- கொள்ளுக்காய்
அறிகுறிகள்:
- வாய்புண்.
- கொள்ளுக்காய் வேர்.
கொள்ளுக்காய் வேரை கொதிக்கவைத்து ஆறிய பின் வாய்கொப்பளித்து வந்தால் வாய்புண் குறையும்.
-----------------------------------------------------------------------------------------------------------------
நெல்லி இலைகளை அவித்த நீரீனால் அடிக்கடி வாய் கொப்பளித்துவர வாய்ப்புண்கள்
ஆறிவிடும். நெல்லிச் சாறையும், தேனையும் சமமாகக் கலந்து, மூச்சுத் திணறல்,
நீண்ட கால விக்கல் நோய் முதலியவற்றிற்குக் கொடுத்து வரலாம். சில
மருத்துவர்ள் இதோடு திப்பிலி சூரணத்தையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.
வாய்ப்புண் போக, மணத்தக்காளி இலைகளை நிறைவாய் போட்டு மென்று, சற்று நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கவும். இவ்வாறு முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம்.
வாயில் வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும். வாய்ப்புண் அதிகமாகி விட்டால் காரத்தை அடியோடு நிறுத்த வேண்டும். மாசிக் காயை உடைத்து அதன் தோலை மாத்திரம் வாயில் போட்டு அப்படியே அடக்கிக் கொள்ளுங்கள். ஊறிவரும் நீரை விழுங்குங்கள். வாய்ப்புண் சரியாகிவிடும்.
வாயில் புண் இருந்தால், அகத்திக்கீரையைச் சமைத்துப் சாப்பிடவும். வாய்ப்புண்ணும் நாக்குப் புண்ணும் குணமாகும். புண் அதிகமாக இருந்தால், புண் மீது பசு வெண்ணையைத் தடவுங்கள். குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால், மாசிக்காயை பாலில் கரைத்து தேனில் குழைத்து நாக்கில் தடவ குணமாகும்.
தீராத வாய்ப்புண்ணிற்கு கடுக்காயை உடைத்து ஒரு துண்டை வாயில் அடக்கி வைத்திருக்கவும். சாறு தொண்டையில் போகப்போக உடனடியாக குணம் கிடைக்கும். பச்சரிசி, பயத்தம்பருபபு 1 ஸ்பூன் வெந்தயம், முழு பூண்டு 1 உரித்துப்போட்டு குக்காரில் வைத்து வெந்தவுடன், அத்துடன் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறி வாய்ப்புண்ணும் நீங்கும். மணத்தக்காளிக் கீரையையும், அகத்திக் கீரையையும் பொரியலாகச் செய்து, தேங்காய்ப் பருப்பு சேர்த்து சாப்பிட்டால், வாய்புண் இரண்டே நாட்களில் குணமாகும்.

----------------------------------------------------------------------------------------------------------
வாய் புண் குறைய - அரசமரபாட்டை மற்றும் இலை
அறிகுறிகள்:
- உணவை உண்ணும் போது எரிச்சல்
- வாய் மற்றும் உதட்டில் புண்
- குடிநீர்
- அரசமர பட்டை
அரசம் பட்டையை வெந்நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி வடிகட்டி தினமும் காலை மாலை இரண்டு நேரமும் வாய் கொப்பளிக்கவும்
------------------------------------------------------------------------------------------------------
உதடு சம்பந்தமான நோய் - அத்திக்காய்
அறிகுறிகள்:
- தீராத வாய்ப்புண்
- வாயை மெல்லும்போது வலிக்கும்.
- உதட்டின் வீக்கம்.
- உலர்ந்த உதடு.
- அத்திக்காய்
அத்திக்காயை தினமும் 3 வேளை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் மற்றும் உதடு புண் குணமாகும்.
-----------------------------------------------------------------------------------------------------------
நாக்கில் புண் - அகத்தி இலை
அறிகுறிகள்:
- தீராத வாய்ப்புண்
- வாயை மெல்லும்போது வலிக்கும்.
- சாப்பிடும் போது வாய் வலிக்கும்.
- அகத்தி இலை
- தண்ணீர்
- அகத்தி இலையை முதலில் அலச வேண்டும்.
