மோடி கர்ஐனையில்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:04 | Best Blogger Tips

 


பைடனை முந்தினார் மோடி*.

*தூக்கத்தை தொலைத்தது பெய்ஜிங்.*

சீனாவுக்கு சிம்மசொப்பனாகவே காட்சி அளிக்க தொடங்கிவிட்டது இந்தியா. அதன் ஆக சிறந்த ராஜதந்திரத்தாலும் தேர்ந்த காய் நகர்த்தலாலும் உலக நாடுகள் பலவற்றில் அதன் மதிப்பு உயர்ந்துகொண்டே வருகிறது.

சமீபத்திய நாட்களில் சீனாவின் பொருளாதார சுணக்கங்களுக்கு இயற்கை பேரிடர் ஒரு காரணமாக இருந்தாலும் இந்தியா சுளுக்கெடுத்த கிடுக்குப்பிடி நடவடிக்கைகள் மூலம் சீனா பரிதவிக்கவே ஆரம்பித்து இருக்கிறது.

இந்தியாவுடனான கல்வான் மோதலுக்கு பிறகு சீனா உலகெங்கும் கட்டமைத்து வைத்திருந்த வர்த்தக வல்லரசு பிம்பம் சல்லி சல்லியாய் நொறுங்கி இருக்கிறது.

அப்போது அந்த சமயத்தில் இந்தியா எடுத்த இந்திய நகர்வுகளின் அர்த்தம் மற்றும் அதன் தீர்க்கமான முடிவுகளுக்கும் தற்போது தான் உலகத்துவர் பலருக்கும் புரிய ஆரம்பித்து ஆடிப்போய் இருக்கிறார்கள். சீனா கதி கலங்கி நிற்கிறது.

விஷயம் இதுதான்.


உலகின் அதி உயரமான மலைத்தொடரான இமயமலையில் நடந்த இந்திய சீன எல்லை மோதலுக்கு பின்னர் அதன் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு இந்திய மரைன் கமண்டோக்களை களம் இறக்கி அதிரடித்தது இந்தியா. இஃது உலகத்தவரை மிரள செய்த யுக்தி.

அதாவது கடற் படை வீரர்களின் பிரிவில் ஒன்றை, நிலத்தில் அதுவும் மலைத்தொடரில் உள்ள இடங்களில் பணியமர்த்தியது இந்திய ராணுவம்.

இது என்ன மாதிரியான படை நடத்தும் வியூகம் என பலருக்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதன் அர்த்தம் தற்போது தான் பலருக்கும் புரிய ஆரம்பித்து அதிர்ச்சியில் மிரள செய்து இருக்கிறது இந்தியா.

சீனா எப்படியும் நிலத்தில் முதலில் போரை தொடங்காது..... அது போலவே சமாதானம் என்பதும் அங்கு அவர்கள் தேசத்தில் எடுபடாது என்பது உலகத்தவருக்கு மாவோ எடுத்த பாலப்பாடம்.

எப்பொழுது எல்லாம் சீனாவில் உள்நாட்டு குழப்பம் ஏற்படுகிறதோ, அப்பொழுது எல்லாம் அது எங்கேனும் எல்லைகருகில் உள்ள நாட்டுடன் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுயிருக்கும் ஒரு நாடு அது.

சிறிய சமாளிப்பு என்றால் மங்கோலியா, பக்கமும்...... கொஞ்சம் நடுவாந்திரமான பிரச்சினையை சமாளிக்க ஜப்பான் மற்றும் தென்கொரியா பக்கமும்,...... முற்று முழுதான கவனத்தை திசை திருப்ப இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளிலும் என ரகம் வாரியாக பிரித்து வைத்து கொண்டு ரகளை செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நாடு அது.

1960 களில் ஏற்பட்ட பெரும் பட்டினி மற்றும் பஞ்சத்தை இப்படித் தான் இந்தியா மீது போர் தொடுத்து சமாளித்து இதனை ஆரம்பித்து வைத்தார் மாவோ. அது மாத்திரம் அல்ல அப்போது அவர் காலத்தில் ஏற்படுத்தி வைத்தது தான் கண்டதை திங்கும் கலாச்சாரம். உணவு பஞ்சத்திற்கு சிட்டுக்குருவிகள் தான் காரணம் என அவற்றை முற்று முழுதாக அழித்தொழிக்க சொன்ன நவயுக விஞ்ஞானி அவர்.

