NET தேர்வு குறித்து முழுமையாக அறிய...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:44 PM | Best Blogger Tips

தேர்வுகள் பலவிதம் 2 - NET தேசியத் தகுதித் தேர்வு

முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்கள் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் பணிக்குத் தகுதியடைவதற்கும் (Lectureship), முனைவர் ஆய்வுப் பட்டப் படிப்புக்குத் தகுதியுடையவர், இளநிலை ஆராய்ச்சியாளர் (Junior Research Fellowship) ஆவதற்கும் பல்கலைக் கழக மாணியக்குழுவால் (UGC - University Grants Commission) நடத்தப்படும் தேர்வு NET - National Eligibility Test.
 
கலைப் பிரிவுகளில் முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான தேர்வுகளை பல்கலைக் கழக மாணியக்குழு நடத்துகிறது. அறிவியல் பொறியியல் பிரிவுகளில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான தேர்வை பல்கலைக் கழக மாணியக்குழுவும், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றமும் (CSIR - Council of Scientific and Industrial Research) இணைந்து நடத்துகிறது. 

விரிவுரையாளர் பதவிக்கு மட்டுமான தேர்வை எழுத வயது வரம்பு இல்லை. JRF தேர்வை எழுத பொது பிரிவினருக்கு வயது வரம்பு 28 ஆண்டுகள். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு மேலும் 5 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்ச்சி உண்டு. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் அதற்குரிய சான்றுகளை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். - முழுமையான வழிகாட்டுதலுக்கு http://bit.ly/160cah1

thanks to Kalvi Vikatan's