இந்திய மார்க்கெட்டை குறிவைக்கும் GST 2.0 - சோலி முடிஞ்ச மேற்கத்திய மார்க்கெட்!
சில நேரங்களில் நண்பர்களை விட எதிரிகள் நமது வளர்ச்சிக்கும், சாதனைக்கும் ஒரு போட்டியை விதைத்து, கிரியா ஊக்கியாக இருப்பதுண்டு. அமெரிக்கா இந்தியாவின் நண்பராக இருந்துகொண்டே எதிரான செயல்களை ரகசியமாக செய்து கொண்டிருந்ததால், இந்தியா அவர்களை நேரடியாக எதிர்ப்பதில் சிக்கல் இருந்தது.
அதனால் பல முடிவுகளை அரைகுறையாக கையாள வேண்டியிருந்தது. அது இந்தியாவின் நோக்கத்தை, வளர்ச்சியின் வேகத்தை குறைக்க அதுவும் ஒரு காரணமாக இருந்தது.
இப்போது நண்பர் ட்ரம்ப் இந்தியாவிற்கு எதிரானதால், இப்போது இந்தியா முழு வீச்சில் உத்வேகத்தை கொடுத்துள்ளது. பல நேரங்களில் இந்தியாவின் வளர்ச்சி என்பது நம் நாடு பிரச்சினைகளை சந்தித்தபோதே சாதித்தோம் என்று சொல்லும் வரலாற்றில் மிகையில்லை.
அமெரிக்க, ஐரோப்பிய சந்தையை மையமாக வைத்து நம் தொழில்களும், இண்டஸ்ட்ரிகளும் இயங்கிய வேளையில், அவை எட்டாக்கனியாகி, ஏற்றத்தாழ்வுடன், நிரந்தரமல்ல என்று மாறி வருவதால், இந்தியாவின் சந்தைக்கு முக்கியத்துவத்தை கொடுக்க துவங்கியுள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு சந்தை வளர்ச்சியை பாதித்த ஒரு விஷயம், மிக அதிகமாக போடப்பட்ட வரிகள். அதில் இரண்டு விஷயங்கள் நடந்தது, ஒன்று கடுமையான வரியை செலுத்தி அந்த பொருளை வாங்க விருப்பமில்லாமல் பர்மா பஜார் போன்று க்ரே மார்கெட்டில் வாங்க தூண்டியது. ஆம் ₹50,000 டிவிக்கு ₹14,000 வரி செலுத்தினால் வலிக்காதா? அதனால் வரி இழப்பு ஏற்பட்டது.
இரண்டாவதாக அந்த வர்த்தகம் கணக்கில் வரவில்லை என்பதால் அது இந்தியாவின் GDP யில் வரவில்லை. உபியில் ஒரு வருவாய் துறையின் கீழ் இருந்த ஒரு மாவட்டத்தில் எடுத்த சர்வேயில், கணக்கில் வந்த வியாபாரத்தை விட, கிரே மார்க்கெட்டில் 3.7 மடங்கு அதிகம் விற்பனை நடந்தது தெரிய வந்தது.
அதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது அளவுக்கு அதிகமான வரியும், எளிமைப்படுத்தப்படாத சட்டங்களும் முக்கியமான காரணமாக இருந்தது. இதில் வரியை குறைத்து, கிரே மார்க்கெட்டில் நடக்கின்ற வியாபாரத்தின், ஒரு மடங்கை உயர்த்தினாலே இந்தியாவின் GDP 8 ட்ரில்லியனை தாண்டிவிடும். இன்னும் இரண்டு பங்கு தொடரவே வாய்ப்புண்டு.
வரிவிதிப்பை குறைக்க காரணம் தேடும்போது வரிக்கான காரணத்தையும் ஆராய வேண்டும். வரி என்பது இரண்டு காரணத்திற்காக செய்யப்படும் செலவுகளுக்கான மூலாதாரம். அதில் இரண்டு விதமான வரிகள் உள்ளது.
