தொல்காப்பியரை பற்றி அறிவோம் !!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:32 | Best Blogger Tips

இவர் காலம் 12,000 ஆண்டுகளுக்கு மிக முற்படுமன்றிப் பிற்படாது.

தொல்காப்பிய மென்னும் இப்பேரிலக்கண நூலைச் செய்த தொல்காப்பியர், சமதக்கினி முனிவர் புதல்வர் என்பதும், இவரியற்பெயர்
திரணதூமாக்கினியார் என்பதும் இந் நூற்பாயிரத்துள் "சமதக்கினியாருழைச்சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரை
வாங்கிக்கொண்டு," என்று நச்சினார்க்கினியர் கூறுதலானே அறியக்கிடக்கின்றன. இன்னும், அப்பாயிரத்துள் 'தொல்காப்பியன்' என்பதற்குப் 'பழைய காப்பியக் குடியிற் பிறத்தலின் தொல்காப்பியன் என்று
பெயராயிற்று' என்று கூறுதலானே காப்பியக் குடியிற் பிறந்தவரென்பதும், சமதக்கினி புதல்வ ரென்பதனானே அந்தண குலத்தவ ரென்பதும்
அறியத்தக்கன. சமதக்கினி புதல்வரென்றதனானே பரசுராமர் இவர் சகோதரராவா ரென்பதும் பெறப்படும். இராமயணத்துள்ளே பரசுராமர்
இராமரோடு போரை விரும்பிச் சென்று அவருக்குத் தோற்றதாகவும், அவருக்கு மிக முந்தினவராகவும் அறியப்படுதலினாலும், இராமராற் சீதையைத் தேடும்படி அனுப்பப்பட்ட குரங்குப்படை இடைச்சங்க மிருந்த கபாடபுரத்தை யடைந்து சென்றதாக அறியப்படுதலினாலும், இடைச்சங்கப் புலவர்களா யிருந்தோர் அகத்தியருந் தொல்காப்பியரும் முதலாயினோர் என்று இறையனா ரகப்பொருளுரை முதலியவற்றா னறியப்படுதலினாலும்,
தொல்காப்பியரும் இராமர் காலத்துக்கு மிக முந்தியவ ரென்பதும், தொல்காப்பியரிருந்து பல்லாயிரம் யாண்டுகள் சென்றனவென்பதும்
அறியத்தக்கன. ஆயினும் இக்காலத்துச் சரித்திர ஆராய்ச்சிக்காரருட் சிலர், மூவாயிரம் ஆண்டு என்றும் ஆறாயிரம் ஆண்டு என்றும் இப்படிப்
பலவாறாகக் கூறுகின்றனர். தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பாளர், ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை யவர்கள் அப் பொருளதிகாரப்
பதிப்புரையில் பன்னீராயிரம் ஆண்டுகளுக்குக் குறையாதென்று கூறியிருக்கின்றனர். தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய சுப்பிரமணியபிள்ளை யவர்கள் கி.மு. 700 ஆண்டுகளுக்குப் பிற்படா
தென்கின்றனர். எவ்வாறு கூறினும் இவர் காலம் 12,000 ஆண்டுகளுக்கு மிக முற்படுமன்றிப் பிற்படாது.

இயற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பது ஆராய்ந் துணரத் தக்கது.

இவர் வடமொழியையும் நன்கு கற்றவர் என்பது 'ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்' என்பதனா னறியத் தக்கது. இவர் அகத்தியரோடு
தென்னாடு புக்கபின் அவர்பாற் செந்தமிழ் இலக்கிய விலக்கணங்களைக் கற்று அவருடைய முதன் மாணாக்கராய் விளங்கினர். அகத்தியர்பால்
இவருடன் கற்றவர்கள் அதங்கோட்டாசிரியர் பனம்பாரனார் செம்பூட்சேய் வையாபிகர் அவிநயனார் காக்கைபாடினியார் துராலிங்கர் வாய்ப்பியர்
கழாரம்பர் நற்றத்தர் வாமனர் என்னும் பதினொருவருமாவர். தொல்காப்பியர் முதலாகப் பன்னிருவர் அகத்தியர் பால் ஒருங்கு கற்றனர்
என்பது,

"மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன்
தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த"

என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுளாலும்,

இவரா லியற்றப்பட்ட இத் தொல்காப்பிய மென்னும் நூலுக்கு உரைசெய்தோராகத் தெரியப்பட்டவர் இளம்பூரணர், கல்லாடர்,
பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் என்னும் அறுவராவர். சேனாவரையரும் தெய்வச்சிலையாரும் சொல்லதிகாரத்திற்கு மாத்திரமே உரை செய்தனர்.

இத் தொல்காப்பிய மொன்றே முன்னோரால் எமக்குக் கிடைத்த மிகப் பழையதொரு நிதியாம். இதன்கண் சில சூத்திரங்களுக்குக்
கடைச்சங்க நூல்களிற்கூட உதாரண மில்லாமையை நோக்கும்போது இதன் பழைமை எத்துணை என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். பன்னிரு
படலத்துள் ஒரு படலமும் இவராற் செய்யப்பட்ட தென்பர். இவரைப்பற்றிய பழைய உண்மைச் சரிதங்கள் கிடையாமையால் இஃது மிகச் சுருக்கி
எழுதப்பட்டது என்க.




Via FB தர்மத்தின் பாதையில்