மக்கள் புரட்சி படை உருவாக்கிய உத்தமனான அவர்....அதன் மூலம் நாட்டை கைப்பற்றிய மஹானுபாவர், ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்களை அகற்றி அவர்களை நாடு கடத்தி தன்னை அங்கு நிலை நிறுத்தி ஆசுவாசப் படுத்திக் கொண்டார். அப்போது அந்த சமயத்தில் தான் சீனாவில், நாடு தழுவிய அளவில் கலகம் உருவாகும் சூழ்நிலையில்... இந்தியாவை ஆண்ட நேரு மீது #கை வைத்தார். அதற்கு முன்பே நேருவுடனான நெருக்கத்தில் இருந்து அவரை புரிந்து கொண்டு இருந்தார் மாவோ‌.

1950 களில் இரண்டாம் உலகயுத்தத்திற்கு பின்னான நிகழ்வுகளில் மிக முக்கியமான ஒன்று ஐநாவின் அங்கீகாரம் இந்தியாவை தேடி வந்தது. அதுவும் #வீடோ அதிகாரத்துடன், அதனை சீனாவுக்கு தாரை வார்த்தார் நேரு ....... புரட்சி படை ஆரம்பித்து ஆட்சியாளர்களை விரட்டி அடித்த மாவீரன் மாவோ எனும் நினைப்பில் இருந்தவருக்கு.... சண்டை போட்டு அந்த ஐநா பதவியை மாவோவுக்கு பெற்று தந்தார். அப்பொழுதே மாஸ்கோ அவரை எச்சரிக்கை செய்தது. காதிலேயே போட்டுக் கொள்ள வில்லை மனிதர்.

பூரிப்பிலும் புகழின் உச்சியில் இருந்த காலம் அது.

அது அந்ந்ந்ந்த காலலலலலலம்..... வசந்த் அன் கோ காலம் என்பது போல இந்தியா பாகிஸ்தானை வென்று... வெற்றி பெற்று உலக அளவில் சமாதான தூதுவராக பெரும் புகழ் பெற்ற தேசமாக இந்தியா காட்சி அளித்த உன்னத தருணம் அது. அதனை ஆட்சி செய்த நேருவை கையிலேயே பிடிக்க முடியவில்லை அப்பொழுது என்கிறார்கள்.....

பொறுக்குமா.....

மற்றைய தேசங்களுக்கு....? பொறாமையில் முதலில் பொங்கிய தேசம் சீனா தான். காரணமும் இருந்தது அதற்கு. இந்தியா சொன்னது.. மாவோ புரட்சி படை ஆரம்பித்து அப்போது இருந்த ஆட்சியாளர்களை விரட்டி அடித்தவர்களுடன் சமாதானம் போகும் படி போகிற போக்கில் சொல்லி விட, இல்லாத மூக்கும் விடைக்க சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டு இருந்தார் மாவோ.

சொல்ல மறந்து விட்டோம் பாருங்கள்....... மாவோ விரட்டி அடித்தார்களே அவர்கள் ஒட்டுக்க கிளம்பி சீனாவை விட்டு விலகி அருகில் உள்ள தீவுகளில் ஒன்றில் தஞ்சம் அடைந்து நாடு கடந்த சீன அரசை நிறுவியிருந்தார்கள். அவர்களோடு தான் சமாதானமாக போகச் சொன்னார் நம் நேரு.

அப்போது அப்படி போனவர்கள் உருவாக்கிய தேசம் தான்...... இன்றைய தைவான். நாடு கடந்த சீன அரசை உருவாக்கியவர்கள் வசம் தான் வீடோ அதிகாரம் கொண்ட ஐநாவின் பதவி இருந்தது என்பது நம்மில் பலருக்கு தெரியாத சமாச்சாரமாகவே இருக்கிறது.

ஆச்சா....

இந்த சூழ்நிலையில் தான் திபெத் மீது படையெடுத்தது சீனா. அவற்றை ஆக்ரமிப்பு செய்து தனக்கு சொந்தமான பகுதி என்று காரணங்களை காட்டி பக்கம் பக்கமாக அறிக்கை வாசித்தது. அப்போது அங்கு இருந்து வெளியேறிய தலாய் லாமாவிற்கு ஆதரவு கொடுத்தது இந்தியா. சமாதானம் பேசி வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்தார் நேரு. நேரம் சரியில்லை அவருக்கு....

சமயம் எதிர் பார்த்து காத்திருந்த மாவோ இந்திய எல்லையில் வரும் காஷ்மீரின் பல பகுதிகளிலும் ஆக்ரமிப்பு செய்தார். அக்க்ஷைசின் தன்னுடையது என்றார். ஆரம்ப காலத்தில் நேரு இது ஏதோ கோவம் போலிருக்கிறது மாவோவுக்கு... சமாதானம் செய்து விடலாம் என கனவு கண்டுக் கொண்டு இருந்தார்.

