நடவாவிக் கிணறு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 10:07 | Best Blogger Tips


நடவாவிக் கிணறு என்றால் படிக்கட்டுள்ள கிணறு என்று பொருள்.
காஞ்சிபுரத்திற்கு அருகில் ஐயங்கார் குளம் எனும் திருத்தலத்தில் உள்ள சஞ்சீவிராயர் சுவாமி கோயிலையொட்டி நடவாவிக் கிணறு ஒன்று உள்ளது.
இந்தக் கிணற்றுக்குள் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 16 கால் மண்டபம் உள்ளது. இந்தப் பெரிய கிணற்றில் சித்ரா பௌர்ணமி அன்று ஒருநாள் மட்டும் உள்ளிருக்கும் நீரை முழுவதுமாக வெளியேற்றி 16 கால் மண்டபத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாளை எழுந்தருளுவார்!
மறுநாள் மாலையில் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரையும் அந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்வர். இரண்டு நாட்கள் மட்டும் பூமிக்கு அடியில் கிணற்றுக்குள் சுவாமிகளைத் தரிசிக்கலாம். அதன்பின் கிணற்றில் நீர் ஊற்றுப் பெருக்கெடுத்து மண்டபத்தையும் கிணற்றையும் நிரப்பிவிடும்.
இந்த அபூர்வ காட்சியைத் சுற்றுவட்டாரத்து மக்கள் வந்து தரிசித்து பெருமாளின் திருவருளைப் பெறுகின்றனர்.
 Thanks Web