ஒரு கிராமத்தில் ரோடு பராமரிப்பது, எலெக்ட்ரிசிட்டி, சுகாதாரம், ஊழியர்கள் சம்பளம், கொடுப்பது என்பது போன்ற தவிர்க்க முடியாத செலவுகள், இதை Operational Expenses (OpEx) என்று சொல்வார்கள்.
வருடா வருடம் இந்த செலவுகள் கூடிக்கொண்டே போகும். அப்போது மக்களுக்கு எந்த புதிய வருமானமும் இல்லாதபோது, அந்த கூடுதல் செலவு, அவர்களின் பணவீக்கத்தால் அதிகரிக்கும் செலவுகள், தேவை அதிகரிப்பு என்று செலவினம் அதிகமாகும்.
அப்படியெனில் அந்த கிராமத்து மக்களின் வருமானத்தை பெருக்கவும், செலவுகளை குறைக்கவும் புதிய முதலீடுகளை செய்ய வேண்டும். உதாரணமாக, நிலத்தடி நீர் மட்டம் குறைவதால், விவசாய நிலப்பரப்பு குறைந்துவிட்டது.
அதற்காக நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, அமராவதி ஆற்றில் இருந்து உபரி நீரை ஏற்றம் செய்து ஏரிகளை நிரப்பி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது என்று செய்யப்படும் திட்டத்தால், விவசாயிகளுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும். அதனால் அவர்கள் கூடுதல் நிலப்பரப்பில் விவசாயம் செய்வதால் வருமானம் உயரும்.
அந்த முதலீடுகள் கூடுதல் வருமானத்தை மக்களுக்கு கொடுப்பதால், கூடுதல் வரியை பஞ்சாயத்துக்கும் கொடுப்பதில் சிரமமில்லை.
முந்தய அரசுகள் அப்படி வருமானத்தை பெருக்கு வரிகளை பயன்படுத்தாமல், வெறும் செலவினங்களையும், பேருக்காக சில கட்டமைப்பு திட்டங்களையும் போட்டது. ஆனால் அவை சரிவர செயல்படுத்தாததாலும், அந்த பணம் ஊழலால் திட்டத்தை சரியாக முடிக்காததாலும் அது பயன்தரவில்லை
அதனால் இந்திய அரசு, கட்டமைப்புகளை மேம்படுத்தி வருமானத்தை பெருக்க, மக்களிடம் இருந்து வரியை பெற, கடந்த பத்தாண்டுகளாக கூடுதல் வரியை போட்டது. இந்தியாவில் கட்டமைப்பு என்பது பல ஆண்டுகளாக கவனிக்காமல் விட்டுவிட்டதால் அதற்கான பெரிய தொகை தேவைப்பட்டது.
அந்த முதலீடுகள் இப்போது அரசுக்கும், மக்களுக்கும் பயன்களை தர ஆரம்பித்தாலும், இன்னும் போதுமானதாக இல்லை. அதனால் மக்கள் வருமானத்தை உயர்த்த இந்த வரிகளை குறைக்கிறது அரசு.
அதில் இதுவரை 5%, 12%, 18%, 28% என்று இருந்த வரிகளை
6%/12% என்றும் 18% என்றும் இரண்டே இரண்டு ஸ்லாப் மட்டுமே இருக்கும். கூடுதலாக சின் டேக்ஸ் என்று ஒரு வரியுண்டு, அது மது, சிகெரெட், ஆன்லைன் கேம்ஸ் போன்று 7 வகையான செலவுகளை அதன் கீழ் கொண்டு வருகிறார்கள்.
அப்படி கொண்டு வருகிறார்கள் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் மத்திய அரசின் GST க்கு கீழே நேரடியாக வந்துவிடும். அப்படியெனில் கணக்கில் வராமல் ஏமாற்றும் லீக்கேஜுகள் குறைக்கப்படுவதால், அரசுக்கு வருமானம் உயரும்.
