ஆணிவேர் அசைக்கும்.....ஆலம் விழுதுகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:10 | Best Blogger Tips
ஆணிவேர் அசைக்கும்.....ஆலம் விழுதுகள்

காதல் என்பது சொல்லா....?  உணர்வா...இல்லை ஆசையா?
முதலில் எது காதல் இங்கு,,..??..........தெளிவில்லாமல் குழம்புவது இளமையா?..இல்லை முதுமையா..?

என்ன நடக்கிறது இங்கு..???...காதல் எனும் பெயரில் நடந்த ஜோடிச் சாவுகள் பழைய கதையாகி....நாகரீகம் வளர்ந்து

குடும்பம் ...தெரு .....ஏரியாக்கள் தாண்டி ..ஊர் எரித்து காவு கேட்கிறது..இப்போதெல்லாம்......

பலி ஆடு ஆகிறது பச்சிளங்குருத்துகள்.......

இதில் பிரபலமானவர்கள் பக்கம் அம்பலம் ஏறுகிறது அவமானம்......

நடுத்தரவர்க்கம்..தலை முழுகுவாதாய் சொல்லி.....வளைகாப்பு நடத்தி இணந்து விடுகிறது

பால் மணம் மாறாத சின்ன சின்ன குழந்தைகள்...அடம் பிடித்து பொம்மை வாங்குவது போல் இன்று ..பெற்றோரிடம் போய் கேட்கிறது

வாழ்க்கையை

வாங்கித் தருகிறாயா.?//..இல்லை நான் ஓடிப் போகவா என்று....???

18 வயதானால் எல்லாமும் தெரிந்து விடுகிறதா...????

நேற்று வரை ஊசி கோர்க்க தெரியாதவள்...ஓடிப் போகிறாள் காதலனுடன்...ஊர் விட்டு ஊர் போய் தாம்பத்யம் தைக்க......

ஓட்டு போட வயது நிர்ணயித்த சட்டம் ..அவள் ஓடிப் போகவும்
வழி வகுக்கிறதா..??

கிளிப்பிளையாய் வசியம் மேலிட கூண்டில் ஏறி 
சொல்கிறது..சிறு பெண்........தாய் தந்தை வேண்டாம் என

இது வயதின் கோளாறா....இல்லை வாலிப கோளாறா

பொத்தி பொத்தி பாதுகாக்கும் பெற்றவர்கள்

எந்த புள்ளியில் தவறுகிறார்கள்..அந்த குருத்துகளை பாதுகாக்க

தன்மகள் என்ன செய்கிறாள்..என்ன நினைக்கிறாள்....யாருடன் சிநேகம் கொள்கிறாள்..என்றெல்லாம் பார்ப்பதை தனிமனித சுதந்திரத் தலையீடாய் நினைக்கிறதா.........வளர்ந்து வரும் கலாச்சாரம்

தனித் தனி அறைகள்.....வளரும் நாகரீக வசதிகள்.....கைநிறைய பணங்கள்...கஷ்டப்படாத சூழல்கள்...இம் மென முன் ...தேடல் இல்லாமல் நிறைவேற்றப்படும் தேவைகள்...இவை எல்லாமே இளைய தலைமுறைகளிடம் ...அறிவில் ஆர்வம் கொண்டு வருதே தவிர...மனதில் முதிர்ச்சியை கொண்டு வரவில்லை

பெற்றோரும் இதை கவனிக்கும் நிலையில் இல்லை......பணம் ..பொருள் ..பதவி ..புகழ் தேடி...ஓடி ஒடி...அலையும்.....தாய் தகப்பன்கள்...குழந்தைகளின் மனம் தேடி பேச நேரம் அமைவதில்லை

அறிமுகம் இல்லாத யாரோ ஒருவன..அன்பு ...என் உயிர் நீ ..என..காதல்...எனும் பெயரில் செய்யும்  வாலிப வசியம் வெகு வேகமாக
வேலை செய்கிறது ..எதையும் தூக்கி எறியும் பிடிவாத குழந்தைச் துணிச்சல் தருகிறது

பாளை விரிக்காத  தென்னைகள் ஓலையாகும் முன்னரே சருகாகி உதிர்கின்றனர்.......

இதில் அநாகரீகமான அரசியல் தலையீடுகள் வேறு சாதீய வெறியாய் 
..கூத்தாடிக் கோமாளிகள்

ரயிலை தன் மீது ஏற்றி தற்கொலை செய்து கொண்டான் அவன்...தினம் தினம் செத்து பிழைக்கிறாள்  இவர்களின் கையில் சிக்கிய பெண்

அன்றெல்லாம்...பெண் பருவம் எய்தினால்...தாயின் மடியில் நெருப்பு கட்டி கண்காணிக்கப் படுவாள்...பருவம் எய்திய பின் கற்றுக் கொடுக்கப் படும்...நிறப்பது எப்படி?..நடப்பது எப்படி...அமர்வது எப்படி...?..முக்கியமாக சிரிப்பது எப்படி என்று கூட

இன்றோ அவள் பருவம் வருவதே வெளி உலகுக்கு மறைக்கப் படுகிறது..தாயவளால் மறக்கப் படுகிறது

ஆண் பிள்ளைத் துணிச்சல் வேண்டுமாம்..ஆதலால்..அவள் சரிசமமாய்
நடத்தவேண்டும் என அவளுள் இருக்கும் பெண்மை அடக்கி வளர்க ,,,எவனோ வந்து தூண்டி விடுகிறான் ஹார்மோன் செயல்பாடுகளை

ஏன் அன்று வளர்ந்த பெண்களில் துணிச்சல்கள் இல்லையா...???

குழந்தையாவே வளரும் அவள்......காதலன் என வரும் போது முரட்டுக் குழந்தையாகிறாள்...கவனம் வேண்டும் பெற்றோர்களே

யாரை வாசல் வரை நிறுத்த வேண்டும் ..யாரை வீட்டுக்குள் சேர்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரிய வேண்டும் முதலில்

நீங்கள் தப்பானவன் என்று தெரிந்த பின்னும் எதோ ஒரு தேவைக்கு ஒரடி எடுத்து வைத்தால்..உங்கள் செல்ல மகள் 2 அடி எடுத்து வைப்பாள் ..வெளி உலகு தெரியாமல் ஏமாந்து போய்

உங்கள் குழந்தைக்கு 

எவரையும் மிஞ்சும் கல்வி கொடுக்க வேண்டாம்

எவரையும் மிஞ்சும் செல்வம் குவிக்க வேண்டாம்

எவரையும் மிஞ்சும் ..அழகும்..புகழும் கொடுக்க வேண்டாம்

எல்லோரையும் மிஞ்சும் மனப் பக்குவத்தை கொடுங்கள்

கஷ்டங்கள் விதைத்து வெற்றி அறுவடை செய்ய கற்றுத் தாருங்கள்

தன் சுயநலம் . ..தன் தேவைகள்...எனத் தன்னை தானே குறுக்கிக்கொண்டு விதை விட்டு பழுக்கும் போன்சாய் மரங்களாய் அல்லாது

வயதுவேர் தாங்கி ஓய்ந்தாலும்.............பாசவிழுது பரப்பி நமைத் தாங்கும்.....ஆலம் விதைகளாய் அவர்களை வளருங்கள்...............

பழமை திரும்பினும்
மானங்கள் காக்கட்டும் மானுடங்கள்

நன்றி  Sundari Kathir