தேவையானவை:
பாசிப் பருப்பு ..... 1 /2 கிலோ
சீனி......................
முந்திரி..................
ஏலக்காய்..................
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து, பாசிப்பருப்பை லேசாக பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். அதிலேயே ஏலக்காயையும் போட்டு வறுக்கவும். முந்திரியை 4-5 துண்டுகளாக நறுக்கி, அதனை கொஞ்சம் நெய் விட்டு வறுக்கவும். பாசிப்பருப்பை அரவை மில்லில் நைசாக அரைக்கவும். இல்லையெனில் பாசிப்பருப்பை மிக்சியில் போட்டு அரைத்து சலித்து எடுக்கவும். சீனியையும் மிக்சியில் நைசாக அரைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த மாவு, சீனித்தூள் + முந்திரி போட்டு ஒன்றாக கலக்கவும். அடுப்பில் நெய்யை சூடு பண்ணி, கை பொறுக்கும் பதத்தில் இரண்டு கரண்டி நெய்யின மாவில் கொட்டி, அந்த இடத்தை மட்டும் கலக்கி, சூடு ஆறு முன்னே., அதனை உருண்டையாகப் பிடிக்கவும்.
நெய் ஆறிவிட்டால், உருண்டை பிடிக்க முடியாது. ஆனால் தூளாக இருந்தாலும், தூள் டக்கர்தான் தூள்.. சுவைன்னா அப்படி ஒரு சுவை..!
Via -நலம், நலம் அறிய ஆவல்.