தேவையான பொருட்கள்:
ரவை-200 கிராம்
முந்திரிப் பருப்பு-100 கிராம்
உலர்ந்ததிராட்சை-50 கிராம்
நெய்-200 கிராம்
சீனி-400 கிராம்
ஏலக்காய்த்தூள்- 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு வாணலியில் ரவையை பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். முந்திரிப் பருப்பை நறுக்கி வைக்க வேண்டும். 3/4 கப் சுடுநீரில் ரவையை 2-3 மணிநேரம் மாப்பதம் வரும் வரை ஊறவிட வேண்டும். பின்பு ஒரு கப் நீரில் சீனியைக் கரைத்து அடுப்பில் வைத்துக் காய்ச்ச வேண்டும். சீனிப்பாகு நூல் பதம் வந்ததும் ரவையைக் கொட்டிக் கிளற வேண்டும். நெய்யை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளற வேண்டும். அத்துடன் ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சையையும் சேர்த்துக் கிளற வேண்டும். கையில் ஒட்டாத பதம் வரும்போது ஒரு தட்டில் நெய்யை தடவி அதில் கலவையைக் கொட்டி பரவிவிட வேண்டும். விரும்பிய அளவு துண்டுகளாக வெட்டிப் பரிமாற வேண்டும்.