எல்லோருக்கும் முதலிலே தெரிந்த விஷயம் அவனுக்கு கடைசியில்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:38 PM | Best Blogger Tips

 


எங்கள் ஊர் பக்கம் ஒரு கதை உண்டு

ஒரு பைத்தியகாரன் இருந்தானாம் ஆனால் பார்ப்பதற்கு அப்படி தெரியாதாம், மிக அழகான உடை அணிந்து சவரமெல்லாம் செய்து மிக அலங்கார தோற்றத்துடனேதான் இருப்பாராம்

ஊரில் யாராவது இறந்துவிட்டால் முதல் ஆளாக வீட்டுவாசலில் நின்று வருவோரை எல்லாம் வரவேற்பாராம், விழுந்து விழுந்து கவனிப்பாராம், அது துக்கவீடு எனும் ஒரு சிந்தனையே அவரிட்ம இராதாம், அவர் போக்கில் வளையவந்து எல்லோரிடமும் கலகலப்பாக பேசிகொண்டே இருப்பாராம்


சடலத்தை குளிபாட்டி பெட்டியில் வைத்து ஊரும் சொந்தமும் கதறும் பொழுது அவர் போக்கில் இருப்பாராம்

கடைசியில் மயானத்தில் கடைசியாக எல்லோரும் சடலத்தின் முகத்தை நோக்கும் பொழுது இவரும் நோக்கி, "என்னடே இங்க கிடக்கா, எழும்புடே" என கையினை பிடித்து இழுப்பாராம், சடலம் எழும்பாது

"அய்யய்யோ, அவன் செத்துட்டான் போலிருக்கே" என மிகுந்த வருத்தபட்டு அழுவாராம், அவரை பற்றி தெரிந்ததால் யாரும் இதை பெரிதாக எடுப்ப்பதில்லை

எல்லோருக்கும் முதலிலே தெரிந்த விஷயம் அவனுக்கு கடைசியில்டான் தெரியும்


இந்த கதைக்கு இப்பொழுது மிக பொருத்தமானவர் பிரசாந்த் கிஷோர், எல்லோரும் எவ்வளவோ சொன்னார்கள், பாஜக இனி குறைந்தது 25 வருடத்துக்கு அசையாது, மோடியினை ராகுல் நெருங்கவே முடியாது என சொல்லிகொண்டே இருந்தார்கள்

ஆனால் மேற்குவங்கத்தில் பாஜக் 2 சீட் தேறாது, அடுத்தது மோடி வெல்லமுடியாது என என்னென்னவோ சொல்லிகொண்டிருந்தார் கிஷோர்

"அப்பனே அறிவாலயத்தில் வாங்கிய காசுக்கு மட்டும் பேசினால் போதும்" என எல்லோரும் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை

அந்த பிரசாந் கிஷோருக்கு மயானத்தில் சடலத்தை நோக்குபவன் போல காங்கிரஸ் செத்துகிடக்கும் காட்சி இப்பொழுதுதான் கண்ணில் பட்டிருக்கின்றது

மோடி பலமானவர் அடுத்த 10 ஆண்டு பாஜக அசையாது, ராகுல் மோடியாக முடியாது என கிளம்பிவிட்டார்

ராகுலை ஒரு காமெடியனாக இந்த தேசம் கண்டதே தவிர தலைவனாக நோக்கியதே இல்லை

மோடி விவரம் அறிந்த நாளில் இருந்து நாட்டுக்கு உழைத்தவர் இருமுறை குஜராத் முதல்வராக தன்னை நிரூபித்தவர், பிரதமர் பதவியிலும் அவர்மேல் எதிரி கூட ஒரு குற்றசாட்டை வைக்கமுடியாது

அதனால்தான் தேசம் அவருக்கு மாபெரும் பொறுப்பை கொடுத்தது

ராகுல் கட்சிக்கு உழைத்தவர் அல்ல, ஒரு வார்டு கவுண்சிலராக கூட இருந்தவர் அல்ல, பிறப்பால் உயர்த்தபட்ட வெற்று பிம்பம்

காங்கிரஸில் மன்மோகன் சிங் முதல் கபில்சிபல், சிதம்பரம் வரை பெரும் தலைகள் உண்டு, ஆனால் அவர்களையெல்லாம் டம்மியாக்கி ராகுலார் என முன்னிறுத்துவது மக்களுக்கு அலுப்பான விஷயம்

ஒரே குடும்பம் எனும் பிம்பம் கட்சி தலமை தொடங்கி வார்டு கவுன்சில் வரை எனும் கொள்கையால் காங்கிரஸ் அழிந்துவிட்டது, இன்னும் அதன் இந்துவிரோதம் அதீதமான சிறுபான்மை ஆதரவு என அது வலுவிழ்ந்துவிட்டது