போகப் போக தான் விஷயத்தின் வீர்யம் புரிந்தது. துவண்டு போனார் மனிதர் . காஷ்மீர் பகுதிகள் துண்டாடப்பட்டது. விஷத்தின் வீர்யம் போல் இது நேருவை தாக்க காய்ச்சலில் மனிதர் கசங்கி கருகி காணாமலே போனார் என்கிறது சரித்திரம். இன்று வரை அந்த தரித்திரம் தொலையவில்லை என்பதை ராவுல் வின்சியின் மானசரோவர் புனித யாத்திரையில் அப்பட்டமாக தெரிந்தது.

இப்போது நம் விஷயத்திற்கு வருவோம். ஆரம்ப கால மோடி அரசில் இதே பம்மாத்து வேலைகளை செய்ய பார்த்த சீனாவை 2016 களிலேயே நூல் பிடித்துவிட்டது இந்தியா.எவ்வளவு தூரம் அவர்களின் கை இங்கு இந்தியாவில் நீண்டு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டவர்கள் அதே போலவே நீண்ட கால திட்டமிடல் ஒன்றை செய்ய ஆரம்பித்தனர்.

எப்படியும் இந்திய சீன எல்லையில் ஒரு மோதல் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதை கண்டுக்கொண்ட நம் மத்திய அரசு அதனை கண்டும் காணாமல் எல்லையில் பிரச்சினை செய்த பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வருவது போல் பாவ்லா பண்ணிக் கொண்டு சீன எல்லைக்கும் சேர்த்தே பாதுகாப்பு முறைமைகளுக்கு தேவையான உபகரணங்களையும் ஆயுதங்களையும் வேக வேகமாக சேகரிக்க ஆரம்பித்தனர். இந்திய ராணுவத்தினரை பயிற்சி கொடுத்து எல்லையில் ஆயத்தம் செய்தனர்.

அதனால்தான் மிக எளிதாக இந்திய சீன எல்லை மோதலுக்கு பின்னர் நம் ராணுவத்தினரின் கை ஓங்கியது. மோதல் என்னவோ 2019 ஆம் ஆண்டு தான் தொடங்கியது. ஆனால் வியூகம் 2016ல் தொடங்கியது.

இது தற்போதைக்கு முற்று பெறாது என்பதை புரிந்து கொண்ட இந்திய அரசு தனது அடுத்த கட்ட நகர்வுகளை நடவடிக்கைகளை அமைத்து கொண்டது.

நேரு சமாதானமாக போக அன்றைய சீன ஆட்சியாளரோடு தான் இன்றைய மோடி அரசு கைக்கோர்த்து கொண்டது. அதாகப்பட்டது தைவானோடு பற்பல உடன்படிக்கை செய்து கொண்டு இருக்கிறது நம் மத்திய அரசு.இதில் ஜப்பானையும் இணைந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது அவை என்ன மாதிரியான ஒப்பந்தங்கள் என்பதை தெரிந்து கொள்ளவில்லை.

ஒரு உதாரணத்திற்கு பாருங்கள்... இந்திய கடற்படை கமண்டோக்கள் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள். வெளியே தெரிகிறது.... ஆனால்

அது ஏன் மரைன் கமண்டோ...... சீன எல்லையில் என்பது யூகிக்க முடியவில்லை அல்லவா.

அதுபோலவே இங்கு ஜப்பான் மற்றும் தைவானுக்கு இந்தியாவால் என்ன நன்மை.....??????

எப்படி.... எந்த மாதிரியான செயல் திட்டங்களை இந்திய அரசு நிர்வாகம் முன்னெடுத்து வருகிறது என்பதை தெரிந்து கொண்டால் நிச்சயம் அது மயிர்கூச்செரியும் நம்மவர்களின் ராஜதந்திர சாகஸம் புரிந்து போகும்.

அடடா என கொண்டாடாமல் எந்த ஒரு இந்தியனாலும் இருக்க முடியாது.......

நேற்றைய இரவு நாம் வெற்றி கரமாக சோதனை செய்து பார்த்த அக்னி-5 ஏவுகணையின் வீர்யம் புரியும்.அதன் வீச்சின் வீர்யத்தை காட்டிலும் நம் ராஜதந்திரிகளின் செயல்பாடுகள் அபாரமானது மற்றவர்களுக்கு அபாயகரமானது என்பதும் தெரிய வரும்.

வாழ்க பாரதம்....

ஓங்கட்டும் அதன் புகழ்.

ஜெய் ஹிந்த்

 


நன்றி இணையம்