இதை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால், வயிற்றுக்கு மிகவும் நல்லது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.
தேவையானவை:
தேவையானவை:
பாசிப்பருப்பு - அரை கப், வெந்தயம் - கால் கப், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று,
தயிர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் பாசிப்பருப்பை சிவக்க வறுக்கவும், வெந்தயத்தையும் சிவக்க வறுக்கவும். கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயையும் வறுத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பும் சேர்த்து நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடைந்த தயிரில் ஒரு டேபிள்ஸ்பூன் பொடியை கலந்து... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.
நன்றி - அவள் விகடன்