பாஜக பல ஆச்சரியங்களை கொண்ட கட்சி, அங்கு சாமான்யனும் தலைவராகலாம் அமைச்சராகலாம் அதே நேரம் பதவியினை விட்டு போ என்றால் தயக்கமின்றி செல்கின்றார்கள்

மிக முக்கிய விஷயமாக அங்கு கோஷ்டி பூசலே இல்லை, மோடிக்கு ஒரு கோஷ்டி அமித்ஷாவுக்கு ஒரு கோஷ்டி என்பதெல்லாம் அங்கு இல்லை

அவர்கள் சித்தாந்தத்தை நம்புகின்றார்கள், ஏன் மோடியே இல்லையென்றால் கூட அவர்கள் சித்தாந்தம் ஆயிரம் மோடிகளை உருவாக்கும்

ஆரவாரமில்லை, ஆர்பாட்டமில்லை, கோஷ்டி இல்லை, லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை, வாரிசு அரசியல் இல்லை என மிகபெரிய பலம் பாஜகவுக்கு உண்டு

அவர்கள் வாக்குறுதி கொடுத்ததை நிறைவேற்றவும் செய்கின்றார்கள், காஷ்மீர் முதல் ராமர்கோவில் வரை அவர்கள் நிறைவேற்றினார்கள், வன்முறை இன்றி சிக்கல் இன்றி செய்தார்கள்

உண்மையில் இந்த தேசத்தின் பெருவாரி மக்களும், தேசபற்றாளர்களும் என்ன எதிர்பார்தார்களோ அதை பாஜக நிறைவேற்றியது இதோ அசைக்கமுடியா இடத்தில் நிற்கின்றது

இன்னும் 10 ஆண்டு அல்ல 50 ஆண்டுகளுக்கு அக்கட்சி அசையாது, அதை உடைக்கவும் முடியாது. ராகுல் அல்ல இனி மோடியினை நெருங்க இன்னொரு தலைவரால் இந்தியாவில் முடியாது என்பதுதன் நிஜம்

உலகுக்கே தெரிந்த இந்த உண்மை பிரசாந்த் கிஷோருக்கு இப்பொழுதுதான் புரிந்ததிருக்கின்றது பாவம்

ஆனால் அரசியலில் எல்லாமே சந்தேகத்துகுரியது, திடீரென ஏன் திமுக ஆதரவாளரான கிஷோர் பாஜகவினை சிலாகிக்க வேண்டும், அதுவும் அடுத்த பாராளுமன்ற தேர்தல் வருமுன் சிலாகிக்க வேண்டும்?

ஆக அறிவாலயம் கிஷோரின் முதுகு மூலமாக டெல்லிக்கு கைநீட்டுகின்றது, காங்கிரஸை கழட்டி விட்டு பாஜகவிடம் அடைக்கலமாக திட்டமிடுகின்றது

சென்னை கமலாலயம் மூலம் முன்பு இதை சாதித்தது திமுக, ஆனால் இப்பொழுது கமலாலயத்தில் அண்ணாமலை இருக்கின்றார், அவர் காலில் செருப்பும் இருக்கின்றது

அரசியலில் உச்சபீடம் நிலையாக இருக்கும்பொழுது சிற்றரசுகள் பணிவதும், அரசுகள் தடுமாறும் பொழுது அவை "சுயாட்சி" "தனிநாடு" என கிளம்புவதும் காலம் காலமான நடைமுறைகள்

அதில் டெல்லியில் வலுவான அரசு இருப்பதால் திமுக பம்ம நினைக்கின்றது

இது இந்திரா காலத்தில் திமுக பதுங்கியபொழுது "அப்படியே இருந்துகொள்" என இந்திரா அனுமதித்தது போலாகுமா? இல்லை "பதுங்கி கிடக்கும் உன்னை பிடிப்பது எளிது" என காதை பிடித்து பாஜக தூக்கி செல்லுமா என்பது தெரியவில்லை

ஒலித்திருப்பது பிரசாந்த் கிஷோரின் குரலாக தெரியவில்லை, அதன் பின்னணியில் அறிவாலய சமிக்கைகள் இருக்கலாம்

நிதியமைச்சர் தியாகராஜன் முதல் பலரின் அப்பட்டமான திராவிட குரல், இந்திய எதிர்ப்பு குரல் முழுக்க அடங்கிய நிலையில், திமுகவினரின் சுதியும் அவர்களின் கூட்டணியினரின் சுதியும் வெறும் ஐந்துமாதத்திலே அடங்கிவிட்ட நிலையில் கிஷோரின் இந்த "வெள்ளை கொடி" சாதாரணமாக கடந்து செல்ல கூடியது அல்ல

 


நன்றி இணையம்