நரேந்திர மோடியின் ஒரு வீர சகாப்தம்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:00 | Best Blogger Tips

 



நரேந்திர மோடியின் இடத்தை ராகுல்காந்தியால் பிடிக்க முடியாது என்று பிரசாந்த் கிஷோர் சொன்னது அபரிமிதமோ,பொய்யோ,விரக்தியோ அல்ல.ஒரு முழு உண்மை..இது எப்படியென விளங்க முடியாதவர்கள் அவரை களத்தில் எதிர்த்து நிற்பதே முட்டாள்தனம் என சொல்கிறார்.இதை அவர் சொல்லக் காரணமே இனிமேலாவது புரிந்து அரசியல் செய்யுங்கள் என்றுதான்.



முதலில்,ஒரு மாநில தேர்தலில் மோடி பிரச்சாரம் செய்து வருகிற வாக்குகளுக்கும் அதே அவர் நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்து வாங்குகிற வாக்குகளுக்கும் இடையே உள்ள வித்தியாஸத்தை கவனியுங்கள்.

2018 ல் கர்நாடகாவில் எடியூரப்பாவிற்கு ஓட்டு கேட்ட போது 36% வாக்குகள் கிடைத்தது.ஒரே வருடத்தில் 2019 தேர்தலில் மோடி தனக்கு வாக்கு கேட்ட போது 51% வாங்கியது பாஜக.இதே போல ம.பியில் சௌகானுக்கு கேட்ட போது 41% வாக்குகள் வந்தது,ஒரே வருடத்தில் மோடி தனக்கென்று வாக்கு கேட்ட போது 58% வந்தது.ராஜஸ்தானில் ராணிக்கு 39% கிடைத்தது,மோடிக்கு 60% கிடைத்தது.சத்தீகரில் ராமன் சிங்கிற்கு 33% அதுவே மோடிக்கு 51%.


இந்த இடைவெளியை கவனித்தாலே இந்தியாவில் நரேந்திர மோடி என்கிற தலைவனின் ஒப்பற்ற வீச்சு என்னவென்று புரியும்.பாஜகவின் ஓட்டு,மோடியின் ஓட்டு என இரண்டாக பிரித்துப் பார்க்க தெரியாதவனால் இந்திய அரசியலில் மோடி யார் என்பதையே அறிந்துகொள்ள முடியாது..

இந்தியாவில் மிகப்பெரிய செல்வாக்கு கொண்ட பிரதமர்களான நேரு மற்றும் இந்திராவாலேயே இப்படிப்பட்ட அரசியலை செய்ய முடியவில்லை என்பதே வரலாற்று நிதர்சனம்..இவர்களாலேயே சாதித்திருக்க முடியாத ஒன்றை ராகுல் வந்து சாதிப்பார் என்று நம்புவதே முதலில் மடத்தனம்.

வெறுமனே பிராமணர் - பனியா - ராஜ்புத் போன்றவர்களின் கட்சி பாஜக என்கிற நிலையை எல்லாம் உடைத்து..OBC - பட்டியல் பிரிவினர்களின் எழுச்சியை இன்று முழுமையாக உள்வாங்கிக் கொண்டு எழுந்து நிற்கிறது பாஜக..எந்த OBC - SC தலைவரும் மோடியை திட்டி மாநில வெற்றியை பெற முடியாத நிலையை மோடி உருவாக்கிவிட்டார்..

முலாயமோ லல்லுவோ நரேந்திர மோடியை திட்டினால் இதர OBC சமூகங்கள் இவர்களுக்கு வாக்களிக்காது.மாயாவதி மோடியை திட்டினால் இதர பட்டியல் சமூகங்கள் அவருக்கு வாக்களிக்காது என்பதே பகிரங்கமான உண்மை..நரேந்திர மோடி இந்த சமூகங்களிடம் வஞ்சிக்கப்பட்ட சமூகங்களின் தலைவனாகவும்,மேல்தட்டு மக்களிடம் வளர்ச்சி நாயனாகவும்,எல்லோரிடமும் 'ஹிந்துக்களின் ஹிருதய் சாம்ராட்டாகவும்' விஸ்வரூபமெடுத்து நிற்கிறார்..


மோடியை வீழ்த்த வேண்டும் என்று நினைப்பவன் இன்னொரு மோடியாக மாற வேண்டும்.ஆனால் காலமென்னவோ அவர் ஒருவரைத்தான் கண்ணுக்கெட்டிய தூரம் வைத்திருக்கிறது.இந்த உண்மையை உணராமல் கிணற்று தவளையாக உளறிக்கொண்டிருக்கலாம்..அது நிஜமாகிவிடாது.

 


நன்றி இணையம்