பேல்பூரி !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:32 | Best Blogger Tips
How Prepare Pani Puri

வட இந்திய உணவுகளின் சுவை என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் பானி பூனி என்றால் பிடிக்காத குழந்தைகளே இல்லை. பானி பூனி சாப்பிட வேண்டுமென்றால் கடைக்கு தான் இதுவரை சென்றிருந்தோம். ஆனால் இப்போது பானி பூரியை வீட்டிலேயே செய்யலாம். அது எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:

பூரிக்கு:
மைதா - 1 கப்
ரவை - 50 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பானிக்கு:
புதினா - 1/2 கட்டு
கொத்தமல்லி தழை - 1/2 கட்டு
பச்சை மிளகாய் - 4
வெல்லம்- 50 கிராம்
புளி - 50 கிராம்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
பூரிக்குள் வைக்க:
உருளைக்கிழங்கு - 2
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைக் கிழங்கை வேக வைத்து, நன்கு உதிர்த்துக் கொள்ளவும். பின் அத்துடன் சீரகத்தூள், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு கலந்து,
மசாலா செய்து வைத்துக் கொள்ளவும். பின் பூரி செய்வதற்கு மைதா, ரவை, தண்ணீர், உப்பு போன்றவற்றைப் போட்டு மாவை பிசைந்து கொண்டு அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சிறிது நேரம் ஊற வைக்கவும்.
சற்று நேரம் கழித்து அந்த உருண்டைகளை தேய்த்து வாணலியில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் தேய்த்த உருண்டைகளை சிறு பூரிகளாக பொரிக்க வேண்டும். பூரியானது சிறிதாக இருக்க வேண்டும்.
பிறகு புளியை நீரில் ஊற வைத்து, நன்கு பிசைந்து நீரை வடிகட்டிக் கொள்ளவும். வெல்லத்தையும் நீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
பின் புதினா, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை நன்கு கழுவி அதை மிக்ஸியில் போட்டு, அதோடு
பச்சை மிளகாய், சீரகத்தூள், உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த அந்த கலவையோடு புளி நீரையும், வெல்ல நீரையும் விட்டு கலந்து கொள்ளவும்.
இப்போது பூரியின் நடுவில் ஒரு ஓட்டை போட்டு, அதில் அந்த உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து பின் அந்த புளி நீரை உள்ளே ஊற்றி சாப்பிட வேண்டும். இப்போது சுவையான பானி பூரி ரெடி!!!

Thanks  & Copy from Thatstamil.com