ஓட்ஸ் சூப்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:39 PM | Best Blogger Tips



காலை உணவு என்பது மிகவும் இன்றிமையாதது. அதிலும் அந்த காலை உணவானது மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தால், அந்நாள் முழுவதும் உடல் நன்கு சுறுசுறுப்போடும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

அந்த வகையில் மிகவும் ஆரோக்கியமானது தான் ஓட்ஸ் சூப். இந்த சூப் பேச்சுலர்கள் எளிதில் செய்து சாப்பிடக்கூடியதாக இருக்கும். மேலும் இதனை செய்வதும் மிகவும் எளிமையானது. அதுமட்டுமல்லாமல், இந்த சூப் சாப்பிட்டால், உடல் எடையால் அவஸ்தைப்படுபவர்களின் உடல் பருமானது குறையும்.

சரி, இப்போது அந்த ஓட்ஸ் சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 1 கப்
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 1 பல் (தட்டியது)
மிளகு தூள் - 1 சிட்டிகை
பால் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து, நன்கு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

பின்பு ஓட்ஸ் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, ஓட்ஸ் மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.

ஓட்ஸானது மென்மையானதும், அதில் பால் மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

கலவையானது நன்கு கொதித்ததும், தீயை குறைவில் வைத்து, மீண்டும் 3 நிமிடம் கிளறி விட்டு வேக வைத்து, இறக்க வேண்டும்.

இப்போது ஆரோக்கியமான ஓட்ஸ் சூப் ரெடி!!!
Via FB ஆரோக்கியமான வாழ்வு