* ஏலம்:
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் றி பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் உடனடியாக படிப்படியாக குறையும் .
*புளி:
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து நன்கு இடித்து எட்டு பங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் கூட உடனே ஆறும்.
* பாசிப்பயிறு:
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்று போட பால்கட்டு குறைந்து வீக்கமும் படிப்படியாக குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறைய ஆரம்பிக்கும்.
*பசி உண்டாக:
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கொள்ளவும் இதை அருந்த பசி உண்டாகும். .
* புங்கன்:
புங்கன் கொழுந்தை நன்கு அரைத்து நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டு வர வெள்ளை படுத்தல் தீரும்.
*அரிசிக் களிம்பு:
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து நன்கு அரைத்து கட்ட கட்டி கரையும்.
Via இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்