தேவையானவை:
பீர்க்கங்காய்...............1/2 கிலோ
சின்ன வெங்காயம்....10 மிளகாய்ப் பொடி .......1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி ............1 சிட்டிகை
கறிவேப்பிலை..........1 கொத்து
எண்ணெய் ..................2 தேக்கரண்டி
உப்பு.............................. தேவையான அளவு
தேங்காய்..+ சீரகம ..தேவையானால் 1 தேக்கரண்டி
கடுகு+ சீரகம்....................1/4 தேக்கரண்டி
செய்முறை:
பீர்க்கங்காயை தோல் சீவி, கொஞ்சம் பெரிதாக நறுக்கவும். வெங்காயம் நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் கொஞ்சம் தேங்காய் + சீரகம் வைத்து பரபரவென்று அரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு சீரகம் போட்டு, பொரிந்ததும், வெங்காயம்+உப்பு போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய பீர்க்கங்காய் போட்டு வதக்கவும். அடுப்பைக் குறைத்து சீராக எரிய விடவும். பீர்க்கங்காய் வதங்கியதும், அதிலேயே மஞ்சள் பொடி + மிளகாய்ப் பொடி போட்டு வதக்கவும். காய் வதங்கியதும், தேங்காய் போட்டு கிளறி 2 நிமிடம் கழித்து இறக்கவும்.
இந்த பீர்க்கங்காய் வதக்கல் படு சூப்பராய் இருக்கும். எந்த உணவுக்கும் நல்ல இணை.