அதே சமயம், பல பொருட்களுக்கு டேக்ஸ் என்பது மிக அதிகம். உதாரணமாக இன்சூரன்ஸ் எடுப்பது என்பது, ரிஸ்க் கவரேஜுக்காக, அதற்கு 18% வரி போடுவதும், வாகன பராமரிப்பு செலவுககுக்கு 18% வரி போடுவதும் மிக அதிகம். அதனால், மக்கள் லோக்கலாக உள்ளவர்களிடம் பராமரிப்பை செய்வதால் வரி செலுத்துவது இல்லை.
இதனால் வரி செலுத்தும் நிறுவனங்களுக்கும் வருமான இழப்பு, அரசுக்கும் வரி இழப்பு. இந்த வரியை 6% ஆக குறைக்கும்போது, சர்வீஸ் செண்டர்களுக்கு பராமரிப்பிற்கு கூடுதல் வாகனம் வரும், வருமானம் பெருகும், அரசுக்கு வரியும் அதிகமாகும். ஆனால் வரி குறைத்ததால் ஏற்பட்ட இழப்பை கூடுதல் வால்யூம் மூலம் ஓரளவிற்கு சரி செய்வார்கள்.
அதுமட்டுமல்ல, ஒரு Innova காரின் லாபத்தோடு, அடக்க விலை 14 லட்சம், ஆனால் வரிகளால அதன் விலை 29 லட்சம். அதாவது அதன் வரிகளால் அதன் விலை இரண்டு மடங்காகிவிட்டது. அந்த அடக்க விலையிலேயே பல பொருட்களின் வரியும் அடங்கியுள்ளது. அப்படியெனில் அதன் மீதான வரியை குறைப்பதால், காரின் விலை குறையும்.
குறைந்தால் பழைய வாகனங்களுக்கு பராமரிப்பிற்காக கூடுதல் செலவு செய்வதற்கு பதிலாக புதிய வாகனங்களை வாங்குவார்கள். பழைய வாகனங்கள் விலை குறைவதால், புதியதாக சிலர் கார் வாங்குவார்கள். ஏற்கனவே வசூலிக்கப்பட்ட வரிகள் மூலம் இந்தியா உலகின்னிரண்டாவது பெரிய சாலைகளை கொண்டிருப்பதால், இன்னும் புதிய ரோடுகள் போடப்படுவதால், அந்த கூடுதல் வாகனங்கள் மூலம் மற்ற வருமானங்களும் அதிகரிக்கும்.
இப்போது அமெரிக்க சந்தை மூடப்பட்டால் அதை சமாளிக்க, புதுப்பிக்க, புத்துணர்வு கொடுக்க இந்தியாவின் வரி குறைப்பின் மூலம் மக்களின் செலவினம் அதிகரிக்கும். அதற்காக முக்கிய வரிகளான GST 2.0 என்ற வரி குறைப்பின் மூலம் பெரிய மாற்றத்தை கொண்டுவருகிறது.
மேலும், நம் மக்கள் ஏன் வெளி நாடு செல்கிறார்கள்? கூடுதல் வருமானம் மட்டுமல்ல, அங்கே இருக்கின்ற உயர்தர கட்டமைப்புகள், வாழ்க்கையின் மேம்பட்ட தரம் போன்றவையால். அவை இங்கேயே கிடைத்தால் ஏன் அங்கே செல்ல வேண்டும்?
அதுமட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் இந்தியாவில் இருக்கும் 140 கோடி மக்களால், பெரிய சந்தையாக பார்க்கிறார்கள். ஆனால் நாம் மேலை நாடுகளின் மார்க்கெட் பின்னால் அலைகிறோம்.
நாம் மூலப்பொருட்களையும், உதிரி பாகங்களை மேலை நாடுகளுக்கு அனுப்புகிறோம். அவர்கள் அதை பொருளாக்கி அதிக விலைக்கு நம்மிடம் விற்கிறார்காள். இப்போது அமெரிக்கா கூடுதலாக வரி விதிப்பதால், அந்த பொருட்களின் விலை உயரும். அப்போது நாம் அதே பொருளை விலை குறைவாக, நல்ல தரத்தோடு விற்றால், யார் பொருளை வாங்குவார்கள்.
