...........................................
'சிறிய செயலும் பெரிது செய்யும்..’’..
...........................................
சிறிய செயல்களை ஒழுங்காகச் செய்பவர்கள் பெரிய
செயல்களிலும் திறமையாக விளங்குவார்கள்..
சிறிய செயல்களுக்கு நாம் தரும் முக்கியத்துவம்
நாம் எப்படி நிதானமாக செயல்படுகின்றோம் என்பதைப் பல நேரங்களில் மற்றவர்களுக்குக்
காட்டுகிறது..
தொழிலதிபர் பிர்லா தனது இரண்டாவது மகளுக்கு
வரன் தேடிக் கொண்டு இருந்தார்.. அச்சமயம் பிர்லாவை சந்திக்க நரேந்திர தபாரியா என்பவர்
வந்து இருந்தார்..
பிர்லா வரும் வரை அவரது வீட்டு வரவேற்பறையில்
இருந்த செய்தித்தாளைப் படித்துக் கொண்டு இருந்தார்..அப்போது பிர்லா அந்த
இடத்திற்கு வந்து கொண்டு இருந்தார்..
அவர் வருவதைக் கண்ட நரேந்திர தபாரியா தான்
படித்துக் கொண்டு இருந்த செய்தித்தாளை மிக அழகாக மடித்து இருந்த இடத்தில்
வைத்தார்..அதில் ஓர் ஒழுங்கு இருந்தது..
இந்த சிறிய சம்பவம் பிர்லாவை கவர்ந்தது.
பேச்சின் மூலம் அந்த இளைஞனின் நல்ல பண்புகளைக் கண்டு கொண்டார்..
அந்த இளைஞரை நன்கு அறிந்து கொண்ட பின்பு அவரையே
தன் மகளுக்குப் பல எதிர்ப்புகளுக்கு இடையே மணம் முடித்து வைத்தார்..
ஆம்.,நண்பர்களே..,
எவ்வளவு சிறிய வேலையாக இருந்தாலும் அதை
நேர்த்தியாகவும்,
சிறப்பாகவும் செய்யுங்கள்..
மற்றவர்கள் பாராட்டுவார்கள் என்ற எண்ணத்தில்
அல்ல. உங்கள் திருப்திக்காக..
நீங்கள் பிரதிபலன் பார்க்காமல் செய்யும் செயல்
உங்களை மற்றவர்கள் மனதில் உயர்வான எண்ணத்தை உருவாக்கும்.
உங்களை உன்னத நிலைக்குக் கொண்டு செல்லும்.
நன்றி இணையம்