படித்ததில் பிடித்தது

மணக்கால் அய்யம்பேட்டை | 5:52 PM | Best Blogger Tips


1. குடும்பம் என்பது அன்பும் மனைவியும் சுற்றமும் கலந்தது.
-
ஜப்பான்

2.
குடும்பத்தின் உணவுக்காகவும் உடைக்காகவுமே நாம் இரண்டு கால்களாலும் ஓடித் திரிகிறோம். - சீனா

3.
சொர்க்கத்திற்குச் செல்வதற்கான பயிற்சி நிலையமே குடும்பம். - அரேபியா

4.
குடும்பத்தில் வாழ்க்கையின் முற்பகுதி இரண்டாம் பகுதியை விரும்புவதிலேயே கழிகின்றது. இரண்டாம் பகுதி முதல் பகுதிக்காக வருந்துவதிலேயே கழிகின்றது. - பிரான்ஸ்

5.
மனிதனின் குடும்ப வாழ்க்கை, ஒரு குழந்தையின் கையிலுள்ள முட்டை போன்றது. - ருமேனியா

6.
குடும்ப வாழ்க்கையில் எவ்வளவு காலம் நாம் வாழ்ந்தோம் என்பது முக்கியமில்லை; எவ்வளவு நேர்மையாக வாழ்ந்தோம் என்பதே முக்கியம். - இங்கிலாந்து

7.
சந்தோஷமாக இருப்பவர்களுக்கு குடும்ப வாழ்க்கை சுருக்கம்; துக்கமாயிருப்பவர்களுக்கு வாழ்க்கை நீண்டது. - கிரீஸ்

8.
குடும்பம் என்பது ஓர் ஆடை; அதில் இருவகை நூல்கள் எப்போதும் இருக்கும். ஒன்று நன்மை. மற்றொன்று தீமை.
-
ஷேக்ஸ்பியர்

9.
குடும்பம் என்பது எளிய வாழ்க்கை; உயர்ந்த சிந்தனை.
-
வேர்ட்ஸ்வொர்த்

10.
சந்தோஷமான குடும்பங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கின்றன; துக்ககரமான குடும்பம் ஒவ்வொன்றும் வெவ்வேறு மாதிரியாக இருக்கின்றன. - டால்ஸ்டாய்

-
தொகுப்பு: நா.கிருஷ்ணவேலு, புதுவை.


நன்றி மைலாஞ்சி ( Mylanchi )