இந்தியா, கூடிய சீக்கிரமே ஓரு கலைத் துறையில் சாதனை படைக்கப்போகிறது. குஜராத் மாநிலத்தில் மிகப் பிரமாண்டமான சிலை ஒன்றை நிறுவப்போகிறார்கள். இது உலகில் உள்ள எல்லாச் சிலைகளையும்விட மிகப் பிரமாண்டமாக இருக்கும்.
'இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேல் உருவச் சிலையை உலகிலேயே மிக உயரமான சிலையாக, நர்மதா அணை அருகில் அமைக்கவிருக்கிறார்கள்.
தற்போதைய உலகின் உயரமான சிலை, சீனாவில் உள்ள புத்தர் சிலைதான். இதன் உயரம் 128 மீட்டர். இதை மிஞ்சும் வகையில் சர்தார் வல்லபபாய் படேல் உருவச் சிலையின் உயரம் 182 மீட்டராக இருக்கும். குஜராத் அரசு இந்தச் சிலையை நிறுவுகிறது.