இது ஏற்கனவே மத்திய அரசின் திட்டத்தில் செயல்படுத்த இருந்தாலும், நாம் இன்னும் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டி இருந்தது. ஆனால் ட்ரம்பரின் மூடிய அமெரிக்க சந்தையால், இந்தியாவின் வருமானம் குறையும் என்பதால், லோக்கல் சந்தைக்கு புத்துணர்வு கொடுக்க போகிறது இந்த வரிகுறைப்பு.
அதன் மூலம் இப்போது இருக்கும் 5%, 12%, 18%, 28% என்ற நான்கு வரி விதிப்புகள், 6% , 18% என்று இரண்டே அடுக்காக மாறுகிறது. அதன் மூலம் விலைவாசிகள் பெருமளவில் குறையும் என்பதால் வாங்கும் திறன் உயரும். அதில் சின் டேக்ஸ் என்பது 40% ஆகும், அது சிகெரெட், மது, சூதாட்டம் போன்ற 7 பொருட்களுக்கு மட்டுமேயானது.
Breakup of Tax Components (FY 2024-25) 22 Lakhs Crores - Thanks to Perplexity
The gross GST revenue collected in FY 2024-25 consisted of the following components:
1) Central Goods and Service Tax (CGST): ₹4,13,776 crore
2)State Goods and Service Tax (SGST): ₹5,16,448 crore
3) Integrated Goods and Service Tax (IGST): ₹11,25,335 crore
அதில் ஸ்லாப் வாரியாக
18% slab: ~70–75% of GST revenue
28% slab: ~13–15%
12% slab: ~5–6%
05% slab: ~6–8%
இதில் எல்லாவற்றையும் குறைக்கு மாட்டார்கள், சிலவற்றை உயர்த்தவும் வாய்ப்புண்டு. அதன் மூலம் ஒரு பக்கம் இழப்பை கூட்ட, மறுபக்கம் வருமானத்தை உயர்த்த, வரி ஏய்ப்பை தடுக்க என்பதன் மூலம் மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுகு வரி விதிப்பார்கள். அதனால் அவர்களின் செலவினம் அதிகரிக்கும்.
அப்போது அமெரிக்க, ஐரோப்பாவில் இருக்கும் தொழில்கள் நசிவடையும், அமெரிக்க கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு லாபம் மட்டுமே நோக்கம் என்பதால், அவை இந்தியாவை நோக்கி. படையெடுப்பார்கள்.
அதனால டாலர் வருமானம் இழப்பு ஏற்படுமே? நாம் டாலருக்கு மாற்றாக ஒரு கரண்சியை நோக்கி செல்கிறோம். இந்திய ரூபாயையே டாலருக்கு மாற்றாக்கலாம்..
இதை தீபாவளி பரிசாக மோடி நமக்கு கொடுக்க அவரது நண்பர் ட்ரம்பின் அழுத்தங்கள் காரணம் என்றால் அதில் தவறில்லை. ஆனால் இதில் மாநில அரசும் முடிவெடுக்கு வேண்டுமே? அதை எப்படி தன்னிச்சையாக மோடி இப்போதே அறிவிக்கலாம்?
இப்போது மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது என்பதால், அதை தடுக்கு முடியாது. மாறாக மாநிலங்கள் தங்கள் வருமானத்தை பெருக்காவிட்டால், மற்ற மானிலங்களோடு போட்டியிட்டு அதனால் நிர்வாகம் செய்ய முடியாது. அதற்கு ஒரு பக்கம் வருமானத்தை கூட்ட வேண்டும், மறுபக்கம், ஊழலை குறைத்தாக வேண்டும்.
எனவே இந்திய சந்தையும், பங்கு மார்க்கெட்டும், தீபாவளி முதல் ஒரு பெரிய உயர்வை சந்திக்கும்
❤️💕💜💖💖❤️💜💖💕
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