- 2 கப் தண்ணீருடன் அகத்தி இலையை கொதிக்க வைக்க வேண்டும்.
- கொதிக்க வைத்த சாரை வடிகட்ட வேண்டும்.
- அந்த சாரை 3 வேளை சாப்பிட்டு வந்தால் நாக்கில் புண் குணமாகும்.
வாய்ப்புண் - தேன் , தேங்காய்ப்பால்
அறிகுறிகள்:
- வாய் எரிச்சல்.
- வாய் வறண்டு போதல்.
- தேன்
- தேங்காய்ப்பால்
செய்முறை:
தேனுடன் தேங்காய்ப்பால் கலந்து குடித்தால் வாய்ப்புண் குணமாகும்.
--------------------------------------------------------------------------------------------------------
வாய்ப்புண் போக - கசகசா , பசும்பால்
அறிகுறிகள்:
- வாய் காந்துதல்
- கசகசா
- பசும்பால்
கசகசாவை தூளாக்கி பசும்பாலில் கலந்து இரவு குடிக்கவும்.
------------------------------------------------------------------------------------------------------------
வாய்ப்புண்ணிலிருந்து விடுபட - பப்பாளி
அறிகுறிகள்:
- வாய் புண்.
- வாய் எரிச்சல்.
- பப்பாளி
பப்பாளிப் பழம் சாப்பிட வாய்ப்புண் ஆறிவிடும்.
------------------------------------------------------------------------------------------------------------
வாய்ப் புண் குறைய - ரோஜா இதழ்கள்
அறிகுறிகள் :
- வாய்ப்புண்.
- ரோஜா இதழ்கள்.
ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குறையும்.
-----------------
நாக்கு புண் குறைய- நெல்லி , தேன்
அறிகுறிகள் :
- நாக்கு புண்.
- நெல்லி வேர்பட்டை
- தேன்
நெல்லி வேர்பட்டை பொடி செய்து தேனில் கலந்து தடவ நாக்கு புண் குறையும்.
-----------------------
வாய்ப்புண் குறைய- பெருஞ்சீரகம்
அறிகுறிகள்:
- வாய்ப்புண்.
- பெருஞ்சீரகம்
பெருஞ்சீரகம் தினமும் சாப்பிட வாய்ப்புண் குறையும்.
------------------------------------------------------------------------------
வாய் நாற்றம் குணமாக- ரோஜா இதழ்கள் , கரும்புச் சாறு
அறிகுறிகள்:
- வாய் நாற்றம்.
- கரும்புச் சாறு
- ரோஜா இதழ்கள்
கரும்புச் சாற்றில் ரோஜா இதழ்களை அரைத்து சாப்பிட்டு வர வாய் நாற்றம் குணமாகும்.
--------------------
வாய்ப்புண் குணமாக - அகத்திக் கீரை , மணத்தக்காளிக் கீரை
அறிகுறிகள்:
- வாய்ப்புண்
- அகத்திக் கீரை
- மணத்தக்காளிக் கீரை
அகத்திக் கீரை மற்றும் மணத்தக்காளிக் கீரையை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.
------------------------------------
வாய்ப்புண் குணமாக - மணத்தக்காளி
அறிகுறிகள்:
- வாய்ப்புண்.
- வாய் எரிச்சல்.
- மணத்தக்காளி
மணத்தக்காளியை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.
--------------------------
வாய்ப்புண் மறைய - கொப்பரை தேங்காய் , கசகசா,பால்
அறிகுறிகள்:
- வாய் வறண்டு போதல்.
- வாய்ப்புண்.
- வாய் எரிச்சல்.
- கொப்பரை தேங்காய்
- கசகசா
- பால்
ஒரு துண்டு கொப்பரை தேங்காய், ஒரு ஸ்பூன் கசகசா, இரண்டையும் ஒன்றாக சேர்த்தரைத்து, ஒரு தம்ளர் பசும்பாலில் அதை போட்டுக் கொதிக்க வைத்து ஆறின பிறகு தடவி வந்தால் வாய்ப்புண் மறைந்து போகும்.
Via மூலிகை மருத்துவம்.