தேவையானவை:
உருளைக் கிழங்கு ...........1 /4 கிலோ
பெல்லாரி............................2
மிளகு பொடி......................1 தேக்கரண்டி
கடுகு, சீரகம்.......................1 /2 தேக்கரண்டி
எண்ணெய்..........................3 தேக்கரண்டி
உப்பு......................................தேவையான அளவு
கறிவேப்பிலை...................1 கொத்து
செய்முறை:
உருளைக் கிழங்கை பொடியாக, சதுரமாக வெட்டவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு வெடித்ததும், கறிவேப்பிலை + வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். அதிலேயே நறுக்கிய உப்பு + உருளைக் கிழங்கை போட்டு நன்கு வதக்கவும். அடுப்பை சிறு தீயாக எரியவிடவும். அடிக்கடி புரட்டி விடவும். உருளைக் கிழங்கு வெந்ததும் மிளகுப் பொடி போட்டு, நன்கு பிரட்டி, 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
குறிப்பு:
உருளைக கிழங்கு நமக்கு ரொம்ப பிடிக்கும் என்றாலும், உருளையின் தாயகம், தென் அமெரிக்காவின் பெரு தான். இதன் அருகிலுள்ள டிடிகாகா ஏரியின் அருகில் சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப் படுகிறதாம்.இவர்களுக்கு உருளையைக் காக்கும் தெய்வம் ஒன்றும் உண்டு. மாலுமிகள் மூலம் ஸ்பெயினுக்கு வந்தது. கி.பி.1600க்குப் பிறகே இந்தியாவுக்கு வந்தது. இதில் ஏராளமான வைட்டமின்களும், தாது உப்புக்களும் உண்டு. குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.