எல்லோரும் இந்நாட்டு ‘இன்ஜினியர்’!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:41 | Best Blogger Tips



இப்போது இருக்கும் மாணவர்கள் அனைவருமே நல்ல உயர்ந்த மனப்போக்கில் உள்ளனர், கலாச்சாரம், வாழும் இடம், கல்வி என அனைத்துமே இப்போது உயரந்துகொண்டே போவது மகிழ்ச்சி தரும் அம்சங்களாகும். கல்வி என்று பார்த்தால் 70% பேர் உயர் படிப்பையே பயில விரும்புகின்றனர்.. மருத்துவம் பொறியியல் போன்ற உயர் படிப்புக்களில் சேரவே அனைத்துத்தரப்பு மாணவர்களும் விரும்புகின்றனர்.

மருத்துவம் சேர அதிக மதிப்பெண் தேவை, ஆனால் பொறியியல் படிப்புக்கு அப்படி இல்லை, மருத்துவம் பொறியியல் படிப்பு இரண்டையுமே கிட்ட த்தட்ட சமமாகத் தான் சமூகத்தில் பலர் கருதுகின்றனர், அது எந்த அளவிற்கு உண்மை எனவும், இன்றைய மாணவர்களின் பொறியியல் படிப்பின் மீது உள்ள கனவு எந்த அளவிற்கு சாத்தியம் எனவும் பார்ப்போம்.

கடந்த 5 ஆண்டுக்கு முன்பு பொறியியல் படிப்புக்கு என நுழைவுத்தேர்வு முறை இருந்தது அதில் பலர் நுழைவுத்தேர்வு எழுதினாலும் சிலரே தேர்ச்சி பெற்று பொறியியல் படிப்பில் சேருவர். அதாவது நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்களும், நன்கு படித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் உயர்வகுப்பைச் சேர்ந்தவர்களுமே நுழைவுத்தேர்வுக்கான சிறப்பு வகுப்புகளில் சேர்ந்து பயின்று வெற்றி பெற்று, பொறியியல் படிப்பில் சேருவார்கள். அப்போது பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 300குள் தான் இருக்கும்.

இந்த நிலை மாறி, கிராமப்புற ஏழைகள் உள்பட அனைத்துத் தரப்பினருக்கும் பொறியியல் சீட் கிடைக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் அது பொறியியல் கல்வியை பெரியளவில் வியாபாரமாக்கி, மாணவர்களுக்கு உரிய கல்வியை வழங்காமல் இருககிறது.

2012 டிசம்பர் வரை 570 பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளன. 12ஆம் வகுப்பு மதிப்பெண் வழியாக நேரடியாக பொறியியல் கல்லூரியில் சேரலாம் என்பதால் எல்லோரும் அதிலேயே கவனம் செலுத்துகின்றனர். முன்புபோல, 10ஆம் வகுப்பு முடித்தவுடன் polytechnic சேர அவ்வளவாக மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை,

2007 க்கு பின் 70% பேர் பொறியியல் படிப்பில் தான் சேருகின்றனர்,அதற்கு தகுந்தாற்போல் கல்லூரிகளின் எண்ணிக்கையும் சரி விகிதத்தில் ஏறு முகமாகவே உள்ளது. விளைவு , இப்போது பொறியியலில் படிப்புக்கு Anna university கலந்தாய்வுக்கு விண்ணபிக்கும் அனைவருக்கும் பொறியியல் படிக்க இடம் கிடைக்கிறது, (40% மேல் மதிப்பெண் வாங்கினாலே தமிழகத்தில் ஏதேனும் ஒரு பொறியியல் கல்லூரியில் அவர்களுகென வாசல் திறந்தே இருக்கும்), ஆண்டுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் சேருகின்றனர் அதேநேரம் மறுபுறம் 4 ஆண்டை நிறைவு செய்து வெளியேறுகின்றனர்,

இந்த 4 ஆண்டுக்குள் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைவே, அவ்வாறு தேர்ச்சி பெற்றும் பல ஆயிரம் மாணவர்கள் பொறியாளர் கனவுடன் நினைத்து சேர்ந்த பொறியாளர் வேலையோ கிடைப்பது “தங்கப் புதையல்” கிடைப்பது போலத்தான் இருக்கிறது இன்றய பொறியியல் படிப்பை முடித்த மாணவர்களின் சூழல்!!

முக்கியமாக கிரமப்புரத்து மாணவர்கள் பலர் சென்னை போன்ற HI-Fi மாநகரங்களில் சேர கல்லூரிகளை பற்றிய போதுமான அளவு விசாரிக்காமல் சென்னை என்றால் அனைத்து கல்லூரிகலுமே hifi ஆகா இருக்கும் என்று தான் சொந்த ஊரில் சிறந்த பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் கண்டுக்கொள்ளாமல் சென்னை வருகின்றனர்.

இதில் பலருக்கும் நினைத்தப்படி கல்லூரிகள் அமையாமல் ஏமாற்றமும் படிப்பில் நாட்டம் இல்லாமலும் போகின்றனர், இது போன்ற மாணவர்கள் தாங்கள் உடுத்தும் துணி முதல் சாப்பிடும் உணவு வரை நன்கு விசாரிக்கும் இவர்கள் வாழ்க்கையை மாற்றும் கல்லூரிக்ளை நன்கு சிந்தித்து தான் கல்லுரிகளை தேர்வு செய்யவேண்டும்.

