தாலி என்பது மணமகன்,மணமகள் கழுத்தில் கட்டும் மஞ்சள் கயிறு ஆகும்.மஞ்சள்
நிறம் இந்துக்களின் புனித நிறம் ஆகும்.மேலும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு
அடையாள சின்னமாகும்.தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர்,ஒரு பெண்ணை
பார்க்கும்பொழுது,கழுத்தில் தாலியை பார்க்கும் பொழுது இவள் மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கி போய்விடுவார்.
தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.
இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாலியினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக சாஸ்திரம் கூறுகிறது.
தாலி என்பது ஆரியர்களுக்கு பிறகு வந்த பழக்கம் என சிலர் கூறுவர்.ஆனால் அது தவறாகும்.பண்டைய காலத்திலேயிருந்து தமிழர்கள் பின்பற்றிவந்த ஒரு சம்பிரதாயமாகும்.பண்டைய இலக்கியங்களில் இதை மங்கள நாண் என்று கூறப்பட்டுள்ளது.
மாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளை கொண்டதாகும்.ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குனங்களை குறிக்கிறது.
தெய்வீககுணம்,தூய்மையானகுணம்,மேன்மை,தொண்டுள்ளம்,தன்னட க்கம்,ஆற்றல்,விவேகம்,உண்மை ,உள்ளதை
உள்ளபடி புரிந்துகொள்ளுதல் போன்ற ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிற்கு
இருக்கவேண்டும் என்பதற்காகவே,ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய நாண் பெண்களுக்கு
அணியபடுகிறது.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.
இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாலியினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக சாஸ்திரம் கூறுகிறது.
தாலி என்பது ஆரியர்களுக்கு பிறகு வந்த பழக்கம் என சிலர் கூறுவர்.ஆனால் அது தவறாகும்.பண்டைய காலத்திலேயிருந்து தமிழர்கள் பின்பற்றிவந்த ஒரு சம்பிரதாயமாகும்.பண்டைய இலக்கியங்களில் இதை மங்கள நாண் என்று கூறப்பட்டுள்ளது.
மாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளை கொண்டதாகும்.ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குனங்களை குறிக்கிறது.
தெய்வீககுணம்,தூய்மையானகுணம்,மேன்மை,தொண்டுள்ளம்,தன்னட