் பின்னலமைப்பு மேல் தோலின் (Epidemis) ஆழமான அடுக்கில் உள்ள உயிர்மங்கள் சிதறிப் பரவி கீழே அமைவதால் ஏற்படுகிறது. இதனை ஸ்டேரட்டம் பாஸல் (Stratum basale) என அழைப்பர்.
 
வண்ண நிறமிகள் (Melancoytes) நுண்ணிய கிளைபோன்ற நீடிப்பு கொண்டதாயும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டு இருப்பதாயும் மேலும் மேல் நோக்கி மேந்தோலின் உட்பகுதியில் ஆழமாய் உயிர்மங்கள் இடையிடையே பரவியும் உள்ளன. ஒவ்வொரு சதுரமில்லிமீட்டரிலும் ஏறக்குறைய 1000 முதல் 3000 வரை தோலின் வண்ணம்தரு உயிர்மங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் உயிரகத்தோடு இணைப்பு விளைவாக, கறுப்புமை நிறமுடைய மெலானின் (Melanin) என்ற பெயர் கொண்ட நிறமியை உண்டாக்குகிறது.
 
இந்த உயிரகத்தோடு இணைவு செம்பு உடைய செரிமானப் பொருள் வகையால் கடுவினைக்குட்படுத்தப்பட்டு டைரோசினாஸ் (Tryosinase) என அழைக்கப்பட்டு அதனால் ஒளி நிழற்பட்டை நிறமாலை (Spectrum)யால் சிவப்பு நிறம் கொடுக்கப் பெற்றதாகிறது. பல்வேறு வடிவப் படி நிலைகளில் (stages of formation) வெளிறிய மஞ்சள் (Pale yellow) பழுப்பு மஞ்சள் (tawny) ஆரஞ்சு, நற்சிவப்பு, பழுப்பு, கடைசியாகச் செறிவான கறுப்பு ஆகிய நிறங்களை உற்பத்தி செய்கின்றன.
 
மனிதத்தோல் அதிகமான அல்லது குறைவான மெலானின் அளவு கொண்டது. சிவப்பு நிறத்தோல் கொண்ட இனத்தாரின் மெலன்கோயட்ஸ் ஆழ்தோல் அடுக்கு மிகக் குறைந்த அளவு வண்ண உயிர்மங்கள் கொண்டவை. கறுப்பு நிறத்தோல் இனத்தாரின் மேந்தோலின் மேலடுக்கில் வண்ண உயிர்மங்கள் மிக அதிகமாகப் படிந்து காணப்படுகின்றன.
 
மெலானின் (Melanin) துன்பம் தரும் ஒளிக்கதிர்களிடமிருந்து இயற்கையான பாதுகாப்பைப் பெற்றுள்ளது. சூரிய ஒளிபடும்போது மனிதனின் தோல் பொதுவாக மெல்லப் பதனிடப்படுகிறது. மெலானின் வண்ணப்பொருள் அதிகமாக இருப்பது அடியேயுள்ள இழைகளைப் பாதுகாக்க உதவுகிறது. பொன்னிறமாகவும் சிவப்பு நிறமாகவும் உள்ளவற்றில் வண்ண உயிர்மங்கள் மிகச் சிறியதாகவும் சீரில்லாமலும் எதிர்ப்பயன் தருகின்றன. இதன் விளைவாகச் சூரியப் பதனீட்டுத் தோற்றத்தை விடத் தவிட்டு நிறமுள்ள புள்ளிகள் ஏற்பட வாய்ப்புண்டு.
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.மெலன்கோயட்ஸ் (Melancoytes) என அழைக்கப்படும் வண்ணம் தரும் உயிர்மங்களின் (Pigment forming cells) பின்னலமைப்பால் தோலின் நிறங்கள் உண்டாகின்றன. இந்தப் பின்னலமைப்பு மேல் தோலின் (Epidemis) ஆழமான அடுக்கில் உள்ள உயிர்மங்கள் சிதறிப் பரவி கீழே அமைவதால் ஏற்படுகிறது. இதனை ஸ்டேரட்டம் பாஸல் (Stratum basale) என அழைப்பர்.

வண்ண நிறமிகள் (Melancoytes) நுண்ணிய கிளைபோன்ற நீடிப்பு கொண்டதாயும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டு இருப்பதாயும் மேலும் மேல் நோக்கி மேந்தோலின் உட்பகுதியில் ஆழமாய் உயிர்மங்கள் இடையிடையே பரவியும் உள்ளன. ஒவ்வொரு சதுரமில்லிமீட்டரிலும் ஏறக்குறைய 1000 முதல் 3000 வரை தோலின் வண்ணம்தரு உயிர்மங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் உயிரகத்தோடு இணைப்பு விளைவாக, கறுப்புமை நிறமுடைய மெலானின் (Melanin) என்ற பெயர் கொண்ட நிறமியை உண்டாக்குகிறது.

இந்த உயிரகத்தோடு இணைவு செம்பு உடைய செரிமானப் பொருள் வகையால் கடுவினைக்குட்படுத்தப்பட்டு டைரோசினாஸ் (Tryosinase) என அழைக்கப்பட்டு அதனால் ஒளி நிழற்பட்டை நிறமாலை (Spectrum)யால் சிவப்பு நிறம் கொடுக்கப் பெற்றதாகிறது. பல்வேறு வடிவப் படி நிலைகளில் (stages of formation) வெளிறிய மஞ்சள் (Pale yellow) பழுப்பு மஞ்சள் (tawny) ஆரஞ்சு, நற்சிவப்பு, பழுப்பு, கடைசியாகச் செறிவான கறுப்பு ஆகிய நிறங்களை உற்பத்தி செய்கின்றன.

மனிதத்தோல் அதிகமான அல்லது குறைவான மெலானின் அளவு கொண்டது. சிவப்பு நிறத்தோல் கொண்ட இனத்தாரின் மெலன்கோயட்ஸ் ஆழ்தோல் அடுக்கு மிகக் குறைந்த அளவு வண்ண உயிர்மங்கள் கொண்டவை. கறுப்பு நிறத்தோல் இனத்தாரின் மேந்தோலின் மேலடுக்கில் வண்ண உயிர்மங்கள் மிக அதிகமாகப் படிந்து காணப்படுகின்றன.

மெலானின் (Melanin) துன்பம் தரும் ஒளிக்கதிர்களிடமிருந்து இயற்கையான பாதுகாப்பைப் பெற்றுள்ளது. சூரிய ஒளிபடும்போது மனிதனின் தோல் பொதுவாக மெல்லப் பதனிடப்படுகிறது. மெலானின் வண்ணப்பொருள் அதிகமாக இருப்பது அடியேயுள்ள இழைகளைப் பாதுகாக்க உதவுகிறது. பொன்னிறமாகவும் சிவப்பு நிறமாகவும் உள்ளவற்றில் வண்ண உயிர்மங்கள் மிகச் சிறியதாகவும் சீரில்லாமலும் எதிர்ப்பயன் தருகின்றன. இதன் விளைவாகச் சூரியப் பதனீட்டுத் தோற்றத்தை விடத் தவிட்டு நிறமுள்ள புள்ளிகள் ஏற்பட வாய்ப்புண்டு.

 Via -நலம், நலம் அறிய ஆவல்.