

கொலஸ்ட்ரால் என்றாலே எல்லாரும் பயப்படுகிறார்கள். அது இதயத்திற்கு ஆபத்தானது என்பது என்னவோ உண்மைதான். அதே சமயம் அது மூளைக்கு மிகவும் அவசியம் என்பதை மறந்து விடுகிறோம் என்று ஸ்வீடிஷ் மருத்துவ பல்கலைக்கழக அறிஞர் எர்னெஸ்ட் அரீனாஸ் கூறுகிறார்
அவர் நரம்பு வேர்செல்களை சோதனைத் தட்டுகளில் வளர்த்து வந்தபோது அதில் டோப்பமைன் என்ற கெமிக்கலை உருவாக்கும் நரம்பு செல்கள் கொலஸ்ட்ரான் வழிப்பொருளாகிய ஆக்ஸி கொலஸ்ட்ராலை வழங்கியபோது படு வேகமாக வளருவதைப் பார்த்தார்.
டோப்பமைன் என்ற கெமிக்கலை உற்பத்தி செய்யும் நரம்பு செல்கள் மூளையில் பற்றாமல் போகும்போது பார்க்கின்சன் என்ற நரம்புத் தளர்ச்சி நோய் பீடிக்கிறது. டோப்பமைன் செல்கள் சராசரி உற்சாகமான வாழ்க்கைக்கும் மிக அவசியம். அதன் பற்றாக்குறையால்தான் வன்முறை உணர்வுகள் தோன்றுகின்றன. திருப்தியற்ற மனக் கசப்புக்குக் காரணம் டோப்பமைன் பற்றாக்குறைதான் என்று பல மெடிக்கல் தகவல்கள் சொல்கின்றன.
கொலஸ்ட்ரானிலிருந்து ஆக்சி கொலஸ்ட்ரால் உருவாகிறது. கொலஸ்ட்ராலுக்கு பதிலாக ஆக்சி கொலஸ்ட்ராலை எடுத்துக்கொள்ளும் மருத்துவம் நல்ல பயனளிக்கும் என்பது எர்னெஸ்ட் அவர்களின் கணிப்பு.