
துளசி இலை - ஒரு கப்,
மிளகு - 2 டீஸ்பூன், சீரகம், துவரம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
தனியா - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் மிளகு, சீரகம், தனியா, துவரம்பருப்பை ஊற வைக்கவும். புளியை நன்றாக கரைத்து உப்பு, பெருங்காயத்தூள் போட்டு கொதிக்கவிடவும். ஊற வைத்த பொருட்களை அரைத்து சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் துளசியை அரைத்து அதனுடன் சேர்த்து, நுரைத்ததும் இறக்கி... எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும்.
துளசி, ஜலதோஷம் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.
நன்றி - அவள் விகடன்