தங்கள் சொந்த ஊரில் இருக்கும் நல்ல கல்லுரிகளை விட்டுவிட்டு அதைவிட தரம் குறைந்த Hi-Fi மாநகரங்களில் உள்ள கல்லூரியை எதையும் பற்றி யோசிக்காமல் நாடி செல்வது மிக வும் தவறு.

இவர்களில் பெரும்பா லானோர் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் வங்கியில் தரும் கல்விக்கடன் மூலமாகத்தான் பயில்கின்றனர். படித்து முடித்த பின் வேலை இல்லாமலும் படிப்புக்குத் தகுந்த சரியான சம்பளம் இல்லாமலும்தான் உள்ளனர்.

வங்கி க்கடனோ வட்டி குட்டி போட்டு வாங்கியதை விட இரு மடங்காக(12.5% வட்டி) உயர்ந்த வண்ணமாகத் தான் உள்ளது.

படித்த மாணவர்களுக்கோ 4 ஆண்டு படிப்பை முடித்து ஒரு வேளையில் அமர 6 - 12 மாதங்கள் ஆகிறது.

கிராமப்புற-ஒடுக்கப்பட்ட- ஏழை மாணவர்கள் எளிதாகப் பொறியியல் பட்டதாரிகள் ஆகவேண்டும் என்ற நோக்கத்தில்தான் நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, +2 மதிப்பெண் அடிப்படையில் சீட் வழங்கப்படுகிறது. ஆனால், +2 படிக்கும் எல்லோருமே இன்ஜினியர் ஆகவேண்டும் என்ற கனவு காண்பதால் புற்றீசல் போல பொறியியல் கல்லூரிகள் பெருகின. மற்ற படிப்புகளை யாரும் தேர்ந்தெடுக்க முன்வருவதில்லை.

ஒரு நேரத்தில், பொறியியல் படிப்பு மருத்துவத்துக்கு நிகராகக் கருதப்பட்டது. இன்று அந்த நிலை இல்லை. ஒருபுறம், குறிப்பிட்ட சில பொறியியல் பிரிவுகளுக்கு கடும் போட்டி. இன்னொரு புறம், பொறியியல் கல்லூரிகளில் பல பிரிவுகள் காற்ற வாங்குகின்றன. ஏதோ படித்துவிட்டு வெளியே வரும் மாணவர்களின் வேலைவாய்ப்பு தற்போது இருண்டு உள்ளது, நன்கு படிக்கும் மாணவர்கள் 30% பேரே அவரவர் சுய-அறிவு திறமைகள் எக்ஸ்ட்ரா-கோர்ஸ் படித்தும் வேலையில் சேருகின்றனர், அவ்வாறு சேரும்போது சாதாரண நடுத்தர மாணவர்களுக்கோ வேலையில் போட்டா போட்டி தான்.

அதிலும் சில Software companyல் 80% மேல் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே வேலை வாய்ப்புக்காக முதற்கட்ட interview நடக்கிறது என்பது வேதனைக்குறியது.

அப்படி என்றால் ஆண்டுத்தோறும் லட்சம் லட்சமாக பணம் வங்கிக்கடன் மூலமாக செலவழித்த மாணவர்களின் கதியோ இரண்டாம்ரக company தான்!!! இல்லையென்றால் வாங்கிய கடனை அடைப்பதற்கும், குடும்பம், நண்பர்களின் கேள்விக்கும் பயந்தோ படித்த படிப்பிற்கு சம்மந்தம் இல்லாத ஒரு வேலையை மனத்திற்கு பிடிக்காமல் மனம்நொந்து வேலை புரிகின்றனர்.

அனைவரும் உயர்ந்த வேலையை மட்டும் நோக்கினால் bottom line job ல் சேர ஆள் இல்லாமல் போகிறது.

பொறியியல் படிப்பு படித்தால் நல்ல தரம் வாய்ந்த கல்லூரி மற்றும் தனக்கென பொருந்தும் துறையை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.. இவை இரண்டுமே இல்லாத பட்சத்தில் இதர இளைநிலை படிப்புகள் பல சிறந்தவைகள் உள்ளன, அதை தேர்ந்தெடுத் வாழ்வில் முன்னேறலாம்.

பொறியியல் படிக்க ஆண்டு செலவு 2.5 - 6 லட்சம் வரை ஆகிறது, அப்படி லட்சத்தை வாரி இறைத்து படித்தாலும் வேலைவாய்ப்பும் அவ்வளவு எளிது அல்ல..

எனவே 12 ஆம் வகுப்பு முடித்ததும் அடுத்து படிப்பு பொறியியல் என்ற மனப்போக்குடன் இல்லாமல் மற்ற சிறந்த படிப்புகளையும் தேர்வு செய்யுங்கள். முடிந்தால் 12 ஆம் வகுப்பு , மற்ற சாதாரண இளைநிலை படிப்புகளையும் முடித்து விட்டு அரசு வேலைத் தேர்வுகள், வங்கித் தேர்வுகள் முதலிய தேர்விற்கு படித்து நல்ல வேலையில் அமரலாம் என்பது பொறியியல் படித்த என் கருத்து..

எழுதியவர்- திருவாரூர் மணி

Via FB ஆரோக்கியமான வாழ்வு