கென்ய ஓட்ட பந்தய வீரர் Abel Mutai, எல்லைக் கோட்டை அடைய சில மீட்டர் தூரம்தான் இருந்தது.
ஆனால் குறியீடுகளைப் பார்த்துக் குழம்பிப் போய், இலக்கை அடைந்து விட்டதாக நினைத்து நின்று விட்டார்.
பின்னால் வந்த ஸ்பெயின் நாட்டின் Ivan Fernandez, அதைச் சுதாரித்துக் கொண்டு, Abel ஐ தொடர்ந்து ஓடச் சொல்லி சத்தமிட்டார்.
Abel க்கு ஸ்பானிஷ் மொழி தெரியாததால், அவர் சொன்னது புரியவில்லை.
அதைப் புரிந்து கொண்ட Ivan Fernandez, Mutai ஐ இலக்குக்கு நேராய் உந்தித் தள்ளினார்.
"ஏன் இப்படிச் செய்தீர்கள்?" என்று பத்திரிக்கையாளர்கள் Ivan இடம் கேட்டபோது,
"என்றாவது ஒரு நாள் நாம் ஒருவரை ஒருவர் வெற்றிக்கு நேராய் உந்தித் தள்ளுகிற ஒரு சமுதாயமாக மாறுவோம் என்பதுதான் என் கனவு" என்றார்...!
"ஏன் அந்தக் கென்னியரை ஜெயிக்க விட்டீர்கள்?"
என்று பத்திரிகையாளர் மறுபடியும் கேட்ட போது, "நான் அவரை ஜெயிக்க விடவில்லை,
அவரே வெற்றிக்கு அருகில் வந்து விட்டார்.
இந்தப் பந்தயம் அவருடையது" என்றார்....
"நீங்கள் ஜெயித்திருக்கலாம்.." என்று
பத்திரிகையாளர் மறுபடியும் கேட்ட போது,
அதற்கு Ivan, "அந்த வெற்றியின் சிறப்பு என்னவாக இருக்கும்? இந்தப் பதக்கத்திற்கு என்ன மரியாதை இருக்கும்?
என் தாய் .. எனது குடும்பம் என்ன நினைப்பார்கள்?"
என்றாராம்.
நற்பண்புகள், ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
நாம் நம் குழந்தைகளுக்கு எப்படிப் பட்ட பண்புகளை கற்றுக் கொடுக்கிறோம்?
எந்த அளவுக்கு மற்றவர்களை, நற்பண்புகளால் ஈர்க்கிறோம்?
நம்மில் பலரும், மற்றவர்களின் பலவீனத்தில் உதவி செய்வதை விட, அதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வே எண்ணுகிறோம்.
சுயநலமாய் இருப்பதை விட்டு,ஒருவரை ஒருவர் வெற்றிக்கு நேராய் உந்தித் தள்ளுவோம்.
நாம் எல்லாருமே வெற்றிக்குத் தகுதி ஆனவர்கள்தான்...!
Thanks - Copy from Youtube.com