வேதங்கள் என்றால் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 6:15 PM | Best Blogger Tips

வேதம் என்பது இயற்கையுடன் ஒன்றிய ஒரு விஞ்ஞானம் ஆகும்.வேதத்தை யாரும் உருவாக்கவும் இல்லை. எழுதவும் இல்லை.பண்டைய காலத்தில் ஞானிகளும்,ரிஷிகளும் தவமிருக்கும்பொழுது அவர்கள் வாய்மொழியாக வந்த மந்திரங்களே வேதங்களாக கருதப்படுகின்றன.

இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். அதனால் இவை நான்மறை என்றும் கூறப்படுகிறது.
அவையாவன:
· ரிக் வேதம்
· யசுர் வேதம்
· சாம வேதம்
· அதர்வண வேதம்
என்பனவாகும்.

வேதங்களை ஓதும் போது, இயற்கை முதல் இறைவன் வரை அனைத்துமே ஆட்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த ஓதுதல் சுய நலத்துக்காக செய்யப்படவில்லை. உலக நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் வேதம் ஓதப்பட்டது. அதன் பொருள் அறிந்து அதை ஆராய்ச்சி செய்வது என்பது ஹிந்து மரபில் கிடையாது.வேதம் ஓதுதலும், கட்டுப்பாடான தவ வாழ்கை மேற்கொள்ளுதலும், ஆத்ம ஞானம் தேடுவதற்கு உதவுகிறது.

வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு.
1. "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)
2. பிராமணா எனப்ப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்
3. அரண்யகா எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்
4. உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்).

முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக்குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உண்ர்வதற்குத் ஓதப்படுகிறது.தனி நபராக ஓதாமல் குழுவாக சேர்ந்து ஓதினால நல்லபலன் கிஅடைப்பதை விஞ்ஞானமும் ஒத்துகொள்கிறது.

உபவேதங்கள்;
1.ஆயுர்வேதம்:- ரிக் வேதத்தின் உபவேதம். இது மருந்து, மூலிகை போன்றவற்றைக் குறிப்பிடுகின்றது.
2.தனுர் வேதம்:- யஜøர் வேதத்தின் உபவேதம். இது போர்க்கலையை விவரமாகக் கூறுகின்றது.
3.காந்தர்வ வேதம்:- சாம வேதத்தின் உபவேதம். இது இசை, நடனம், ஆகிய நுண்கலைகளை விளக்குகின்றது.
4.சில்ப வேதம்:- அதர்வண வேதத்தின் உபவேதம். இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
23