கிரகங்கள் படுத்தும் பாடு

மணக்கால் அய்யம்பேட்டை | 2:16 PM | Best Blogger Tips

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை
ஸ்ரீ குரு பகவான் -தொடர்ச்சி
+++++++++++++++++++++++++
1)
குரு பகவான் ஓரு ராசியை கடக்க ஓராண்டு எடுத்துக்கொள்வார்.
2) புதிய ராசியில் நுழைந்த குரு நல்லது,கெட்டதுகளை இரண்டு மாதத்திற்கு முன்பே தருவார்.
3) ஒரு ராசி என்பது 30 டிகிரி வீதம் பணிரெண்டு ராசிக்கு மொத்தம் 360 டிகிரி ஆகும்.
1 டிகிரி என்பது 60 கலைகள்
1 கலை என்பது 60 விகலைகள்
எனவே 360 டிகிரி என்பது 21,600 கலைகள் ஆகும்.
ஒரு ராசி என்பது 21/4 நட்சத்திரம் கொண்டது.அதாவது ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதம் வீதம் மொத்தம் 9 பாதங்களை கொண்டது.
உதாரணமாக மேஷ ராசி எனில்
அசுபதி நான்கு பாதம்
பரணி நான்கு பாதம்
கார்த்திகை ஒரு பாதம் மட்டும்
எனவே ஒரு ராசி என்பது 1800 கலைகள்
எனவே ஒரு நட்சத்திரத்தின் ஒரு பாதத்தை கடக்க 3 டிகிரி 20 கலைகள் தூரம் ஒரு கிரகம் கடக்க வேண்டும்.
ஒரு முழுநட்சத்திரத்தை கடக்க
13
டிகிரி 20 கலைகள் ஆகும்.
மேற்கண்ட கணித முறையை தெரிந்தால்தான் குருவானவர் ஒரு ராசியை கடக்க ஒரு ஆண்டை எடுத்துக்கொள்வதால் ஓரு நாளைக்கு எவ்வளவு தூரம் கடக்கிறது போன்ற விஷய ஞானத்தை ஆரம்ப நிலை ஜோதிடர்களால் புரிந்து கொள்ள முடியும் என்பதற்காகவே விளக்கினேன்.
எனவே குரு பகவான் ஒரு நாளைக்கு 6 கலைகள் கடப்பர் என்பதை எளிமையாக கணக்கிட்டு கொள்வீர்கள்.
ஒரு நட்சத்திர பாதம் கடக்க
1
மாதம் 10 நாள் 33 நாழிகை 20 வினாடி ஆகும்.
4 ) குரு பகவான் நமக்கு பேரின்ப நிலையை நமக்கு அளிப்பவர்.
5) குரு பார்வை
*****************

குருவின் பார்வை என்பது 5,7,9 ஆகும்.
இதில் திருக் பலம்
5-
ம் பார்வை அரை பலம்
9-
ம் பார்வை முக்கால் பலம்
குருவானவர் சனியை 5,9 ம் பார்வை பார்ப்பது நல்லது.ஆனால்
7-
ம் பார்வை பார்க்காமல் இருப்பது நல்லது.அப்படி பார்க்கும் போது குரு பகவான் சனியின் கட்டுபாட்டில் வந்துவிடுவார்.ஆனால் சனியானது சுப தன்மை பெற்று விடும்.அந்த நேரத்தில் குரு தசை அல்லது குரு புத்தி நடக்க கூடாது.ஆனால் சனி தசை அல்லது புத்தி நடந்தால் பலன் கிடைக்கும்.
6 ) குருவானவர் சூரியனுக்கு முன்,பின் 15 பாகைக்குள்(டிகிரி) அஸ்தமனம் பெறுவார்.
7) குருவானவர் நைசார்கிக பலத்தில் 5-மிடம் பெறுவார்.
8) பகலில் பிறந்தவர்களூக்கு குருவின் கால பலன் மிகுதி
வக்ர கதி
+++++++++++
9)
குரு,செவ்வாய்,சனி போன்ற கிரகங்களுக்குஎப்பொழுது 5-ல் சூரியன் வரும்போது வக்ரகதி ஏற்படும்.
7-
ல் வரும்போது அதி வக்ரம் ஏற்படும்.
9-
ம் இடத்தில் வரும்போது வக்ரகதி நிவர்த்தியடைந்து நேர்கதி ஏற்படும்.பொதுவாக 130 டிகிரி-245 டிகிரி வரை
10) குரு சண்டாள யோகம்
+++++++++++++++++++++
குருவுடன் ராகு சேர்ந்து இருப்பின் மேற்கண்ட அமைப்பு உண்டாகிறது.
இதன் பலன் தெய்வ நம்பிக்கை இருக்காது.
11)
"
வல்லரவு தனித்து நின்று மறையவனோடு இசை ஞானி மறுவக்காணில் எல்லையில்லா நிதிக்கு இறைவன் இவன் என்று இயம்புவதற்கு ஏதுவாய் இருப்பான் போலும்"
என ராவன காவிய பாடல் தெரிவிக்கிறது.
பலன்;- குருவுடன் ஞானகாரகன் கேது சேர்ந்திருந்து அதற்கு ஏழில் ராகு தனித்திருந்தால் எல்லையில்லா நிதி உடையவன்
தொடரும்.... 
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd (Teacher)
Email: masterastroravi@gmail.com
Cell;9715189647

செல் ; 740 257 08 99
Om sakthi jothida Nillam(
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
Karambakkudy.
Pudukkottai District.
தங்களுடைய ஜாதகம் தொடர்பான விவரங்களை விரிவாக தொலைபேசியிலே பெற மேற்கண்ட அலைபேசியில் தொடர்புகொள்ளவும்.எனது வாட்ஸ்அப் 97 151 89 647 க்கு பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை மெஸ்ஸேஸ் செய்யவும்.கட்டணம் உண்டு.
நன்றி,வாழ்க நிறைவுடன்.