கலியுகம் 5115 ம் ஆண்டு விஜய வருடம் சித்திரை 1 ம் நாள். தமிழர் தின வாழ்த்துக்கள் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:26 PM | Best Blogger Tips


சித்திரையின் சிறப்புகளும் நாம் செய்யவேண்டியவையும் !!

வீட்டின் மூத்தோர் புதிய பஞ்சாங்கத்தை பூஜையறையில் வைத்துப் பூஜித்து அனைவர் முன்னிலையிலும் படிப்பார். பூஜை முடித்து ஆலயம் சென்று வழிபட்டு பின் வீட்டில் அறுசுவை உணவு உண்பர். அதில் வசந்த காலத்தில் பூக்கும் வேப்பம் பூவும் முக்கனி களும் கண்டிப்பாக இடம்பெறும். கோவில் களிலும் இந்த பஞ்சாங்கம் படித்தல் நடை பெறும்.

சித்திரை மாதத்தில் புத்தாண்டு விழா, ஆதிசங்கரர் ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி, மச்சாவதார ஜெயந்தி, வராக ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி, வாசவி ஜெயந்தி, ரமணர் ஆராதனை விழா, காமன் பண்டிகை, ஸ்ரீரங்கம் கஜேந்திர மோட்சம், தேர்த் திருவிழா, சமயபுரம் மாரி பூச்சொரிதல் விழா, காரைக்குடி கொப்புடையம் மன் தேர்த் திருவிழா, சித்திரை அன்னா பிஷேகம், சப்த ஸ்தான விழா, ராசிபுர திருமணம், தேர்விழா, மகாலட்சுமி அவதார தினம், பாபநாசம் சிவ- பார்வதி திருமணக் கோல காட்சி, தங்கத்தேர், சித்திரகுப்த பூஜை, குருவாயூர் விஷுக்கனி, நெல்லுக்கடைமாரி செடல் விழா, கூத்தாண்டவர் விழா, கன்னியா குமரியில் சூரிய அஸ்தமனம், சந்திர உதயம் கண்டு நிலாச்சோறு என்ற சித்திரான்னம் உண்ணும் விழா, அட்சய திரிதியை கனகதாரா யாகம், மகாலட்சுமி எட்டு நாள் காட்சி தரும் விழா என பற்பல விழாக்களைக் காணலாம். எதைப் பார்ப்பது எதை விடுவது? எல்லாமே நன்மை தரும் விழாக்கள்!

அக்னி நட்சத்திரம் என்ற கொடிய வெயில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 21 நாட்கள் நம்மை வாட்டி வதைக்கும். இதை கத்திரி வெயில் என்றும் கூறுவார்கள். இது சித்திரை மாத இறுதி பத்து நாட்களும்; வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இருக்கும். சில வருடங்களில் 25 நாட்கள்கூட இருக்கும்.

இந்நாட்களில் சூரியனுக்கு மிக அருகே பூமி இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னி. கார்த்திகை நெருப்பைக் கக்கும் நட்சத்திரம். எனவே இதை அக்னி நட்சத்திரம் என்பர்.

இந்த அக்னி நட்சத்திர நாட்களில், வெயிலில் இருந்து விடுபட மகா விஷ்ணுவையும், மகா மாரியம்மனையும் சாந்தப்படுத்த வேண்டும். மகாவிஷ்ணுவின் திருநாமங்களை ஜெபித்து வழிபட வேண்டும். நாராயண மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். மாரியை பால், தேன், சந்தனத்தால் அபிஷேகம் செய்து குளிர் விக்க வேண்டும்.

இந்நாட்களில் தான- தர்மம் செய்வது சிறந்த பலனைத் தரும். தண்ணீர்ப் பந்தல் அமைக்கலாம். நீர் மோர், பானகம் விநியோகம் செய்யலாம். விசிறி, காலணி கொடுக்கலாம். சீதாஷ்டக சுலோகம் சொல்லலாம்.

அக்னி நட்சத்திரம் பிறந்த கதைமுன்னொரு காலத்தில் சுவேத யாகத்தை 12 வருடங்கள் இடைவிடாது செய்தனர். தொடர்ந்து அக்னி குண்டத்தில் நெய் ஊற்றப் பட்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது. நோயினின்று விடுபட, காண்டவ வனத்தை எரித்து உண்ண திட்டமிட்டான் அக்னி.