
இராமநாதபுரத்தில்
சிவபெருமான் வீற்றிருக்கும் புனித
தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை.
இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன்
கோவில் என நம்பப்படுகிறது.
ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள்
அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன்,
சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு
கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த
ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை
அறியலாம்.
சிவபெருமான் வீற்றிருக்கும் புனித
தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை.
இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன்
கோவில் என நம்பப்படுகிறது.
ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள்
அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன்,
சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு
கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த
ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை
அறியலாம்.

சிவபெருமான் பார்வதிதேவிக்கு
வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம்
செய்த இடம் இதுவாகும்.
உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு
உத்திரன் உபதேசம் செய்த இடம்,
ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது.
இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக,
இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.
உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத்தான்
திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள்
மண்டோதரி. இதனால் அவளுக்கு நீண்ட
நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது.
பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும்
மண்டோதரி வழிபட்டாள். அதன்பிறகே
ராவணனை கரம் பிடித்தாள்.
மேலும் ராவணன்– மண்டோதரி திருமணம்
இத்தலத்திலேயே நடைபெற்றது என்று
கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு
முதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது
தேவியருடன் முருகப்பெருமான் நின்ற
கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு
மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு
தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும்
காட்சி தருகிறார்.
ஆலயத்தின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன.
வலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன்
எழிலாக தோற்றம் கொண்டுள்ளது.
இடதுபுறம் உள்ள கோபுரமh.
மொட்டையாக காணப்படுகிறது.
பொதுவாக ஆலயங்களுக்குச்
சென்றால் ஒரு நாள் ஒருமுறை
சென்று வணங்கிவிட்டு வந்து விடுவோம்.
ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும்
சென்று தரிசித்து பலனை அடையும் கோவிலாக
உத்திரகோசமங்கை திருத்தலம் உள்ளது
சிறப்பம்சமாகும்.