ராயல் சிக்கன்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:48 PM | Best Blogger Tips

ராயல் சிக்கன்  

தேவையானவை:

சிக்கன்..................1/2 கிலோ 
சின்ன வெங்காயம்...15 
இஞ்சி...........................1/2 இன்ச் நீளம் 
பூண்டு..........................8
முந்திரி.........................8
மிளகாய் பொடி....1/2 தேக்கரண்டி 
மல்லி பொடி.........1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி...........கொஞ்சம் 
மிளகு......................1/2 தேக்கரண்டி 
சீரகம்........................1/2 தேக்கரண்டி
சோம்பு.......................1/4 தேக்கரண்டி 
கசகசா.........................1/4 தேக்கரண்டி
பட்டை.......................சிறு துண்டு 
கிராம்பு.......................4
ஏலக்காய்..................2
ஜாதிக்காய்................கொஞ்சம்
புதினா, மல்லி..........கொஞ்சம் 
வெண்ணெய்/நெய் /எண்ணெய்...4தேக்கரண்டி
எலுமிச்சை.................1/2 மூடி 
தயிர்..............................1.தேக்கரண்டி 
உப்பு................................தேவையான அளவு 
பால்................................2 தேக்கரண்டி 
சோயா சாஸ் ,இருந்தால்.....2 தேக்கரண்டி

செய்முறை:

சிக்கனை நன்கு கழுவி நீரின்றி பிழிந்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். இஞ்சி பூண்டை அரைக்கவும். முந்திரி,மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு, ஜாதிக்காய்,புதினா+ மல்லிதழை இவற்றை நன்கு அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சிக்கனைப் போட்டு, அதில் அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகு சீரகம் விழுது, மிளகாய் பொடி, மல்லி பொடி, மஞ்சள் பொடி, தயிர், வெண்ணெய் /நெய், எலுமிச்சை சாறு, சோயா சாஸ் + உப்பு இவற்றைப் போட்டு நன்கு பிசைந்து வைக்கவும்.

இதனை அப்படியே குளிர் பதனப் பெட்டியில் சுமார் ஒரு மணி நேரம் வைக்கவும் . இதுதான் மாரினேஷன் (Marination) என்பது. குளிர் பதனப் பெட்டி இல்லையெனில், வெளியிலேயும் வைக்கலாம்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் அதிலேயே மசாலா போட்டு பிசைந்த சிக்கனைப் போட்டு, தீயை மிதமாக வைத்து கிளறி விடவும்.

சிக்கன் சுமார் 15 நிமிடத்திற்குள் பூப்போல வெந்துவிடும். இதில் கறிவேப்பிலை, மல்லிதழை +புதினா தூவி இறக்கவும்.

சுவை டக்கராக இருக்கும். இதனை இட்லி, தோசை, சப்பாத்தி எதனுடனும் துணைக்கு அழைக்கலாம். சாம்பார் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், பிரியாணி, பிரிஞ்சி சாதம் என எந்த சாதத்துடனும் தொட்டு சாப்பிடலாம். கலக்கலாக இருக்கும்.
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.
தேவையானவை:

சிக்கன்..................1/2 கிலோ
சின்ன வெங்காயம்...15
இஞ்சி...........................1/2 இன்ச் நீளம்
பூண்டு..........................8
முந்திரி.........................8
மிளகாய் பொடி....1/2 தேக்கரண்டி
மல்லி பொடி.........1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி...........கொஞ்சம்
மிளகு......................1/2 தேக்கரண்டி
சீரகம்........................1/2 தேக்கரண்டி
சோம்பு.......................1/4 தேக்கரண்டி
கசகசா.........................1/4 தேக்கரண்டி
பட்டை.......................சிறு துண்டு
கிராம்பு.......................4
ஏலக்காய்..................2
ஜாதிக்காய்................கொஞ்சம்
புதினா, மல்லி..........கொஞ்சம்
வெண்ணெய்/நெய் /எண்ணெய்...4தேக்கரண்டி
எலுமிச்சை.................1/2 மூடி
தயிர்..............................1.தேக்கரண்டி
உப்பு................................தேவையான அளவு
பால்................................2 தேக்கரண்டி
சோயா சாஸ் ,இருந்தால்.....2 தேக்கரண்டி

செய்முறை:

சிக்கனை நன்கு கழுவி நீரின்றி பிழிந்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். இஞ்சி பூண்டை அரைக்கவும். முந்திரி,மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு, ஜாதிக்காய்,புதினா+ மல்லிதழை இவற்றை நன்கு அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சிக்கனைப் போட்டு, அதில் அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகு சீரகம் விழுது, மிளகாய் பொடி, மல்லி பொடி, மஞ்சள் பொடி, தயிர், வெண்ணெய் /நெய், எலுமிச்சை சாறு, சோயா சாஸ் + உப்பு இவற்றைப் போட்டு நன்கு பிசைந்து வைக்கவும்.

இதனை அப்படியே குளிர் பதனப் பெட்டியில் சுமார் ஒரு மணி நேரம் வைக்கவும் . இதுதான் மாரினேஷன் (Marination) என்பது. குளிர் பதனப் பெட்டி இல்லையெனில், வெளியிலேயும் வைக்கலாம்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் அதிலேயே மசாலா போட்டு பிசைந்த சிக்கனைப் போட்டு, தீயை மிதமாக வைத்து கிளறி விடவும்.

சிக்கன் சுமார் 15 நிமிடத்திற்குள் பூப்போல வெந்துவிடும். இதில் கறிவேப்பிலை, மல்லிதழை +புதினா தூவி இறக்கவும்.

சுவை டக்கராக இருக்கும். இதனை இட்லி, தோசை, சப்பாத்தி எதனுடனும் துணைக்கு அழைக்கலாம். சாம்பார் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், பிரியாணி, பிரிஞ்சி சாதம் என எந்த சாதத்துடனும் தொட்டு சாப்பிடலாம். கலக்கலாக இருக்கும்.
 
 Via -நலம், நலம் அறிய ஆவல்.