
பெரும்பாலான மக்கள் ஏதோ ஒரு சமயத்தில் ஓரளவு ஒவ்வாமையை அல்லது எதிர் விளைவை அனுபவித்திருப்பார்கள். மக்கள் தொகையில் பத்துசதம் பேர் ஏறக்குறைய நிரைபேறான ஒவ்வாமை நோய்களுக்குரிய அடையாளம் காண்பிக்கின்றனர்.
காரணம் எதுவானாலும் எப்போதும் ஒவ்வாமை யின் செயல் விளைவு ஒன்று போலவே இருக்கும். எதிர்ப் பொருள்களின் (antibodies) செயல் விளவுகளைப் போலவே இரத்த ஓட்டத்தில் அல்லாமல் உடல் உயிர்மங்களின் (nody cells) மேற்பரப்பில் அமைவதே அதற்குக் காரணம் என எண்ணப்படுகிறது.
இந்த ஒவ்வாமை எதிர் விளைவுகள் உயிர்மங் களின் சுவர்களைச் (cell walls) சிதைத்து இரண்டு எதிர்ச் செயல்களை (responses) உண்டாக்கும் இஸ்டமின் (histamine) என்ற பொருளை விடுவிக்கின்றன. குருதி நாளங்களிலிருந்து (blood vessels) சுற்றிலுமுள்ள இழைமங்களுக்கு (tissues) நீர்மங்களைத் (fluids) தப்பித்துப்போக அனுமதிக்கிறது. இது சில தசைகளின் இசிப்பை (spasm) அல்லது தானாகச் சுருங்குதலைக் கொண்டு வரும்.
ஒளி, வெப்பம், குளிர், மயிர், விலங்கின மெய் மயிர் ஆகிய ஒவ்வாமைப் பொருள்கள் உடலின் மேற்பகுதியில் படும்போது நமக்கு நமைச்சல் (itch) தோன்றும். சிப்பி நண்டின் நீர்வாழ் உயிரி (shell fish) காளான்கள், வெந்நிற விதைகள் கொண்ட சிவப்புப் பழவகை (strawberries)போன்ற உணவுப் பொருள்களும் ஒவ்வாமையை விளைவிக்கலாம். சில மருந்துச் சரக்குகளும் மருந்துகளும் கூட ஒவ்வாமையால் நமைச்சலை உண்டாக்கலாம். ஒவ்வாமைக்குரிய மணம் சுவாசிக்கப் பட்டாலும், தூசியினால் ஏற்படும் வேனிற்காலச் சளிக் காய்ச்சலில் ஏற்படும் விளைவைப் போல மிகையான சளி கசிவு (secretion of mucous) அல்லது ஆஸ்துமாவைப் போல நுரையீரல் காற்று வழிகளில் கடுமையான இசிப்பு (spasm) ஏற்படும்.